Monday, 25 June 2012

காமெடி காட்சிகளே இல்லாமல் வெளிவரும் பில்லா 2



   வடிவேலு கால்ஷீட்டை முதல்ல பிளாக் பண்ணுங்க' என்பார் ரஜினி. ஏனென்றால் சூப்பர் ஸ்டார் படமாக இருந்தாலும், ரசிகர்களை சட்டென்று கவர்வது சிரிப்புதான்என்பது அவரது நம்பிக்கை. கமல் படத்தில் கிரேஸி மோகன் இருந்தால் போதும். வையாபுரி போன்ற மொக்கை பீஸ்களையும் கூட காமெடியனாக நம்புவது கமலின் தன்னம்பிக்கையா, அல்லது அறியாமையா என்பது அவரது ரசிகர்களின் சில வருட ஆராய்ச்சி.
கமல், ரஜினி வரிசையில் அடுத்ததாக நாம் பார்க்கும் ஹீரோக்களில் அஜீத்திற்கு முக்கியமான இடம் உண்டு. இவரை பொறுத்தவரை காமெடியையோ, காமெடியர்களையோ நினைத்து பெரிதாக அலட்டிக் கொள்கிற ரகம் இல்லை. அதெப்படி அவ்வளவு ஆணித்தரமாக சொல்ல முடிகிறது? அஜீத் நடித்த ஒரு படத்தில் யூகிசேது முழு காமெடியனாக நடித்திருந்ததை வைத்துதான். இவரது சிரிப்பு மூட்டும் அழகை கண்டு பிள்ளையார் கோவில் சுவற்றில் முட்டிக் கொண்டு அழுதார்கள் அஜீத் ரசிகர்கள்.
இந்த தொல்லையெல்லாம் எதற்கு என்று நினைத்தாரோ என்னவோ? விரைவில் வெளிவரப்போகும் பில்லா-2 ல் காமெடியே இல்லை. கதை முழு மாஃபியாவை பற்றியது. இதில் எதற்கு தேவையில்லாமல் காமெடியை நுழைக்க வேண்டும் என முடிவெடுத்தாராம் சக்ரிடோலட்டி.
யூகிசேது, ஒய்.ஜி.மகேந்திரன் மாதிரி வேல்டு பேமஸ் நடிகர்களை போட்டு இம்சிப்பதற்கு இது எவ்வளோ மேல்!

விக்ரம்,ஜீவா இணையும் படத்தில் இரண்டு டேவிட், இரண்டு கதைகள்.



விக்ரம், ஜீவா இணைப்பில் தயாராகி வருகிறது 'டேவிட்' ( David ). இரண்டு கதைகள், இரண்டு காலங்கள், வாழ்க்கையை மாற்றும் இரண்டு முடிவுகள் பற்றிய கதை தான் 'டேவிட்'. 

'சைத்தான்' படத்தின் மூலம் தன் மீது வெளிச்சம் பாய்ச்சிக் கொண்ட இயக்குனர் பிஜாய் நம்பியார், அடுத்து இயக்கும் படம் இது. இதனால் இந்தி திரையுலகில் இப்படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

இப்படம் இரண்டு தனிக் கதைகளை கொண்டதாக வித்தியாசமான முறையில் உருவாகி இருக்கிறது. ஒரு கதைக்கு ஒரு ஒளிப்பதிவாளர் என இரண்டு ஒளிப்பதிவாளர்கள் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

இரண்டு டேவிட்களின் கதைகளையும், இரண்டு முடிவுகள் அவர்கள் வாழ்கையில் ஏற்படுத்தும் மாற்றங்களையும் விவரிக்கும் இந்த கதையில் ஒரு டேவிட் மீனவராகவும் மற்றொரு டேவிட் இசைக் கலைஞராகவும் இருக்கிறார்கள். இருவரும் ஒரு சிக்கலை எதிர்கொள்ள அதனை அவர்கள் எப்படி எதிர் கொள்கின்றனர் என்பது தான் கதை.

விக்ரம், ஜீவா, நாசர், தபு, ரோகினி ஹட்டங்காடி, லாரா தத்தா, இஷா ஷெர்வானி,கே.பி.நிஷான்,ஜான் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர்.

'கேட்வே பிலிம்ஸ்' மற்றும் 'ரிலையன்ஸ்' இணைந்து தயாரிக்கும் இப்படத்தை, இசை,நகைச்சுவை,ஆக்ஷன் கலந்து வித்தியாசமான முறையில் இயக்குனர் பிஜாய் நம்பியார் கையாண்டிருக்கிறாராம். 

மீனவர் கதையை 'எந்திரன்' ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவும், இசைக் கலைஞர் கதையை ஸ்ரீஜல் ஷாவும் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

செல்வராகவனுக்கு ஜார்ஜியா அரசு வழங்கிய ஹெலிகாப்டர்.




   செல்வராகவன் இயக்கிய படத்தினைப் பார்த்தால் காட்சிகள் ஒவ்வொன்றையும் கவனமாக செதுக்கி இருப்பார். பின்னணி இசையில் இருந்து, கேமரா கோணங்கள் வரை அவரது பங்களிப்பு  இருக்கும்.

தற்போது ஆர்யா - அனுஷ்கா இணைப்பில் 'இரண்டாம் உலகம்' படத்தினை இயக்கி வருகிறார் செல்வராகவன். இருவருமே இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார்கள். முதல் முறையாக செல்வராகவன் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது. இங்கு படப்பிடிப்பு நடைபெறும் முதல் தமிழ்ப்படம் இது தான்.

வேகமாக இரண்டாம் உலகத்தை படைத்து வரும்  செல்வராகவன், படம் குறித்து  " பலரும் இக்கதையை படமாக்க முடியாது.. வேண்டுமானால் அனிமேஷன் படமாக எடுங்கள் என சொன்னார்கள். ஆனால், நாங்கள் இதை படமாகத்தான் எடுக்கிறோம். படம் எடுக்க வேண்டுமென்றால் உங்கள் லட்சியத்தின் மீது நீங்கள் நம்பிக்கை வைத்து அதைத் தொடர வேண்டும். சில நேரம் ஏதேனும் தவறாகலாம். ஆனால், நீங்கள் செய்ய நினைத்ததை செய்து முடித்திருப்பீர்கள் " என்று தெரிவித்து இருக்கிறார்.

வெவ்வேறு படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்ய  உதவியாக இருக்கும் ஜார்ஜியா அரசு செல்வராகவனுக்கு ஒரு ஹெலிகாப்டர் வழங்கியுள்ளது.

ரஜினிக்கு பிறந்த நாள் பரிசு : கோச்சடையான் ரிலீசை தள்ளி வைக்க சவுந்தர்யா திட்டம்



‘கோச்சடையான்' பட ரிலீஸை தள்ளிவைக்க வேண்டும். அப்படத்தை ரஜினிக்கு பிறந்த நாள் பரிசாக ரிலீஸ் செய்ய வேண்டும் என்று யோசனை கூறப்பட்டுள்ளது. ரஜினியின் இரட்டை வேட படங்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இதை கருத்தில் கொண்டு ஒற்றை வேடத்தில் உருவாக்கப்பட்டிருந்த ‘கோச்சடையான்' பட ஸ்கிரிப்ட்டை இரட்டை வேடத்துக்கு மாற்றினார் இயக்குனர் சவுந்தர்யா. ஆனால் இது பற்றி ரகசியம் காக்கப்படுகிறது. பட வட்டாரத்தில் விசாரித்தபோது சுவாரஸ்ய தகவல் கிடைத்தது.

மன்னர், இளவரசர் என்ற இரட்டை கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார். ஜாக்கி ஷெராப்பும், நாசரும் எதிரி நாட்டு மன்னர்கள். ஜாக்கி ஷெராப்புடன் மன்னர் ரஜினி மோதுகிறார். பின்னர் இந்த பிரச்னை அடுத்த ஜென்மத்திலும் தொடர்கிறது. அப்போது இளவரசர் ரஜினிக்கும், ஜாக்கியின் மகன் ஆதிக்கும் பகை ஏற்படுகிறது. இதன் முடிவு எப்படி அமைகிறது என்பது கிளைமாக்ஸ். மோஷன் கேப்ச்சர் என்ற புதிய தொழில்நுட்பத்தில் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. ஹாங்காங், லண்டன் மற்றும் தமிழ்நாடு, கேரளா ஆகிய இடங்களில் ஷூட்டிங் நடந்துள்ளது.

இப்படத்தை சமீபத்தில் ரஜினி பார்த்தார். சவுந்தர்யாவின் இயக்கத்தில் அவருக்கு முழுதிருப்தி ஏற்பட்டதையடுத்து பாராட்டினார். ரஜினியின் இமேஜ் ரசிகர்களை கவரும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளது பெரிய பிளஸ். மேலும் தீபாவளி தினத்தில் இப்படம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் டிசம்பர் மாதம் ரஜினியின் பிறந்த நாள் வருகிறது. பிறந்த நாள் பரிசாக ‘கோச்சடையான் படத்தை டிசம்பரில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று சவுந்தர்யாவிடம் நெருக்கமானவர்கள் யோசனை தெரிவித்துள்ளனர். இதையடுத்து ரிலீஸை தள்ளிவைப்பதா என்பது பற்றி ஆலோசித்து வருகிறார் சவுந்தர்யா.

ஜூலை 13-ல் அஜித்தின் பில்லா-2 ரிலீஸ்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!


Ajiths billa-2 confirmed release in july 13   அஜித் நடித்த பில்லா-2 படம் ஜூலை 13ம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார். அஜித், பார்வதி ஓமனக்குட்டன், ப்ரூனா அப்துல்லா நடிப்பில், சக்ரி டோல்ட்டி இயக்கத்தில், ஐ.என்.இ. இன்டர்நேஷனல் மற்றும் ஒய்டு ஆங்கிள் நிறுவனம் இணைந்து பிரம்மாண்டமான முறையில் தயாரித்துள்ள படம் பில்லா-2. இப்படம் முடிந்து மாதங்கள் சில ஆகிவிட்டன. கடந்த மே மாதமே ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளால் தள்ளிக்கொண்டு போனது.

இந்நிலையில், சமீபத்தில் இப்படத்திற்கு தணிக்கை துறை ஏ சான்று அளித்தது. இது பட குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் பட ரிலீஸ் மேலும் தள்ளிபோனது. இம்மாத இறுதியில் வெளியாகலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், படம் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர்.

இதுகுறித்து தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் வெளியிட்டுள்ள அறிக்கையில், பக்கா ஆக்ஷ்ன், த்ரில்லராக அஜித் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது பில்லா-2. வருகிற ஜூலை 13ம் தேதி படத்தை ரிலீஸ் செய்கிறோம். தமிழகம் முழுக்க சுமார் 500 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது என்று கூறியுள்ளார்.

ராதா மோகனின் அடுத்தபடம் கெளரவம்!


Radha Mohans next movie begins   அழகிய தீயே, அபியும் நானும், பயணம் போன்ற படங்களை இயக்கிய ராதா மோகன், இப்போது டூயட் மூவிஸ் சார்பில் கெளரவம் என்ற புதிய படத்தை இன்று(25.06.12) துவக்கி இருக்கிறார். படத்தின் நாயகனாக அல்லு அர்ஜூனாவின் தம்பி அல்லு சிரிஷ் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக இந்தியில் விக்கி டோனர் படத்தில் நடித்த யாமி கவுதம் நடிக்கிறார். மேலும் ஒரு முக்கிய ரோலில் பிரகாஷ்ராஜூம் நடிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழியிலும் உருவாகும் இப்படம், வழக்கமான ராதாமோகன் படம் போன்று இல்லாமல் கொஞ்சம் மாறுபட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. இன்று முதல் தொடர்ந்து மைசூரில் 35 நாட்களுக்கு படப்பிடிப்பு நடக்கிறது. அதனைத்தொடர்ந்து பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. மதன்கார்கியின் பாடல் வரிகளுக்கு தமன் இசையமைக்கிறார். ப்ரீதா ஒளிப்பதிவு செய்கிறார்.

நான் எப்போதும் ஒரே மாதிரிதான் இருப்பேன்! அர்ஜூன்


I am always stable says arjun     தமிழ், தெலுங்கு, இந்தி என பிஸியாக இருக்கும் அர்ஜூன் தற்போது மணிரத்னத்தின் கடல், வஸந்தின் மூன்று பேர் மூன்று காதல், வனயுத்தம், தெலுங்கில் ஒரு படம், இந்தியில் ஒரு படம் என அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தனது சினிமா வாழ்க்கை குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், நான் எப்போதுமே பரபரப்பாகத்தான் இருக்கிறேன். இந்த சினிமாவுக்குள் வந்து முப்பது வருஷம் ஆகி விட்டது. வெற்றி, தோல்வி என எல்லாம் சரி சமமாக பார்த்தாகி விட்டது. வெற்றியை தலையில் ஏற்றிக் கொள்ளவில்லை. தோல்வியில் துவண்டு விடவும் இல்லை. அப்படியேதான் இருக்கிறேன். நான் எப்போதுமே ஒரே மாதிரிதான் இருப்பேன். அதனால்தான் தொடர்ந்து இந்த சினிமாவில் இருக்க முடிகிறது. என்னுடன் வந்தவர்களில் நிறைய பேரை இங்கே பார்க்க முடியவில்லை. சில பேர் இருக்காங்க. அவ்வளவுதான். இப்போது நடிக்கிற படங்கள் எல்லாமே பிடித்திருக்கிறது. அர்ஜூனுக்கு ஏற்ற கேரக்டர்கள் இப்போதுதான் நிறைய வர ஆரம்பித்திருக்கின்றன. ஒரு விஷயம்... முன்பை விட சினிமா ரொம்பவே பிடித்திருக்கிறது. அதனால் சினிமாவுக்கும் என்னைப் பிடித்திருக்கிறது, என்று கூறியுள்ளார்.