Friday, 31 August 2012

3D-யில் முகமூடி 2 !

'முகமூடி' படத்தின் 2ம் பாகத்தினை 3Dல் தயாரிக்க திட்டமிட்டு இருப்பதாக யு.டிவி நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்து இருக்கும் 'முகமூடி' ஆகஸ்ட் 31ம் தேதி வெளிவர இருக்கிறது. டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் யு.டிவி நிறுவனத்தின் தனஞ்செயன் " தற்போது தான் முகமூடி படத்தின் இறுதி வடிவத்தினை பார்த்தேன். மொத்த படக்குழுவும் நன்றாக பணியாற்றி இருக்கிறார்கள். இசையமைப்பாளர் கே அமைத்திருக்கும் பின்னணி இசை படத்தின் ஹைலைட்டாக இருக்கும்.

ஜீவாவிற்கும் நரேன்னிற்கும் போன் செய்து என் பாராட்டுக்களைத் தெரிவித்தேன்.

நீங்களும் படத்தினைப் பார்த்து கண்டிப்பாக பாராட்டுவீர்கள். 'முகமூடி' படத்தின் இரண்டாம் பாகத்தை பெரிய படஜெட்டில் தயாரிக்க இருக்கிறோம். 3Dல் தயாரிக்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறோம்.

வெள்ளிக்கிழமை நீங்கள் 'முகமூடி' படத்தினைப் பார்த்து விட்டு கூறும் கருத்துகளுக்காக காத்திருக்கிறோம் " என்று தெரிவித்து இருக்கிறார்.

தோனியை பற்றி பேசினால் லட்சுமிராய்க்கு கோப ம் வருவதேன்?

நடிகை லட்சுமிராயையும், இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனியையும் இணைத்து, ஆரம்பத்தில் ஏகப்பட்ட கிசுகிசுக்கள் வெளியாயின.

சாக்ஷிக்கும், தோனிக்கும் திருமணமான பின், இந்த கிசுகிசுக்களும் மறைந்து விட்டன. ஆனால், லட்சுமி ராயை சந்திக்கும் அனைவரும், தோனி விவகாரத்தை பற்றியே விசாரிப்பதால், வெறுத்துப் போயிருக்கிறார், லட்சுமி.

"நானும், தோனியும், ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தோம். பரஸ்பரம், "ஹலோ கூறி, நலம் விசாரித்துக் கொண்டோம். தோனி எனக்கு, நல்ல நண்பர். நட்பை தாண்டி, எங்களுக்குள் எந்த விஷயமும் இல்லை.

ஆனால், என்னை சந்திக்கும் சிலர், மீண்டும், மீண்டும் தோனியைப் பற்றியே கேட்பதால், கடும் எரிச்சல் ஏற்படுகிறது என, கோபம் கொப்பளிக்க பேசுகிறார், லட்சுமி ராய்.

வெற்றிமாறனின் திடீர் முடிவிற்கு காரணம் சிம்புவா? தனுஷா?

சிம்பு, தனுஷ் படம் இயக்குவதில் குழப்பம் ஏற்பட்டதால் இயக்குனர் வெற்றிமாறன் புதிய படமொன்றை இயக்க முடிவு செய்துள்ளார்.
ஆடுகளம் படத்தையடுத்து தனுஷ் நடிக்கும் மற்றொரு படத்தை இயக்கப் போவதாக வெற்றிமாறன் கூறிவந்தார்.

இந்நிலையில் அந்த திட்டத்தை காத்திருப்பில் வைத்துவிட்டு சிம்பு நடிக்கும் “வட சென்னை” படத்தை இயக்கப் போவதாக அறிவித்தார்.

தற்போது இந்த படம் இயக்குவதையும் கைவிட யோசித்திருக்கிறார். தனது படத்தை தான் முதலில் இயக்க வேண்டும் என்று சிம்பு, தனுஷ் இருவருமே வெற்றிமாறனிடம் கேட்பதால் எதை இயக்குவது என்று முடிவெடுக்க முடியாமல் அவர் குழப்பத்தில் இருந்தார்.

தற்போது புது முடிவு எடுத்துள்ளார். அதன்படி சித்தார்த் நடிக்க “நான் ராஜாவாகப் போகிறேன்” என்ற சொந்த படத்தை தயாரிக்கும் பணியில் மட்டும் மூழ்கி இருக்கிறார் வெற்றிமாறன்.

இப்படத்திற்கு அவரே வசனம் எழுதுகிறார். இது பற்றி அவர் கூறுகையில், சொந்த படம் தயாரிப்பு பணியில் முழுமையாக ஈடுபட்டு விட்டேன்.

எனவே அடுத்த படம் இயக்குவது பற்றி எந்த எண்ணமும் இப்போது இல்லை. இப்பட வேலைகள் முடிந்த பிறகு இரண்டு படங்கள் இயக்குவதற்கான முயற்சியில் இருக்கிறேன்.

இதில் யார் கதாநாயகன் என்பது பற்றி இன்னும் உறுதி செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மகளுக்கு காதல், அம்மாவுக்கு கவலை!

