தெய்வ திருமகள் திரைப்படத்துக்குப் பிறகு விக்ரம்-ஏ.எல்.விஜய் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் தாண்டவம். இத்திரைப்படத்தில் விக்ரம் இரு வேடங்கள் ஏற்றுள்ளார். அதில் ஒன்று பார்வையற்றவர் வேடம்.
மேலும் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அனுக்ஷா, எமி ஜாக்சன், ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் லட்சுமிராய் நடித்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இத்திரைப்டம் வரும் 28ம் தேதி திரைக்கு வருகிறது.
இதனிடையே தாண்டவம் திரைப்படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழு படத்துக்கு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளது.மேலும் படம் சூப்பராக உள்ளதாக தணிக்கை குழுவினர் பாராட்டியுள்ளனர். இந்த படத்தில் பார்வையற்றவராக நடித்துள்ள விக்ரமுக்கு மீண்டும் ஜனாதிபதி கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கோலிவுட் பரபரக்கிறது.
No comments:
Post a Comment