Saturday, 28 July 2012

நடிகைகளிடம் தர்ம அடி வாங்கிய சூர்யாவின் தம்பி.



    தன்னை பிரபல நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியின் தம்பி என்று சொல்லிக் கொண்டு திரிந்த சரவணன் என்ற இளைஞருக்கு நடிகைகளிடம் தர்ம அடி கிடைத்துள்ளது.

நடிகைகள் சோனியா அகர்வால் மற்றும் சோனாவிடம்தான் இந்த இளைஞர் சிக்கி அடி வாங்கியுள்ளார்.

இந்த இளைஞர் முதலில் பிரபல மால் ஒன்றில் வேலை பார்த்தவராம். எப்படியோ அவர் சூர்யா- கார்த்தி அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்துவிட்டார்.

சூர்யா, கார்த்தி பெயரைச் சொல்லி திரையுலகில் இருப்பவர்களின் கைபேசி எண், சமூக வலைதளங்களில் நட்பு எனப் பெற்று அதை தவறாக பயன்படுத்தி வந்தாராம்.

'என்ன பாக்கனும்னா என் அண்ணனுங்க அலுவலகத்துக்கு வாங்க. நான் அங்க தான் இருப்பேன்' என்று கூறி அனைவரையும் நம்ப வைத்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில் அண்ணா மேம்பாலத்திற்கு அருகில் இருக்கும் ஒரு நட்சத்திர ஹோட்டலில் சோனியா அகர்வாலை பார்ட்டியில் தற்செயலாக சந்தித்த சரவணன், அவரிடம் ஏதோ தவறாகக் கூறியிருக்கிறார். அவர் தமிழில் பேசியதால் புரிந்து கொள்ளாத சோனியா, அதை சக நடிகை சோனாவிடம் அதை அப்படியே ஒப்பிக்க, சோனாவோ டென்ஷனாகி சரவணனை போட்டு அடித்ததாகக் கூறப்படுகிறது.

சரவணன் கூறியதன் அர்த்தத்தை சோனா விளக்க சோனியா அகர்வாலும், அவரது தம்பியும் ஹோட்டலில் அனைவர் முன்னிலையிலும் சரவணனை புரட்டியெடுத்துவிட்டார்களாம்.

ஹோட்டல் ஊழியர்கள் வந்து தடுத்து சூர்யா, கார்த்திக்கு தகவல் சொன்ன பிறகு, கொஞ்ச நேரத்தில் சண்டை சமாதானமானதாம்.

பாலிவுட்டில் கரீனா கபூருக்கு அடுத்த இடத்தில் அசின்?



       அசின் தற்போது மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ளார். சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த ‘போல்பச்சன்’ படம் ஹிட்டானதே இந்த சந்தோஷத்துக்கு காரணமாம். வெற்றிப் படங்கள் அமைந்தது அசினுக்கு புதிதல்ல என்றாலும் ‘போல்பச்சன்’ படம் அவருக்கு புது அந்தஸ்தை பெற்று கொடுத்துள்ளது.
100 கோடி ரூபாய் வசூல் சாதனை படங்களில் நடிப்பதை இந்தி நடிகைகள் கவுரவமாக பார்க்கிறார்கள். இதில் கரீனா கபூர் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் 100 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்த ‘கோல்மால் 3’, ‘திரி இடியட்ஸ்’, ‘பாடிகார்டு’, ‘ரா ஒன்’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.
கரீனா கபூருக்கு அடுத்த இடத்துக்கு அசின் உயர்ந்துள்ளார். அசின் ஏற்கனவே நடித்த ‘கஜினி‘, ‘ரெடி’, ‘ஹவுஸ்புல்’ படங்கள் 100 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தன. தற்போது ‘போல்பச்சன்’ படம் 100 கோடி வசூல் சாதனையை தாண்டி விட்டது. இதனால் கரீனாவுக்கு போட்டியாக அசின் உயர்ந்து விட்டார்.

இதுகுறித்து அசின் கூறும்போது “நான் இந்தி திரையுலகில் நுழைந்து இன்னும் ஐந்து ஆண்டுகள்கூட ஆகவில்லை. இவ்வளவு குறைந்த காலத்தில் எனக்கு இதுபோன்ற உயர்ந்ததொரு அந்தஸ்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ‘போல்பச்சன்’ எனது வாழ்க்கையில் ஒரு சிறப்பு படமாகும் என்றார்.

தனுஷ் பிறந்தநாள் பார்ட்டியில் சிம்பு. தண்ணிப் பார்ட்டியில் ஐஸ்வர்யா மிஸ்ஸிங்.



ஆனாலும் புதுசாக, அநியாயத்துக்கு செயற்கையாக நட்பை விளம்பரப்படுத்தி வரும் ஜோடி என்றால் அது தனுஷும் சிம்புவும்தான்!

நாம் இப்படிக் குறிப்பிடுவதற்குக் காரணம், இந்த இருவரும் கடந்த காலங்களில் எவ்வளவு முடியுமோ அந்த அளவு ஒருவரையொருவர் கேவலமாக விமர்சித்துக் கொண்டிருந்தார்கள். அதற்கு அவரவர் ரசிகர்களையும் பயன்படுத்தத் தவறியதில்லை. குறிப்பாக கொலவெறி பாட்டு வெளியான சமயத்தில் பேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்களில் சிம்புவின் கமெண்டுகள், அது பற்றி தனுஷ் தந்த பதில்களைப் படித்தவர்களுக்கு நினைவிருக்கலாம்.

இப்போதோ, நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க... எங்களைப் போல நண்பர்கள் உண்டா என்றெல்லாம் பேட்டி கொடுத்து வருகிறார்கள். கூடவே இதெல்லாம் மீடியா வேலை என்று வேறு பிட்டைப் போட்டிருக்கிறார்கள்.

இருக்கட்டும்.

இன்று தனுஷுக்குப் பிறந்த நாள். இந்த பிறந்த நாளையொட்டி நேற்று இரவு ஏகப்பட்ட நட்சத்திரங்களை அழைத்து மெகா தண்ணி பார்ட்டி கொடுத்திருக்கிறார் தனுஷ். அதில் சிம்புவும் ஆஜர். கூடவே அவர்கள் வயது 'தோழிகள்' ராதிகா போன்றவர்களும் தவறாமல் ஆஜராகியிருந்தனர். தமன்னா, பிரேம்ஜி என பார்ட்டிகளுக்கென்றே பிறந்தவர்களும் வந்திருந்தனர்.

சேவல் வடிவில் (ஆடுகளம் ஹீரோல்ல...) கேக்கெல்லாம் வெட்டி கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட இந்த பிறந்த நாள் விழா விருந்தில், தனுஷ் மனைவி ஐஸ்வர்யா இல்லை!!

ஸ்ரீதேவி படத்தில் அஜித்...!


Ajith to cameo in Sridevis English Vinglishஸ்ரீதேவி நடித்து வரும் இங்கிலீஸ் விங்கிலீஸ் படத்தில், ‌கெஸ்ட் ரோலில் நடிகர் அஜித் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு சினிமாவை கலக்கிய ஸ்ரீதேவி, பின்னர் இந்தி திரையுலகிலும் கால்பதித்து, அங்கும் முத்திரை பதித்தார். பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்ட பின்னர் சினிமா வாய்ப்புகளை குறைத்து கொண்ட ஸ்ரீதேவி, இப்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற படத்தில் நடிக்கிறார். சந்தர்ப்ப சூழ்நிலையால் அமெரிக்கா செல்லும் ஸ்ரீதேவி, அங்கு மொழி பிரச்னையால், ஆங்கில மொழியை திக்கி திணறி பேசி அங்குள்ளவர்களால் கிண்டல்களுக்கு ஆளாகிறார். பின்னர் அதை சவாலாக ஏற்று முறைப்படி ஆங்கிலத்தை பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறார். இதுவே இப்படத்தின் கதை. கவுரி ஷிண்டே இயக்கும் இப்படத்தை பால்கி தயாரிக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் முதல் ஸ்டில்லை வெளியிட்டனர் படக்குழுவினர். ஸ்ரீதேவிக்கு தமிழ் மற்றும் தெலுங்கு மொழியிலும் ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் இப்படத்தை தென்னிந்தியாவிலும் வெளியிட படக்குழுவினர் முடிவுசெய்துள்ளனர். ஏற்கனவே இந்தி இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் அமிதாப் ஒரு முக்கிய கேரக்டரில் தோன்றவுள்ளார். அதேப்போல் தமிழ்-தெலுங்கு மொழியில் உருவாக இருக்கும் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் அமிதாப் நடித்த கேரக்டரில் டாப் ஸ்டார் ஒருவரை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்தது. அதன்படி ஆரம்பத்தில் அமிதாப் ரோலில் ரஜினியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்தது. ரஜினியுடன் ஸ்ரீதேவி நிறைய படங்களில் நடித்துள்ளதாக அவர் இந்த கேரக்டருக்கு செட் ஆவார் என்பது படக்குழுவின் நம்பிக்கை. ஆனால் ரஜினியோ மறுத்துவிட்டாராம்.

இந்நிலையில் ரஜினிக்கு பதில் அந்த கேரக்டரில் இப்போது அஜித்தை நடிக்க பேச்சுவார்ததை நடத்தி வருகி்ன்றனர். இதனை படக்குழுவினரும் உறுதிப்படுத்தியுள்ளனர். டாப்ஸ்டார் ஒருவ‌ரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இன்னும் ஓரிரு நாளில் முடிவாகிவிடும் என்றும், இதற்கான அறிவிப்பு முறைப்படி ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் கூறியுள்ளனர்.

