இதுகுறித்து டைரக்டர் குமாரவேலு கூறுகையில், அலைகள் அதிகம் இருப்பதாகவும் மணல் திட்டில் படப்பிடிப்பு நடத்த போக வேண்டாம் என்றும் பலர் எச்சரித்தனர். அதை கேட்காமல் போய் சிக்கி கொண்டோம். படகு கவிழ்ந்ததும் கிஷோர் மற்றும் ரத்தினவேலு இருவரும் நீச்சல் அடித்தபடி தத்தளித்தனர். ஆனால் எனக்கு நீச்சல் தெரியாது என்பதால் ஒரு கட்டையை பிடித்து தாங்கி நின்றேன். அதேசமயம் இப்படத்தில் நடிக்கும் 8 வயது சிறுவன் பிருதிவிராஜையும் நீரில் மூழ்காமல் காப்பாற்ற போராடினேன். மீனவர்கள் வந்து அனைவரையும் காப்பாற்றினர். இதனால் நாங்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினோம், என்றார்.
Tuesday, 26 June 2012
படகு கவிழ்ந்தது! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கிஷோர்-சினேகா!
இதுகுறித்து டைரக்டர் குமாரவேலு கூறுகையில், அலைகள் அதிகம் இருப்பதாகவும் மணல் திட்டில் படப்பிடிப்பு நடத்த போக வேண்டாம் என்றும் பலர் எச்சரித்தனர். அதை கேட்காமல் போய் சிக்கி கொண்டோம். படகு கவிழ்ந்ததும் கிஷோர் மற்றும் ரத்தினவேலு இருவரும் நீச்சல் அடித்தபடி தத்தளித்தனர். ஆனால் எனக்கு நீச்சல் தெரியாது என்பதால் ஒரு கட்டையை பிடித்து தாங்கி நின்றேன். அதேசமயம் இப்படத்தில் நடிக்கும் 8 வயது சிறுவன் பிருதிவிராஜையும் நீரில் மூழ்காமல் காப்பாற்ற போராடினேன். மீனவர்கள் வந்து அனைவரையும் காப்பாற்றினர். இதனால் நாங்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினோம், என்றார்.
அடுத்த எம்ஜிஆர் பட்டம் அதிர்ச்சியில் சகுனி கார்த்தி!
இப்படி ஒரு மேடையில் அவரை வைத்துக் கொண்டே ஒரு தியேட்டர் உரிமையாளர் சொல்ல, 'பத்த வச்சுட்டீயே பரட்டை'யானது அந்த ஏரியா. இந்த புகழ் வார்த்தையெல்லாம் கேட்டு ஏமாந்திராதீங்க கார்த்தி. ஒரு ஹீரோ அரசியலுக்கு வரணும்னா அவருக்கு எப்போதும் மக்களை பற்றிய அக்கறையும் சிந்தனையும் இருக்கணும். சினிமாவை பொறுத்தவரை நீங்க வசூல் ஹீரோ. அந்த சந்தோஷம் என்னைக்கும் நீடிக்கணும் என்று வாழ்த்தினார் தமிழ் திரைப்பட விநியோகஸ்தர் சங்க செயலாளர் கலைப்புலி சேகரன்.
நாலு படம் நல்லா ஓடுச்சுன்னா அவரை அரசியலுக்கு வான்னு அழைக்கிறதை இந்த மேடையோட நிறுத்திக்கணும் என்று சுத்தியலை ஒரே போடாக போட்டார் நடிகர் நாசர். இவ்வளவு களேபரத்துக்கும் காரணமான தியேட்டர் உரிமையாளர் யார் தெரியுமா? வடபழனி கமலா தியேட்டர் உரிமையாளர் சிதம்பரம் அவர்களின் புதல்வர் வள்ளியப்பன்.
1154 தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்துவிட்டு, மூன்றே நாளில் தனது முந்தைய படமான சிறுத்தை ரெக்கார்டை முறியடித்த கார்த்தி, தேரை இழுத்து தெருவுல விட்டுட்டீங்களே... என்கிற மிரட்சி பார்வையோடு அமர்ந்திருந்தார் அதே மேடையில். கொஞ்சம் வெளிப்படையாகவே தனது படத்தை பற்றி பேச ஆரம்பித்த கார்த்தி, அங்கிருந்த நிருபர்கள் யாரும் எந்த கேள்வியும் கேட்டுவிட இடம் கொடுக்காதவாறு தனது பேச்சை முடித்தார்.
இந்த படம் தூள், முதல்வன் சாயலில் இருக்கும் என்றெல்லாம் ஆரம்பத்தில் நாங்க பேசினோம். அந்த படங்களின் சாயல் இருந்துட்டு போகட்டும். மக்கள் ரசிச்சா போதும் என்கிற முடிவுக்கு பிறகு வந்தோம் என்றார் வெளிப்படையாக. ஆந்திராவிலும் இப்படம் பெரிய வசூலை குவித்திருப்பதால், அங்கேயும் இப்படி ஒரு பிரஸ்மீட்டை கூட்டி வசூல் நிலவரத்தை பகிர்ந்து கொண்டாராம்.
