Tuesday, 3 July 2012

பூலோகத்தில் நிமிர்ந்து நிற்கும் ஜெயம்ரவி!


ஆதிபகவன் படத்தில் இன்னும் நடித்து முடிக்காத ஜெயம்ரவி, அந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் இடம்பெற இருக்கும் சண்டைக்காட்சியில் நடிக்க நீத்து சந்திராவுக்காக காத்திருக்கிறார்.
முதன் முறையாக இந்தப்படத்தில் இரட்டை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் ஜெயம்ரவி, ஆகையால் தான் படம் தாமதமாகிறது என்று சொல்லப்பட்டது. ஆனால் தற்போது ஆதிபகவான் நிற்பதற்கு கதாநாயகி மீது பழியைப் போட்டிருக்கிறார்கள். என்றாலும் ஆதிபகவானில் தாடி வைத்து நடிக்கும் கதாபாத்திரத்தின் எல்லா காட்சிகளும் எடுத்து முடிக்கப்பட்டு விட்டதால் ஜெயம்ரவி தற்போது மொழு மொழுவென்று முகத்தை ஷேவ் செய்துவிட்டார்!

ஜெயம்ரவி இப்படி தாயாரானதும் அடுத்தடுத்த படங்களில் உடனடியாக நடிக்க கிளம்பிவிடுவார் என்றார்கள்! தற்போது அதை உண்மையாக்கி இருகிறார் ஜெயம்ரவி! ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் தயாரிக்க, அறிமுக இயக்குனர் என்.கல்யாண கிருஷ்ணன் இயக்கும் ‘பூலோகம்‘ படத்திலும் சமுத்திரக்கனி இயக்கும் ‘நிமிர்ந்து நில்’ படத்திலும் மாறிமாறி நடிக்க இருக்கிறார் ஜெயம்ரவி.
பூலோகம் படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடி  த்ரிஷா. நிமிர்ந்து நில் படத்தில் அமலா பால்! பூலோகத்தில் குத்துச்சண்டை வீரராக நடிக்கும் ஜெயம்ரவி நிமிந்து நில் படத்தில் வன்முறைக்கு எதிரான இளைஞராக நடிக்கிறாராம்! நிமிர்ந்து நில் நாளை முதல் தொடர்ந்து 20 நாட்களுக்கு முதல் கட்ட படப்பிடிப்பு நடத்தப் படுகிறது!

அமீர் தாடி வளர்ப்பது கரு.பழனியப்பன் இயக்கத்தில் நடிக்கவே: உடையுது ரகசியம்!


கொழுத்திப் பொடுறதுக்குன்னே கோடம்பாக்கத்துல நெரும்பும் கையுமாக பலர் அலைவார்கள் போலிருக்கிறது!
யாருமே எதிர்பார்க்கத ஒரு தருணத்தில் பெப்சி தேர்தலில் நின்று பெப்சி தலைவராக ஜெயித்து, தமிழ்பட தயாரிப்பாளர்கள் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கும் அமீர், தற்போது தாடி வளர்த்துத் திரிவது, ஜீகாத் என்ற படத்தை இயக்கி நடிக்கத்தான் என்று சொன்னார்கள்!
ஆனால் மந்திரப்புன்னகை படத்தை தொடர்ந்து கரு.பழனியப்பன் இயக்கத்தில் நடிப்பதற்காகவே அமீர் தாடி வளர்த்து வருகிறார் என்கிற உண்மை இன்னும் சில தினங்களில் உடைய இருப்பதாக நமக்கு நம்பகமான தகவல் கிடைக்கிறது!

மேலும்  இந்தப் படத்துக்கு ‘ பாண்டிய வம்சம்’ என்று தலைப்பு வைத்திருகிறார் கரு.பழனியப்பன்! இந்தப் படத்தில் அமீருடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பவர் ராஜ்கிரன்! இவர் திருமங்கலத்து யானை என்ற படத்தை நடித்து, தயாரித்து இயக்க இருந்த நிலையில், கரு.பழனியப்பனின் கதையில் மயங்கி நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறராம்! கதாநாயகி உள்ளிட்ட டெக்னீஸியங்கள் லிஸ்ட்டை விரைவில் அறிவிக்க இருக்கிறார் இயக்குனர் கரு.பழனியப்பன்!

பில்லா 2 படத்தின் புதிய டிரைலரை ஒரே நாளில் 250,000 யூ டியூப்பில் பார்த்து சாதனை.





அஜீத் நடிப்பில் வெளிவர இருக்கும் 'பில்லா 2' படத்தின் FIRST LOOK வெளியீட்டு விழா ஒத்திவைக்கப்பட்து. இதனால் அஜீத் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

13ம் தேதி படம் வெளியாகுமா என்ற சந்தேக செய்திகள் உலா வந்தன. படத்தின் தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் "படத்தின் டிரெய்லர் இரவு 7 மணியளவில் YOUTUBE இணையத்தில் வெளியாகும்" என்று அறிவித்தார்.