கமலை பாராட்டிய ஹாலிவுட் இயக்குனர்!


Hollywood director praises kamalhassanகதாநாயகன், வில்லன் என, இரு வேடங்களில் கமல் நடித்த படம், "ஆளவந்தான்! கமல் எழுதிய, "தாயம் என்ற கதையை மையமாக வைத்து உருவான இந்தப் படத்தின் ஒரு சண்டைக் காட்சி, "கிராபிக்ஸ் முறையில், வித்தியாசமாக படமாக்கப் பட்டிருந்தது. இது, "ஹாலிவுட் இயக்குனர் குவென்டைன் டிரன்டினோ என்பவரை மிகவும் கவர்ந்து விட்டது. கமலை வெகுவாக பாராட்டிய அவர், 2014ல் தான் இயக்கவுள்ள படத்தில், ஆளவந்தானில் இடம் பெற்றது போன்ற ஒரு சண்டைக் காட்சியை, அதே பாணியில் உருவாக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தொடரும் விஜய்யின் துப்பாக்கி படத்திற்கான சிக்கல்!!


Continously trouble for vijays thuppaki movieவிஜய் நடித்து வரும் துப்பாக்கி படத்தின் தலைப்பிற்கான சிக்கல் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இதனால் படக்குழுவினர் கவலையடைந்துள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய், காஜல் அகர்வால் நடித்து வரும் படம் துப்பாக்கி. இப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.

இந்நிலையில் விதிமுறைகளை மீறி, நான் பதிவு செய்த கள்ளத்துப்பாக்கி என்ற தலைப்பின் பின் பகுதியில் விஜய்யின் துப்பாக்கி படத்தை தயாரித்து வருவதாகவும், அதனால் துப்பாக்கி என்ற பெயரில் படத்தை வெளியிட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குனர் முருகதாஸ் ஆகியோருக்கு தடை விதிக்க வேண்டும், என்று கள்ளத்துப்பாக்கி தயாரிப்பாளர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பான வழக்கு ஏற்கனவே இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், 25ம் தேதி இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு தள்ளிவைத்தார். மேலும் துப்பாக்கி படத்தின் தலைப்புக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையையும் நீட்டித்து உத்தரவிட்டார்.

துப்பாக்கி படத்தை இன்னும் ஓரிரு மாதங்களில் ரிலீஸ் செய்யலாம் என்று நினைத்தால் தொடர்ந்து படதலைப்பு தொடர்பான பிரச்னைக்கு ஒரு முடிவு எட்டப்படாததால் துப்பாக்கி படத்தின் தயாரிப்பாளர், டைரக்டர் முருகதாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் கவலையில் உள்ளனர்.

யார் சொன்னது சகுனி ப்ளாப் என்று! கார்த்தி கேள்வி...?


Saguni is not flop flim says karthiசகுனி ப்ளாப் படம் என்று யார் சொன்னது, வசூல் ரீதியாக படம் நன்றாக போய் கொண்டு இருக்கிறது என்று அப்படத்தின் நாயகன் கார்த்தி தெரிவித்துள்ளார். புதுமுகம் ஷங்கர் தயாள் கார்த்தி, ப்ரனீதா, சந்தானம், பிரகாஷ்ராஜ், கோட்டா சீனிவாசராவ் உள்ளிட்ட பலரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் சகுனி. இப்படம் சரியா‌க போகவில்லை என்பது தான் அனைத்து தரப்பட்ட ரசிகர்களின் கருத்து. ஆனால் இக்கருத்தை படத்தின் நாயகன் கார்த்தி தவறானது என்று கூறியுள்ளார். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கார்த்தியிடம், சகுனி தோல்வி படம் தானே என்று கேட்டுள்ளனர். அதற்கு கார்த்தி, சகுனி தோல்வி படமா...? ‌யார் சொன்னது. இன்று நாட்டில் நடக்கும் அரசியல் சம்பவங்களை மையப்படுத்தி சகுனி படத்தை எடுத்துள்ளோம். சகுனி படத்துக்கு கொஞ்சம் அப்படி இப்படி என்று விமர்சனம் வந்தது உண்மைதான். சிலரது எதிர்பார்ப்பை இந்தபடம் பூர்த்தி செய்யவில்லை. அதற்காக படம் ப்ளாப் என்று கூறமுடியாது. வசூல் ரீதியாக படம் நன்றாக போய் உள்ளது. இனி வர என்னுடைய படங்களில் இன்னும் கூடுதலாக கவனம் செலுத்துவேன் என்றார்.