நல்லவேளை, இவரை எம்ஜிஆராக்குகிற ஜால்ராக்கள் அங்கும் போகவில்லை. போயிருந்தால் அடுத்த என்.டி.ஆர் நீங்கதான்னு சொல்லி பீதிய கிளப்பியிருப்பாங்களோ?
பிரேம்ஜிக்கு சூடு பியாவின் பேட்டி
குழந்தை இன்னும் கொஞ்சம் அழகாக இருந்திருந்தால் உலகம் என்னென்ன விளைவுகளை சந்தித்திருக்குமோ? பிரேம்ஜி அமரன் தமிழ்சினிமாவில் ஒரு காதல் மன்னனாக வலம் வந்து கொண்டிருப்பதை கேள்விப்பட்டு வயிற்றில் யாகம் வளர்க்கும் பல இளம் ஹீரோக்களின் புலம்பல்தான் இந்த செய்தியின் முதல் வரி.
மாலை நேர பார்ட்டிகள் எதுவும் பிரேம்ஜியின் 'உவ்வே...' இல்லாமல் முடிவதேஇல்லையாம். அந்தளவுக்கு எல்லா பார்ட்டிகளுக்கும் இன்வைட் பண்ணப்படுகிறார் அவர். முக்கியமாக சோனாவின் பார்ட்டிகளில் பிரேம்ஜியின் அலம்பல் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.
இது போதாதென்று எனக்கும் நடிகை பியாவுக்கும் லவ் என்று இவர் தனது ட்விட்டரில் தெரிவிக்கப் போக, வரக்கூடிய ஒன்றிரண்டு வாய்ப்புகளும் தவறிப்போனது பியாவுக்கு. மீட்டரில் சூடு போடப்பட்ட எந்த நடிகையையும் தங்கள் படங்களில் புக் பண்ண பிரியப்பட மாட்டார்கள் இயக்குனர்கள். அந்த லாஜிக்கின்படி எல்லா வாய்ப்புகளையும் தவறவிட்ட பியா, இப்போதுதான் வெளிப்படையாக பேட்டி கொடுக்கிற அளவுக்கு தெளிவாகியிருக்கிறார்.
எனக்கும் பிரேம்ஜிக்கும் லவ்வும் இல்ல ஒண்ணும் இல்ல. யாரும் நம்ம வேண்டாம் என்று கூறியிருக்கும் அவர், கடுமையாக பிரேம்ஜியை சாடியும் இருக்கிறார்.
சம்சாரி வாழ்வுக்குதான் ஒரு பசுமாடு. பிரேம்ஜியை இந்த பேட்டியெல்லாம் அடக்கிவிடுமா என்ன?

சிம்பு – தனுஷின் ஆச்சரிய ஒற்றுமை (வீடியோ இணைப்பு)
தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழா (சீமா) – 2012, அண்மையில் டுபாய் நாட்டில் நடைபெற்றது.
இதில் தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த விக்ரம், சிம்பு, தனுஷ், த்ரிஷா, சமீரா ரெட்டி, ஸ்ரேயா, அமலா போல், குஷ்பு என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இவ்விழாவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்கள் சிம்பு – தனுஷ் என்றே கூறவேண்டும்.
கடந்த காலங்களாக தமிழ் சினிமா உலகில் எதிரிகளாக சித்தரிக்கப்பட்டு பல்வேறு செய்திப் பரபரப்புக்களுக்கும் அடிபட்டவர்கள் இவ்விருவருமே.
இந்நிலையில், இவர்கள் இருவரும் இந்த விருது விழாவில் நடந்துகொண்ட விதம் அனைவருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது எனலாம்.
இந்த விருது விழாவின் போது தென்னிந்திய சினிமாவின் உணர்வுபூர்வமான நாயகன் விருது நடிகர் தனுஷிற்கு வழங்கப்பட்டது.
விருதினைப் பெற்றுக்கொண்டு மேடையிலிருந்து வெளியேற முற்பட்ட தனுஷிடம் ‘கொலவெறி’ பாடல் பாடுமாறு ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
உடனே, சரி பாடுகிறேன் என்று கூறிய தனுஷ், தன்னுடன் மற்றுமொருவர் இந்தப் பாடலை இந்த மேடையில் என்னுடன் சேர்ந்து பாடுவார் என்று அறிவித்தார்.
அவரது இந்த அறிவிப்பைக் கேட்டதும், யாரோ ஒருவர்தான் மேடையேறப் போகிறார் என்று திரையுலகத்தினரும் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் தருவாயில் மேடையேறியவர் சிம்பு.
தவிர, ‘சிம்பு என்னை விட சிறந்த பாடகர், சிறந்த நடனக் கலைஞர்’ என்றும் சிம்புவைப் பற்றி புகழாரம் சூட்டியுள்ளார் தனுஷ். அத்துடன், ‘எல்லோரும் எங்களை எதிரிகள் என்று நினைக்கிறார்கள். ஆமாம், நாங்கள் எதிரிகள் தான். ஆனால் அது வெளியே. உள்ளுக்குள் நாங்கள் நண்பர்கள்’ என்று கூறி இருவரும் ஒருகருக்கொருவர் தோள் மீது கை போட்டுக்கொண்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவ்விருவரும் இணைந்து கொலவெறி பாட, அவர்களின் பாடலையும் நட்பையும் கை தட்டி ரசித்துக்கொண்டிருந்தார் நடிகர் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா ரஜினி.