மாலை 4 மணியளவில் "சென்னையில் இருந்து மும்பைக்கு விமானத்தில் செல்வதால் டிரெய்லர் கொஞ்சம் தாமதம் ஆகலாம்" என்று தெரிவித்தார்.

7 : 45 மணியளவில் 'பில்லா 2' டிரெய்லர் இணையத்தில் வெளியானது. இன்று காலை வரை சுமார் 1,50,000 அதிகமானோர் டிரெய்லரை பார்த்து ரசித்திருக்கிறார்கள்.

படத்தின் புதிய டிரெய்லரின் வசனங்கள் அஜீத் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. "என்னோட நண்பனா இருக்கிறதுக்கு எந்த தகுதியும் வேண்டாம், ஆனா எதிரியா இருக்கிறதுக்கு தகுதி வேணும்" என்ற வசனம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.

ரஜினி,கமல்,அஜீத்,விஜய்,விக்ரம் போன்ற நடிகர்கள் ஆஜராக நடிகர் சங்கம் கடிதம்.



நடிகர் சங்கத்துக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. தலைவராக சரத்குமார், பொதுச் செயலாளராக ராதாரவி, துணைத் தலைவர்களாக விஜயகுமார், கே.என்.காளை, பொருளாளராக வாகை சந்திரசேகர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நடிகர்கள் சிம்பு, ஸ்ரீகாந்த், டெல்லி கணேஷ், சந்தான பாரதி, நடிகைகள் குயிலி, நளினி, சி.ஐ.டி. சகுந்தலா, சத்ய பிரியா உள்ளிட்ட பலர் கமிட்டி உறுப்பினர்களாக தேர்வானார்கள்.

புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் முதல் தடவையாக நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் வருகிற 7-ந்தேதி மாலை 6 மணிக்கு தியாகராய நகரில் உள்ள ஜெர்மன் ஹாலில் கூடுகிறது. இந்த பொதுக்குழுவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்து ரஜினி, கமலுக்கு நடிகர் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.

முன்னணி நடிகர்கள் விஜய், விக்ரம், அஜித் குமார், சூர்யா, விஷால், ஜெயம்ரவி, கார்த்தி மற்றும் நடிகைகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது. நடிகர்கள் மற்றும் நாடக நடிகர்கள் உள்ளிட்ட 3 ஆயிரம் உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது. பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் குழுவுக்கு ஒப்புதல் பெறப்படுகிறது. வரவு- செலவு கணக்கு தாக்கல் செய்யப் படுகின்றன.

புதிய நடிகர்- நடிகைகள் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக பதிவு செய்ய வேண்டும் என்று ஏற்கனவே வற்புறுத்தப்பட்டு உள்ளது. அந்த கோரிக்கை பொதுக்குழுவில் மீண்டும் வலியுறுத்தப்படும். நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவது குறித்தும் ஆலோசிக்கப்படும்.

தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு நான் எப்பவும் ஸ்பெஷல் - நமீதா பேட்டி!!



I am always special for tamil fans says namithaஎந்த மொழியில் நடித்தாலும் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு மட்டும் நான் எப்பவுமே ஸ்பெஷல், மச்சான்ஸ் எப்பவும் என்பக்கம் தான் இருப்பாங்க என்று கூறியுள்ளார் நடிகை நமீதா. தனது நடிப்பாலும், கவர்ச்சியாலும் தமிழகத்தில் அதிக ரசிகர்களைக் கொண்ட ஒரே நடிகை என்ற பெருமைக்குரியவர் நடிகை நமீதா. சமீபகாலமாக தமிழ் படங்களில் அவருக்கு வாய்ப்பு இல்லாவிட்டாலும் விளம்பர நிகழ்ச்சி, கடைதிறப்பு என்று அவ்வப்போது ரசிகர்கள் முன் தோன்றி வருகிறார். தெலுங்கு, கன்னடப் படங்களில் படுபிஸியாக இருந்தாலும், தமிழில் ஒரு அசத்தலான கதை கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் நமீதாவுக்கு உள்ளது.

இந்நிலையில் தென்னிந்தியாவில் உள்ள நடிகைகளில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகை நமீதா தான் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த கேள்விக்கு நமீதா பதிலளித்திருப்பதாவது, உண்மையாக இருக்கலாம். ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மச்சான்ஸ் எப்பவும் என்பக்கம்தான் இருப்பாங்க. தெலுங்கு, கன்னடம் என்று வேறு மொழிகளில் நடித்தாலும், தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு நான் எப்பவுமே ஸ்பெஷல். அவங்க எனக்கு கொடுத்துள்ள இடம் உயர்வானது என்றார்.

