Tuesday, 17 July 2012

அஜித் படத்தில் நடிக்க 2 கோடி வேண்டும்!


கொலிவுட்டில் அஜித்குமார் நடிக்கும் புதிய படத்தில் நடிப்பதற்காக அரவிந்த் சாமி சம்பளமாக ரூ. 2 கோடி கேட்டுள்ளார்.

அரவிந்த் சாமியிடம் விஷ்ணுவர்தன் கதை சொல்லியிருக்கின்றார். கதையை கேட்ட உடன் திருப்தியடைந்த அரவிந்த் சாமி சம்மதமும் சொல்லியிருக்கின்றார்.

இந்நிலையில் அரவிந்த் சாமியின் சம்பளம் தான் விஷ்ணுவை மயக்கமடைய வைத்திருக்கிறது.ரூ. 2 கோடி கேட்டுள்ளார் அரவிந்த் சாமி. இதை விஷ்ணுவர்த்தன் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திடம் சொல்லியிருக்கிறார்.

உடனே அரவிந்த்சாமிக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அதுல் குல்கர்னி ஒப்பந்தம் செய்து, தற்போது அவர் நடித்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு சம்பளம் இருபது லட்ச ரூபாய்.

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன் தாரா நடிக்கின்றார். இவர்களுடன் ஆர்யா, டாப்ஸி ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்தில் நயன்தாரா, உதவி இயக்குனராக பணிபுரிவதும் குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கி திரைப்படத்தின் பாடல் வெளியீடு நாள் அறிவிப்பு!!

        இளையதளபதி விஜயின் துப்பாக்கி திரைப்படம் அடுத்த மாதம் 15ஆம் தேதி வெளிவரும் என ஏற்கனவே அறிவித்திருந்தனர் படக்குழுவினர்.

இந்த நிலையில் பாடல் எப்போதுவரும் என இளையதளபதியின் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருகின்றனர். ஆனால் இன்று விஜயின் துப்பாக்கி திரைபடத்தின் இசைவெளியீடு விழாவின் போஸ்டர் வெளிவந்தது.

துப்பாக்கி திரைபடத்தின் பாடல் இந்த மாதத்தில் வெளிவரலாம் என எதிர்பார்க்கபடுகிறது.மிகவும் சத்தமாக துப்பாக்கியின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .

தல அஜித் ஜிம் பயிற்சியில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட பிந்திய புகைப்படங்கள் இவை!


தமிழ் திரை உலகத்தில் தல என்கிற பெயரால் செல்லமாக அறியப்படுகின்ற, அழைக்கப்படுகின்ற முன்னணி நடிகர் அஜித் குமாரின் பிந்திய இரு புகைப்படங்கள் இணையத்தால் வெளியாகி கலக்கிக் கொண்டு இருக்கின்றன.

இவை திரைப்பட பிடிப்புக்காக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அல்ல. நடிகர்கள் உடலை கட்டுக்கோப்பாக்காக வைத்திருக்கின்ற உடல் பயிற்சிகளில் தவறாமல் ஈடுபடுகின்றமை வழக்கம்.

இந்நிலையில் தல ஜிம் பயிற்சிகளில் ஈடுபட்டபோது இப்புகைப்படங்கள் எடுக்கப்பட்டு இருக்கின்றன.


பில்லா 2 படத்தால் ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு ரூ.5 கோடி வரை நஷ்டம்? அதிர்ச்சியில் கோலிவுட்.



       தமிழ் சினிமா ஆர்வலர்களின் தற்போதைய டாக் எதுவென்றால் 'பில்லா 2' லாபம் தருமா அல்லது நஷ்டம் ஏற்படுத்துமா என்பதுதான்.

அஜீத் நடிப்பில் வெளியான 'பில்லா 2' படம் முதல் நாள் வரி நீங்கலாக 7.61 கோடி ரூபாயை கல்லா கட்டியது. லாபமா, நஷ்டமா என்று பார்த்தால், படத்தினை வெளியிட்டு இருக்கும் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.

எப்போதுமே ஒரு படத்தினை தயாரித்தாலோ, விநியோகித்தாலோ லாபமும் எனக்குத் தான், நஷ்டம் வந்தாலும் எனக்குத் தான் என்கிற பாணியில் படங்களை வெளியிடுவது ஆஸ்கர் ரவிச்சந்திரனின் வழக்கம்.

'அந்நியன்', 'தசாவதாரம்' போன்ற மெகா பட்ஜெட் படங்களை இவ்வாறு வெளியிட்டு லாபமும் அடைந்தார். ஆனால் தற்போது பில்லா 2 இவருக்கு 1 முதல் 5 கோடி வரை நஷ்டத்தை ஏற்படுத்தும் என்கிறது கோலிவுட்.