படப்பிடிப்பின்போது கடலில் விழுந்து மூழ்கிய நடிகை சினேகா: அதிர்ச்சியில் படக்குழு!
குமாரவேலு இயக்கத்தில் நடிகை சினேகா ஹரிதாஸ் எனும் திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
ராமேஸ்வரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. நேற்று தனுஷ்கோடி அருகே கடலில் தீவு போல் உள்ள சிறிய மணல் மேட்டில் பாடல் காட்சியொன்றை படமாக்கினர். இதற்காக சினேகா, கிஷோர், இயக்குனர் குமாரவேலு, ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு உள்ளிட்டோர் படகில் மணல் தீவுக்கு சென்றனர்.
கிஷோர், சினேகா பாடல் காட்சியை படமாக்கி விட்டு அனைவரும் படகில் கரைக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது சினேகா வந்த படகு அலையில் சிக்கி கவிழ்ந்தது.
அனைவரும் தண்ணீரில் தத்தளித்து உயிருக்கு போராடினார்கள். இதை கண்ட மீனவர்கள் விரைந்து சென்று காப்பாற்றினார்கள்.
இதுகுறித்து இயக்குநர் குமாரவேலு கூறுகையில், அலைகள் அதிகம் இருப்பதாகவும் மணல் திட்டில் படப்பிடிப்பு நடத்த போக வேண்டாம் என்றும் பலர் எச்சரித்தனர். அதை கேட்காமல் போய் சிக்கி கொண்டோம்.
படத்தில் நடிக்கும் சிறுவன் பிருதிவிராஜையும் நீரில் மூழ்காமல் காப்பாற்ற போராடினேன். மீனவர்கள் வந்து அனைவரையும் காப்பாற்றினர். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினோம். சினேகாதான் இதில் ரொம்பவே அதிர்ச்சியடைந்துவி்ட்டார்,” என்றார்.

சீமான் இயக்கத்தில் ஜீவா
ஜீவா, இயக்குனர் சீமானின் இயக்கத்தில் பகலவன் படத்தில் நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் நடிப்பதாக இருந்த ‘பகலவன்’ படத்தின் கதையை ஜீவா கேட்டுள்ளார்.
படத்துக்கு பொருத்தமான நாயகனாக ஜீவா இருப்பார் என்று தயாரிப்பாளரிடம் சீமான் சொல்லியிருக்கிறார்.படத்தின் நாயகியை தெரிவு செய்ய கொலிவுட்டின் முன்னணி நாயகிகளிடம் பேசி வருகிறார்கள்.
படத்தில் நடிக்கும் நடிகர்கள்-நடிகையர் மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்கள் பட்டியல் தயாரான பிறகு, விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று பட வட்டாரம் கூறுகிறது.
தற்போது ஜீவா, மிஷ்கின் இயக்கத்தில் முகமூடி, கௌதம் இயக்கத்தில் நீதானே என் பொன் வசந்தம் படங்களில் நடித்து வருகின்றார்.இப்படங்களை முடித்து விட்டு, பகலவனில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
விஸ்வரூபம் இரண்டாம் பாகம் வருவது நிச்சயம். கமல் பேட்டி
கமலுடன் ஆண்ட்ரியா, பூஜாகுமார் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். இப்படத்தின் FIRST LOOK-ஐ கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட்டார் கமல்.
இப்படத்தில் கமல் இரட்டை வேடத்தில் எல்லாம் நடிக்கவில்லையாம். விஸ்வநாத் (எ) விஸ் என்ற பாத்திரத்தில் நடித்து இருக்கிறார். விஸ்வநாத் பாத்திரத்தில் கதக் நடன கலைஞராகவும், விஸ் பாத்திரத்தில் FBI ஏஜெண்டாகவும் நடித்து இருக்கிறார்.
'விஸ்வரூபம்' படத்திற்காக இதுவரை எடுத்த காட்சிகள் மிகவும் அதிகமாக இருப்பதால் அதில் சில காட்சிகளை பயன்படுத்தி 'விஸ்வரூபம்' படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பயன்படுத்த இருக்கிறார் கமல் என்று செய்திகள் வெளியாகின.
இச்செய்தி குறித்து கமல் தெரிவித்து இருப்பது " விஸ்வரூபம் படத்தினைத் துவங்கும் போதே, இப்படம் மக்களிடையே பலத்த வரவேற்பைப் பெறும் என்று பரிபூரணமாக நம்பி தான் துவக்கினோம். இரண்டாம் பாகமும் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு 40 % முடிவடைந்துவிட்டது.
இந்திய திரையுலகில் இதுவரை விஸ்வரூபம் மாதிரியான கதைகள் வந்தது இல்லை. தேசிய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்து இப்படத்தில் கையாண்டுள்ளோம் " என்று தெரிவித்து இருக்கிறார்
Subscribe to:
Posts (Atom)