இதனிடையே தி டர்ட்டி பிக்சர் தமிழ் ரீமேக்கில் நடிப்பீர்களா என்று பலரும் என்னைக் கேட்கிறார்கள்... இதோ என் பதில்.. நடிப்பேன் நடிப்பேன் நடிப்பேன். ஏன் தெரியுமா.. சில்க் ஸ்மிதாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். என்னை விட்டால் அவரைப் போல நடிக்க ஆளே இல்லை, என்று கூறியுள்ளார்.

என் மகனுக்கும் சினிமாவில் நடிக்க ஆர்வம்: விக்ரம்



My son also intrested in cinema says vikram       தாண்டவம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளார் சீயான் விக்ரம். பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே உருவாகி வரும் இப்படம் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், தனது நடிப்பில் உருவான தெய்வத்திருமகள் படத்தில் நடித்த அனைத்து நடிகர் நடிகைகள் பட்டாளமும் தாண்டவம் படத்தில் நடிக்கின்றனர். இதனால் மொத்த யூனிட்டும் ஒரு குடும்பம் போல இருக்கிறது. பல சினிமா நட்சத்திரங்களின் வாரிசுகள் சினிமாவுக்குள் நுழைந்து வருகின்றனர். அந்த வகையில் எனது மகன் துருவ்வனுக்கும் நடிக்கவே ஆர்வம் உள்ளது. காலம் தான் பதில் சொல்ல வேண்டும். எதுவாக இருந்தாலும் அவனது விருப்பம் போல செயல்பட அனுமதிப்பேன் என்றார்.

லிப் கிஸ் என்ன அவ்வளவு பெரிய தப்பா...? அஞ்சலி கேள்வி!!



Lip kiss is not wrong says anjali       கற்றது தமிழ், அங்காடித்தெரு போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்ற அஞ்சலி, இப்போது கவர்ச்சிக்கு மாறி இருக்கிறார். சமீபத்தில் கலகலப்பு படத்தில் அவரும், ஓவியாவும் ஆடிய கவர்ச்சி ஆட்டத்தை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்கமாட்டார்கள். இந்நிலையில் இப்போது அதையும் தாண்டி ஒருபடி மேலே போய் உதட்டோடு உதடு முத்தத்திற்கு தயாராகிவிட்டார். இந்தியில் சக்கபோடு போட்ட டில்லி பெல்லி படம், தமிழில் சேட்டை என்ற பெயரில் ரீ-மேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் ஒரு காட்சியில் ஆர்‌யாவோடு உதட்டோடு உதடு முத்தம் வைக்க தயாராகிவிட்டார். மேலும் அது என்ன பெரிய தப்பா என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து வார இதழ் ஒன்றுக்கு அஞ்சலி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, படம் ரிலீஸ் ஆகும்வரை இந்த ரகசியத்தை வெளியே சொல்லாதீர்கள் என்று டைரக்டரிடம் சொல்லியிருந்தும் ரகசியத்தை வெளியே சொல்லிவிட்டார். இந்தக் கதையை டைரக்டர் எனக்கு சொல்லும்போதே ஒரு டெஸ்ட் வச்சார். படத்தில் இரண்டு சீன்கள் இருக்கு. இரண்டுமே தவிர்க்க முடியாதது. அதனால் நீங்களே எந்தக் காட்சி வேண்டும் என்று முடிவு பண்ணுங்கனு சொல்லிவிட்டார். ஒரு சீன் படுக்கையறை காட்சி, இன்னொரு சீன் உதட்டோடு உதடு வெச்சு முத்தம் தரும் காட்சி. இதுல ஒண்ணு கண்டிப்பா ஷூட் பண்ணப்போறோம்னு சொல்லிட்டார். எனக்கு பெரிய சவாலா இருந்தது. காரணம் இப்பதான் நல்ல நல்ல ரோல் நடிச்சு நல்ல பேர் வாங்கிட்டு இருக்கேன். திடீர்னு பெட்ரூம் சீன்ல நடிச்சு பெயரை கெடுத்துக்க விரும்பல. அதனால் முத்தக் காட்சிக்கு ஓ.கே. பண்ணிட்டேன. குஷி படத்துக்கு விஜய் - ஜோதிகா முத்தம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் இந்த முத்தம். அதுவும் ஆர்யா என்னோட நல்ல நண்பர், அதனால அது ஒரு பிரச்னையா தெரியல. அதோட முத்தம் கொடுக்கறது என்ன பெரிய தப்பா...? அது பாச முத்தமாக்கூட இருக்கலாம் இல்லையா...? என்று கூறியுள்ளார்.