Tuesday, 26 June 2012

நீது சந்திரா கிரேக்க படத்தில் நடிப்பதால், ஆதிபகவன் ஷூட்டிங் பாதிப்பு. அமீர்




      நீது சந்திரா வெளிநாடு போனதால் ‘ஆதிபகவன் ஷூட்டிங் பாதித்தது என்றார் இயக்குனர் அமீர். இதுபற்றி அவர் கூறியதாவது: கோவாவில் கடைசியாக நடந்த ஆதிபகவன் ஷூட்டிங்கே இறுதிகட்டமாக நடந்து முடிவதாக இருந்தது. ஆனால் படத்தில் சண்டை காட்சி ஒன்று இடம்பெறுவது கதைக்கு அவசியம் என கருதினேன். இதற்கிடையே ஹீரோயின் நீது சந்திரா ஏற்கனவே கிரேக்க படமொன்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்ததால் அதில் நடிக்க சைப்ரஸ் சென்றுவிட்டார். 

மேலும் ஜெயம் ரவியும் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படத்தின் ஷூட்டிங்கில் நடிக்க சென்றார். இதனால் இருவரது கால்ஷீட் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. வரும் ஜூலை மாதம் 6ம் தேதி ஜெய்சல்மர் மற்றும் ஜெய்ப்பூரில் ஒரு சில சண்டை காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. அத்துடன் ஷூட்டிங் முடிகிறது. ஏற்கனவே பட ரிலீஸுக்கான மற்ற பணிகள் நடந்து வருகிறது. விரைவில் படம் ரிலீஸ் ஆகும். இவ்வாறு அமீர் கூறினார்.

விஸ்வரூபம் படத்தில் 11.1 அளவுக்கு ஹாலிவுட் தரத்தில் சவுண்ட் தொழில்நுட்பம்.


 கமல் நடித்து இயக்கும் 'விஸ்வரூபம்' படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள் நடக்கின்றன. இதன் டிரெய்லர் சமீபத்தில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. படத்தை ஹாலிவுட் தரத்துக்கு இணையாக உருவாக்க முயற்சிகள் நடக்கின்றன. 

இதன் சவுண்ட் தொழில் நுட்பத்தை 11.1 அளவுக்கு வைக்கப்போவதாக கமல் அறிவித்தார். இதுவரை இந்த அளவு சவுண்ட் தமிழ் படங்களில் இருந்தது இல்லை. முதல் முறையாக விஸ்வரூபம் படத்தில் சேர்க்கப்படுகிறது. இதற்காக கமல் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 

கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், மிக்சிங், ரீ ரிக்கார்டிங் போன்ற பணிகளும் ஹாலிவுட் ஸ்டூடியோக்களிலேயே நடக்க உள்ளது. ஹாலிவுட் நிபுணர்கள் பலர் விஸ்வரூபம் பட வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 

ஆகஸ்டு மாதம் படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடு நடக்கிறது. இப்படத்தில் கமல் கதக் நடன கலைஞராக வருகிறார். ஆண்ட்ரியா, பூஜாகுமார் ஜோடியாக நடிக்கின்றனர். பெரும் பகுதி படப்பிடிப்பு வெளிநாட்டிலேயே முடிந்துள்ளது.

அஜித் படப்பிடிப்பில் ரசிகர்கள் ரகளை: சென்னை திரும்பினர் படக்குழுவினர்!


Fans clash at ajiths shooting spot        நடிகர் அஜித், நயன்தாரா படப்பிடிப்பில், ரசிகர்களின் ரகளையால், பெங்களூருவில் நடந்த படப்பிடிப்பு, பாதியில் நிறுத்தப்பட்டது. படக்குழுவினர் சென்னை சென்றனர். பில்லா-2 படத்திற்கு பிறகு நடிகர் அஜித் ஏ.எம்.ரத்தினம் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கிறார். இதில், நடிகர் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விஷ்ணுவர்தன் டைரக்ஷன் செய்து வருகிறார். படத்துக்கு, இன்னமும் பெயரிடப்படவில்லை.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. பெங்களூருவில், பல இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு, கடந்த 18ம் தேதியிலிருந்து, படக்குழுவினர் பெங்களூவில் முகாமிட்டனர். பெங்களூரு கருடா மால் அருகே, ஒரு வீட்டில் படப்பிடிப்பு துவங்கியது. அஜித், நயன்தாரா வந்த தகவல் பரவியது. இதனால், அவர்களை பார்க்க ரசிகர்கள் கூடினர். படப்பிடிப்பு நடந்த வீட்டுக்குள், ரசிகர்கள் செல்ல முற்பட்டனர். இதனால், செக்யூரிட்டிகளுக்கும், ரசிகர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதில், அங்கிருந்த இரண்டு கார் கண்ணாடிகளை, ரசிகர்கள் அடித்து நொறுக்கினர். இடம் மாற்றம் படப்பிடிப்பு முடிந்து, தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்ற போது, அஜித்தின் காருக்கு, ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர். இதனால், மறு நாள் லொக்கேஷன், பெங்களூரு வெளிப்பகுதியான ஹெண்ணூருக்கு மாற்றப்பட்டது. அங்குள்ள பழமை வாய்ந்த சர்ச்சில், படப்பிடிப்பு ஆரம்பமானது. அங்கும், ரசிகர்கள் குவிந்தனர். ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். பலத்த பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடந்தது.