காரணம், 'பில்லா 2' படத்தின் வசூல் முதல் நாள் 7.61 கோடி, இரண்டாம் நாள் 5.23 கோடி, மூன்றாம் நாள் 4.92 கோடி என்று சரிவதாலும், படத்தினைப் பற்றி இருவேறு விமர்சனங்கள் உலா வருவதாலும், படம் நஷ்டம் ஏற்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறதாம்.

மேலும், படத்தின் வசூல் வரும் வாரங்களில் கடுமையாக சரியும் என்ற பேச்சும் நிலவி வருகிறது.

இரட்டை வேட சூர்யாவுக்கு பொருத்தமாக இயக்குனர் தேடும் இளவயது இரட்டை சிறுவர்கள்.



      இரட்டை வேடத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் அவரது இளமை தோற்றத்துடன் கூடிய வேடத்துக்குஇரட்டை சிறுவர்களை தேடுகிறார் இயக்குனர் கே.வி.ஆனந்த்.

ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் சூர்யா நடிக்கும் படம் மாற்றான். இரட்டையர்களை தேடுவது குறித்து இயக்குனர் கே.வி.ஆனந்த் டுவிட்டரில் கூறியிருப்பதாவது: இதுவரை தமிழில் வராத கதையான ஒட்டிப்பிறந்த இரட்டை பிறவிகள் கதையாக இப்படம் அமைந்திருக்கிறது. எப்போதும் சவாலான வேடங்களை விரும்பி செய்வார் சூர்யா.

இவரின் சிறுவயது காட்சிகள் படத்தில் இடம்பெறுகிறது. அதற்காக இரட்டை சிறுவர்களை தேர்வு செய்யும் பணி நடக்கிறது. இதற்காக இரட்டையர்கள் என் வீட்டுக்கு வந்து வாய்ப்பு கேட்கின்றனர். அப்படி வருபவர்கள் சூர்யா சாயலில் இருக்கிறார்களா, அவரது பாடி லாங்வேஜ் வருகிறதா என்பது போன்ற விஷயங்கள் உன்னிப்பாக பார்க்கிறேன். இதற்கான தேர்வு போட்டியில் பங்கேற்க எனது டுவிட்டர் பக்கத்தில் தொடர்பு கொள்ளலாம். சிறுவர்கள், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தால் நன்றாக இருக்கும்.

ஜூலை 26ல் கும்கி ஆடியோ ரிலீஸ்! கமல்ஹாசன் வெளியிடுகிறார்!

Kumki Audio launch on july 26 மைனா படத்திற்கு பிறகு பிரபுசாலமன் இயக்கிவரும் புதியபடம் கும்கி. இப்படத்தில் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு நாயகனாக அறிமுகமாக, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை லட்சுமி மேனன் நடிக்கிறார். இவர்களுடன் மைனா படத்திற்காக தேசிய விருது வாங்கிய தம்பி ராமையாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தில் யானை பாகனாக நடித்து இருக்கிறார் விக்ரம் பிரபு. இதற்காக அவருக்கு யானைகளிடம் சிறப்பு பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இந்நிலையில் இப்படத்தின் ஆடியோவை வருகிற ஜூலை 26ம் தேதி சென்னையில் வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். படத்தின் ஆடியோவை நடிகர் கமல்ஹாசன் வெளியிட இருக்கிறார். மைனா படத்தை போல் கும்கிக்கும் டி.இமான் தான் இசையமைதுள்ளார். மைனா படத்தை போல் கும்கி இசையும் பெரிதும் ‌பேசப்படும் என்று நம்பப்படுகிறது.

அருள்நிதியின் படத்தலைப்பு மாற்றம்!


Arulnidhi change the film title!


வம்சம் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் அருள்நிதி. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பேரனான அருள்நிதிக்கு முதல் படமே நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. தற்போது அவர் தனது சகோதரரரும், மத்திய அமைச்சர் அழகிரியின் மகனுமான துரைதயாநிதியின் க்ளவுட் நைன் மூவிஸ் தயாரிக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். முதலில் சம்பவம் என தலைப்பிடப்பட்டிருந்த இப்படத்திற்கு தற்போது தகராறு என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடிகை பூர்ணா நடித்து வருகிறார். புதுமுகமான கணேஷ் விநாயக் இயக்கும் இந்தப் படத்துக்கு ரகுநாத் இசையமைக்கிறார். படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.