Daughters love, care for mother!த்ரிஷா, ராணா திருமணம் செய்யப்போகிற செய்தி காட்டுத்தீ போல பரவிக்கிடக்கிறது. ஆனால் இந்த செய்திகளால் த்ரிஷாவின் அம்மா ரொம்பவே அப்செட்டாகி இருக்கிறார். காரணம் ராம்நாயுடு குடும்பம் விட்ட டோஸ். த்ரிஷாவும், "ராணாவும் பக்கத்து வீடுங்றதால சின்ன வயசுலேருந்தே நல்ல பிரண்ட். அவுங்க பிரண்ட்ஷிப்புல வில்லங்கமா ஏதும் இல்லேன்னுதான் நாங்களும் சும்மா இருந்தோம். இப்போ நீங்களே காதல் கல்யாணம்ங்ற வரைக்கும் நியூஸ் பரப்பிட்டிருக்கீங்களா? எங்க குடும்பம் ரொம்ப பெருசு. எந்த முடிவா இருந்தாலும் பெரியவங்க பேசித்தான் முடிவெடுப்போம். ஒருவேளை ராணாவுக்கு த்ரிஷா மேல லவ் இருந்தா எங்ககிட்ட சொல்வான். அப்புறம் நாங்க பாத்துக்குறோம். அதுவரைக்கும் உங்க வாய மூடிக்கிட்டு சும்மா இருங்க. உங்க மகளையும் சும்மா இருக்க சொல்லுங்க"ன்னு ராணா வீட்டு பெரியவர்கள் த்ரிஷாவின் வீட்டுக்கே சென்று காய்ச்சி எடுத்துட்டு வந்துட்டாங்களாம்.

"மணிரத்னம் ஒரு தேசிய நெடுஞ்சாலை


மணிரத்னம் இயக்கி வரும், "கடல் படமும், சீனுராமசாமி இயக்கும், "நீர்ப்பறவையும், ஒரே மாதிரியான கதையில் உருவாகி வருவதாக, கோலிவுட்டில் செய்தி உலவுகிறது. இதுகுறித்து, இயக்குனர் சீனுராமசாமியிடம் கேட்டபோது, "களம் வேண்டுமானால் ஒன்றாக இருக்கலாம். ஆனால், கதையும், பிரச்னைகளும், கண்டிப்பாக வெவ்வேறாகத்தான் இருக்கும் என்கிறார். காரணம், மணிரத்னம், கப்பலில் சென்று மீன் பிடிப்பவர். நான், நாட்டுப் படகில் சென்று மீன் பிடிப்பவன். அவரிடம், நங்கூரம் உள்ளது. என்னிடம், நானே கரைக்குத் திரும்பி விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் ஒரு தேசிய நெடுஞ்சாலை, நானோ, கிராமத்திற்கு போகும் ஒரு சிறிய ஒத்தையடி பாதை. அதனால், அத்தனை பெரிய இயக்குனர் படத்துடன், என் படத்தை ஒப்பிடுவதே தவறு என்கிறார் சீனுராமசாமி.

ரஜினியை ரியலாக காட்டும் "கோச்சடையான்!

Kochadayan will shows real rajini says soundarya"அவதார், லார்டு ஆப் தி ரிங்ஸ் படங்களை காட்டிலும், அதிநவீன அனிமேஷன் தொழில்நுட்பத்தில் உருவாகும் படம், ரஜினியின், "கோச்சடையான்! "என் தந்தையை, காலத்தை வென்ற கலைஞனாக நிலைநிறுத்தும் முயற்சி தான், இந்தப் படம் என்று சொல்லும், படத்தின் இயக்குனரும், ரஜினியின் மகளுமான சவுந்தர்யா, "மக்கள் மனதில் பதிந்துவிட்ட அவரது ஸ்டைல், மேனரிசம், பேசும் பாணி என, அனைத்தையும் இந்தப் படத்தில் ரியலாக காண்பிக்கிறேன். அதோடு, அனிமேஷன் என்றால், கார்ட்டூன் படம் தான் என்ற ரசிகர்களின் எண்ணத்தை, இந்தப் படம் மாற்றும் என்கிறார்.

வெயிட்டான வேடம் தேடும் ரீமாசென்!

Reema sen searching for bold roleதிருமணத்திற்கு பிறகு தமிழில், "சட்டம் ஒரு இருட்டறை ரீமேக் படமான, "தோழன் படத்தில், போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் ரீமாசென். கதாநாயகனின் அக்கா கதாபாத்திரத்தில் ரீமாசென் நடிப்பதால், அக்கா, அண்ணி வேடங்களுக்கு, ரீமாசென் தயாராகி விட்டார் என நினைத்து, சில டைரக்டர்கள் அவரை அணுகினர். ஆனால் நடிகையோ, "சினிமாவில் நடிக்க வாய்ப்பே இல்லை என்றாலும், அக்கா, அண்ணியாக நடிக்க மாட்டேன். "தோழன் படத்தில், போலீஸ் வேடம் என்பதால் தான், நடிக்க ஒப்புக் கொண்டேன். அதுவும், இந்தியில், ஹேமமாலினி நடித்த பவர்புல் வேடம் இது என்கிறார்.