அஜித்தை பார்க்க விடாத போலீசாருடன், ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம், படப்பிடிப்பு முடிந்த அஜித், காரில் வரும் போது, அவரை பார்க்க வேண்டுமென, அவரது ரசிகர்கள் இருவர், பைக்கில் துரத்தி வந்தனர். ரிங்ரோட்டில் வரும் போது, அஜித்தின் காரை, "ஓவர் டேக் செய்து, அவரை பார்க்க முற்பட்ட ரசிகர்கள், நிலை தடுமாறி, அஜித் கார் முன், பைக்குடன் விழுந்தனர். அஜித் கார், உடனடியாக பிரேக் போட்டதால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால், கோபமடைந்த அஜித், பெங்களூருவில் படப்பிடிப்பு வேண்டாம். வேறு இடம் பார்த்து கூறுங்கள்; வருகிறேன் என கூறி, சென்னை சென்று விட்டார். இதை தொடர்ந்து, பல நாள் திட்டமிட்டு வந்த படக்குழுவினரும், பெங்களூருவை காலி செய்து விட்டு, சென்னை வந்துவிட்டனர்.

தமிழுக்கு வரும் மும்பை புதுவரவு நித்தி...!


Mubai based new actress in kaliyugam    பூக்களை பறிக்காதீர்கள் உள்ளிட்ட படங்களை இயக்கிய அழகப்பனின் மகனும், டைரக்டர் சசியின் உதவியாளருமான யுவராஜ் இயக்கத்தில், விரைவில் வெளிவர இருக்கும் படம் கலியுகம். இப்படத்தில் கதாநாயகியாக அறிமுமாகியுள்ளார் மும்பை மாடல் நித்தி டெய்லர். இந்தப்படம் குறித்து நித்தியிடம் நாம் கேட்டபோது, டொகோமோ போன் விளம்பரத்தில் நான் நடித்து இருத்தேன். அந்த விளம்பரத்தை பார்த்து இயக்குநர் யுவராஜ் எனக்கு இந்த பட வாய்ப்பை கொடுத்தார். என்னை பார்த்தால் நிறையபேர் ஸ்கூல் போற பெண் போல் இருக்கிறாய் என்கின்றனர். ஆனால் எனக்கு 21 வயசு என்று உண்மையை போட்டு உடைக்கிறார். வேறு ஏதும் பட அனுபவம் இருக்கா என்றால் தெலுங்கில் எமாயி வயசுக்கு வச்சுந்தா என்ற படம் ரிலீஸ் ஆக உள்ளது. இன்னும் சில தமிழ் படங்கள் பேசிக்கொண்டு இருக்கிறேன் என்றவரிடம் கலியுகம் படத்தில் உங்க ரோல் என்ன என்றால் மாடர்ன் பெண்ணாக இருக்கும் என்னை அப்படியே கிராமத்து சாயலில் இயக்குநர் மாற்றிவிட்டார். தமிழ் அதிகம் தெரியாததால், கலியுகம் படிப்பிடிப்புக்கு முன்பே கொஞ்சம் பயிற்சியும் எடுத்தேன் என்று சொல்லும் நித்திக்கு நிறைய நல்ல நல்ல தமிழ் படங்களில் நடிக்க ஆசை இருக்காம்.

Monday, 25 June 2012

பவர் ஸ்டாரிடம் ஃபைனான்ஸ் வாங்கும் சிம்பு?


       கோடம்பாக்கத்தின் கொசுக்கடிகளில் முக்கியமானது பவர் ஸ்டார் சீனிவாசனின் பவர்ஃபுல் கடி!

