விமானம் பினாங்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதன் பிறகு அவருடைய டிவிட்டரில் அவர் "எனது விமானம் கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டதை குறித்து நான் தெரிவித்த உடன் எனது நண்பர்கள், மீடியா நண்பர்கள் யாருமே என்னை தொடர்பு கொள்ளவில்லை. எனக்கு வெங்கட்பிரபு மட்டுமே மெசேஜ் செய்தார்.
எனக்கு உடனே போன் செய்து விசாரித்த ஒரே நபர் அஜீத் அண்ணா மட்டுமே. இவர்கள் இருவரையும் நான் எப்போதும் நம்புகிறேன்.
அஜீத்திற்கு இந்த செய்தி எப்படி தெரிந்தது என்பது எனக்கு தெரியவில்லை. என் வீட்டிற்கு போன் செய்து எனது மலேசிய போன் நம்பரை வாங்கி இருக்கிறார். அவர் குரலை கேட்டதும் ஆனந்தத்தில் திக்குமுக்காடி போனேன்." என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment