
அழகிய தீயே, அபியும் நானும், பயணம் போன்ற படங்களை இயக்கிய ராதா மோகன், இப்போது டூயட் மூவிஸ் சார்பில் கெளரவம் என்ற புதிய படத்தை இன்று(25.06.12) துவக்கி இருக்கிறார். படத்தின் நாயகனாக அல்லு அர்ஜூனாவின் தம்பி அல்லு சிரிஷ் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக இந்தியில் விக்கி டோனர் படத்தில் நடித்த யாமி கவுதம் நடிக்கிறார். மேலும் ஒரு முக்கிய ரோலில் பிரகாஷ்ராஜூம் நடிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழியிலும் உருவாகும் இப்படம், வழக்கமான ராதாமோகன் படம் போன்று இல்லாமல் கொஞ்சம் மாறுபட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. இன்று முதல் தொடர்ந்து மைசூரில் 35 நாட்களுக்கு படப்பிடிப்பு நடக்கிறது. அதனைத்தொடர்ந்து பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. மதன்கார்கியின் பாடல் வரிகளுக்கு தமன் இசையமைக்கிறார். ப்ரீதா ஒளிப்பதிவு செய்கிறார்.
No comments:
Post a Comment