இவரது அலும்புக்கு அளவே இல்லாத நிலையில், இவருக்காக ஒரு கதை எழுதி, அதில் பவர் ஸ்டாருடன் நடித்து படத்தை இயக்கவும் போவதாக அறிவித்து அதிர்ச்சியை கிளப்பியிருந்தார் காமெடி ஸ்பெஷலிஸ்டான சந்தானம்! தற்போது சந்தானம் தனது கலையுலக குருவாகக் கருதும் சிம்புவை(சந்தானத்தை மன்மதன் படத்தில் அறிமுகபடுத்தியதால் சந்தானம் சிம்புவை “குரு” என்றே அழைக்கிறார்) பவர் ஸ்டாரிடம் அழைத்துச் சென்று அவரிடம் கோடிக்கணக்கில் ஃபைனான்ஸ் பெற ஏற்பாடு செய்திருப்பதாக நம்பகமான தகவல் கிடைக்கிறது!

இதை உறுதி செய்யும் விதமாக, சிம்பு,ஹன்ஷிகா, சந்தானம், விடிவி கணேஷ் நடிக்கும் வாலு படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கு சீனிவாசனை வரவழைத்து சிம்புவை சந்திக்க வைத்திருகிறார். ஆனால் மீடியாவிடம் சிம்புவை வாழ்த்த வந்தார் என்று நழுவுகிறார்கள். ஆனால் சிம்புவும், சினிவாசனும் ஒரே உடை அணிந்திருப்பது ஏன் என்று தெரியாமல் சட்டையை பிய்த்துக் கொள்கிறார்கள் கோலிவுட் நிருபர்கள்! கத்தரிக்காய் முற்றி கடைக்க வராமல் போய்விடும் என்பது இன்னும் சில இளம் கோலிவுட் பட்ஷிகளின் கணக்கு!

ரஜினியும் கமலும் என் வழிகாட்டிகள்..அவர்கள் வழியில் கேரக்டருக்காக எதையும் செய்வான் இந்த ஷாம்!



     சினிமாவில் இதுவரை யாரும் செய்யாத ஒரு காரியத்தை செய்திருக்கிறார் நடிகர் ஷாம்.

படத்தின் கேரக்டருக்காக சில ஹீரோக்கள் தாடியும் நீண்ட தலை முடியும் வளர்த்து வித்தியாசம் காட்டுவார்கள். அல்லது, மொட்டை அடிப்பார்கள். உடம்பை ஏத்துவதும் இறக்குவதும் தவிர, சில சண்டைக் காட்சிகளில் ரிஸ்க் கூட எடுப்பார்கள்.

ஆனால் இதிலிருந்து வித்தியாசப்பட்டு நடிகர் ஷாம், கட்டையால் கண்ணுக்கு கீழே ஓங்கி அடித்தால் கண்கள் எப்படி வீங்குமோ அவ்வளவு பெரிதாக வீங்க வைத்து நடித்திருக்கிறார். 6 என்ற படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக தமிழ் சினிமாவில் யாரு எடுத்திராத ரிஸ்கை எடுத்திருக்கிறார் ஷாம்.

கிட்டத்தட்ட பத்து நாட்கள் தூங்காமல் இருந்து அந்த தோற்றத்தை கொண்டு வந்தேன்.. வி இசட். துரை இயக்கத்தில் இப்போது 6 என்ற படத்தில் நடித்து வருகிறேன்.

ஆறு கெட் அப், ஆறு மாநிலங்கள், ஆறு மெழுகுவர்த்திகள் என்று ஆறு அர்த்தம் கொண்ட சம்பவங்கள் இடம்பெறும்.

இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக 89 கிலோ எடையிலிருந்து 72கிலோவாக எடையைக் குறைத்தேன். கிட்டத்தட்ட ஒருவருடம் தாடியும் நீண்ட முடியுமாக ஆறு மாநிலங்களில் சுற்றித்திரிந்து இந்த படத்தை உருவாக்கியுள்ளோம்.

இதையும் தாண்டி படத்திற்கு இன்னும் எபெக்ட் தேவை என டைரக்டர் சொல்லிக்கொண்டே இருந்தார். அப்போதுதான் இயக்குனர் துரையிடம், நான் கண்களை இப்படி வீங்க வைத்து வருகிறேன். அதற்கு ஒரு பத்து நாள் தூங்காமல் இருக்கவேண்டும் என்றேன். அவர், அது முடியுமா? ஆபத்தாச்சே? மற்ற இடமென்றால் பரவாயில்லை.. கண்ணில் போய் ரிஸ்க் எடுக்க வேண்டுமா? வீக்கம் குறையாவிட்டால் வாழ்க்கை பூரா கண்தெரியாமல் போக நேரிடும். தவிர நீ ஒரு நடிகன். நடிகனுக்கு முகம் தான் முக்கியம் . அந்த அழகு இந்த படத்துக்கு பிறகும் வேண்டும். வேண்டாம் ஷாம் ரிஸ்க் என்றார்.

