Tuesday, 25 September 2012

மீண்டும் தனுஷூக்கு ஜோடியாகும் ஹன்சிகா...!


Hansika with dhanush againமாப்பிள்ளை படத்திற்கு பிறகு மீண்டும் தனுஷூடன் ஜோடி சேர இருக்கிறார் ஹன்சிகா. வாகை சூடவா படத்திற்கு பிறகு சற்குணம் இயக்க உள்ள படம் சொட்ட வாளகுட்டி. கும்பகோணத்தில் குத்துவிளக்கு விற்கும் ஒருவரின் கதை இது. இப்படத்தில் தனுஷூ ஹீரோவாக நடிக்க உள்ளார். இதில் தனுஷூக்கு ஜோடியாக ஹன்சிகாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எப்போது இந்தபடம் தொடங்கும் என்று சற்குணத்திடம் கேட்டால், தனுஷ், இப்போது இந்தி படத்தில் பிஸியாக இருக்கிறார். அந்தப்படத்தை முடித்து எங்களது படத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். நவம்பர் மாதம் கும்பகோணத்தில் சொட்டவாள குட்டி ஆரம்பமாக இருக்கிறது. தற்போது படத்திற்கான பாடல் கம்போசிங், ஜிப்ரானின் இசையில் தீவிரமாக நடந்து வருகிறது. அறிவுமதி, நா.முத்துகுமார், ‌தேவேந்திரன் ஆகியோர் பாடல்களை எழுதி உள்ளனர் என்றார்.

No comments:

Post a Comment