
பூக்களை பறிக்காதீர்கள் உள்ளிட்ட படங்களை இயக்கிய அழகப்பனின் மகனும், டைரக்டர் சசியின் உதவியாளருமான யுவராஜ் இயக்கத்தில், விரைவில் வெளிவர இருக்கும் படம் கலியுகம். இப்படத்தில் கதாநாயகியாக அறிமுமாகியுள்ளார் மும்பை மாடல் நித்தி டெய்லர். இந்தப்படம் குறித்து நித்தியிடம் நாம் கேட்டபோது, டொகோமோ போன் விளம்பரத்தில் நான் நடித்து இருத்தேன். அந்த விளம்பரத்தை பார்த்து இயக்குநர் யுவராஜ் எனக்கு இந்த பட வாய்ப்பை கொடுத்தார். என்னை பார்த்தால் நிறையபேர் ஸ்கூல் போற பெண் போல் இருக்கிறாய் என்கின்றனர். ஆனால் எனக்கு 21 வயசு என்று உண்மையை போட்டு உடைக்கிறார். வேறு ஏதும் பட அனுபவம் இருக்கா என்றால் தெலுங்கில் எமாயி வயசுக்கு வச்சுந்தா என்ற படம் ரிலீஸ் ஆக உள்ளது. இன்னும் சில தமிழ் படங்கள் பேசிக்கொண்டு இருக்கிறேன் என்றவரிடம் கலியுகம் படத்தில் உங்க ரோல் என்ன என்றால் மாடர்ன் பெண்ணாக இருக்கும் என்னை அப்படியே கிராமத்து சாயலில் இயக்குநர் மாற்றிவிட்டார். தமிழ் அதிகம் தெரியாததால், கலியுகம் படிப்பிடிப்புக்கு முன்பே கொஞ்சம் பயிற்சியும் எடுத்தேன் என்று சொல்லும் நித்திக்கு நிறைய நல்ல நல்ல தமிழ் படங்களில் நடிக்க ஆசை இருக்காம்.
No comments:
Post a Comment