இருந்தாலும் இந்த படத்தில் என் முழு அர்ப்பணிப்பையும் காட்டி இருக்கேன். இந்த படம் எனக்கு ரொம்ப முக்கியம். அதனால் செய்தே தீருவேன் என்று பிடிவாதமாக சொல்லிவிட்டு சென்றுவிட்டேன்.

இடையில் ஒருநாள் இயக்குனருக்கு போன் செய்து இன்னும் நான்கு நாட்கள் கழித்து ஷூட்டிங் வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி வைத்துவிட்டேன்..

எல்லோரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் தயாராக காத்திருக்க நான் போய் இறங்கினேன். என் கண்ணைக் கண்ட அனைவருக்கும் அதிர்ச்சி. சில மணி நேரத்துக்கு என் கண்களைப் பார்க்கவே பயந்தார்கள்.

கடவுள் புண்ணியம் மீண்டும் என் கண்கள் பழைய நிலைக்கு ஒரு வாரம் கழித்து திரும்பியது. இல்லையென்றால் நினைத்துப்பார்க்கவே விபரீதமாக இருக்கிறது. இதில் ஒரு துளி மேக் அப் கூட நாங்கள் பயன்படுத்தவில்லை. சினிமாதான் எனக்கு எல்லாம். அதற்காக ஷாம் எதையும் செய்வான் என்பதை இந்த 6 படம் உலகிற்கு சொல்லும்.

கேரக்டருக்காக மெனக்கெடும் விஷயத்தில் ரஜினி சார், கமல் சார் இருவருமே என் வழிகாட்டிகள். எந்திரனில் ரஜினி சார் பட்ட கஷ்டங்களைப் பார்த்து பிரமித்தேன். அதே போல, கமல் சார் தன் கேரக்டருக்காக எத்தனையோ ரிஸ்குகளை எடுத்தவர். அவர்கள் வழியில் பயணிக்க முயற்சிக்கிறேன், என்றார்.

படத்திற்காக தாடியும் மீசையுமாக உடல் மெலிந்து காணப்பட்ட அவரை காண அவர்கள் அம்மாவுக்கும் மனைவிக்கும் தாங்க முடியவில்லை. அம்மா பல நேரம் அழுதே விட்டார்கள் என்பதால் ஆறு மாதம் யாரையும் பார்க்காமல் இருந்துள்ளார். மனைவியும் அம்மாவையும் பெங்களூருக்கு அனுப்பிவிட்டு தான் மட்டும் சென்னைக்கும் ஷூட்டிங்குக்கும் நடுவே மாதங்களை ஓட்டியுள்ளார்.

தீபிகா படுகோனேவால் தாமதமாகும் கோச்சடையான் வெளியீடு.



   நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் கோச்சடையான் படமானது ரஜினி இரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உள்ளது.நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு திடீரென ஏற்பட்ட உடல் சுகயீனம் காரணமாக சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று உடல் நலம் தேறிய பின்னர் அவர் நடிக்கும் முதல் படம் என்பதால் அவருடைய இரசிகர்களிடையே இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா இயக்கத்திலும் இயக்குனர் ரவிகுமாரின் மேற்பார்வையிலும் தயாராகி வரும் கோச்சடையான் படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரும் என அறிவித்திருந்தனர்.

ஆனால் இப்போது நமக்கு கிடைத்த தகவலின் படி கோச்சடையான் வெளியாகுவது தாமதமாகலாம் எனத் தெரிகிறது.மேற்படி தாமதத்திற்கு காரணம் கோச்சடையான் படத்தில் ரஜினி ஜோடியாக நடிக்கும் தீபிகா படுகோனே தான் என செய்திகள் தெரிவிக்கின்றன.

அண்மையில் தமிழில் வெளியான சிறுத்தை படமானது பிரபுதேவா இயக்கத்தில் ரவுடி ரத்தோர் என்ற பெயரில் இந்தியில் வெளியாகியுள்ளது.இப்படமானது மிக பெரியளவில் வெற்றி பெற்றதை அடுத்து இப்படத்தில் நடித்த சோனாக்சி சின்காவின் மதிப்பு இந்தி சினிமா உலகில் அதிகரித்துள்ளது.இதேவேளை சோனாக்சி சிங்கா நடித்துக்கொண்டிருக்கும் சன் ஒப் சர்தார் படமானது வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது.

தீபிக்காவோடு ஒப்பிடுகையில் சோனாக்சி சிங்காவிற்கு அதிக மதிப்பு இந்தி உலகில் இருப்பதால், மேற்படி கோச்சடையான் படத்தை இந்தியில் வெளியிடும்போது பாதிப்பு ஏற்படலாம் எனக் கருதியே மேற்படி கோச்சடையான் படத்தை வெளியிடுவதை பிற்போட்டுள்ளனர் இப்படக் குழுவினர்