
நடிகர் பிரபுவின் கலைவாரிசு விக்ரம் பிரபு, கதாநாயகனாக அறிமுகமாகும் "கும்கி படம், விரைவில் திரைக்கு வர உள்ளது. இதில், விக்ரம் பிரபுவின் நடிப்பை பற்றி, சினிமா வட்டாரத்தில், "சிவாஜி வீட்டு சிங்க குட்டியாச்சே... சோடை போகுமா? என, பேசப்படுகிறது. "கும்கி வந்த பிறகு, விக்ரம் பிரபுவுக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைக்கும் என, கூறும் இயக்குனர் லிங்குசாமி, அவரை, தன் சொந்தப் பட நிறுவனமான, திருப்பதி சாமி பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க, ஒப்பந்தம் செய்துள்ளார். "எங்கேயும் எப்போதும் தந்த சரவணன், இந்தப் படத்தை இயக்குகிறார்; சத்யா இசையமைக்கிறார். படத்திற்கான பெயர், கதாநாயகி, தொழில்நுட்ப கலைஞர்கள் என, எதுவும் முடிவு செய்யப் படவில்லை. படத்துக்கு பூஜை போட்டு, வேலைகள் ஆரம்பமாகி உள்ளன.
No comments:
Post a Comment