Monday, 23 July 2012

ரோட்டோர இட்லிக்கடையில் சாப்பிடும் ரஜினிகாந்த்.


    போயஸ் கார்டனில் உள்ள ரோட்டோர இட்லி கடையில் அம்பாசிடர் கார் நின்றால் அதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கிறார் என்று அர்த்தம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வீடு போயஸ் கார்டனில் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. அந்த பகுதியில் உள்ள ஒரு ரோட்டோர இட்லி கடையில் இட்லி வாங்கி சாப்பிடுவது ரஜினிகாந்துக்கு மிகவும் பிடிக்கும். அதனால் எப்பொழுதெல்லாம் இட்லி சாப்பிட ஆசை வருகிறதோ அப்போதெல்லாம் அம்பாசிடர் காரில் அந்த கடைக்கு சென்றுவிடுவார்.

சமீபத்தில் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்றதையடுத்து அந்த இட்லி கடைக்கு செல்வதை நிறுத்தி வைத்திருந்தார். ஆனால் அந்த கடை இட்லியின் ருசியை அவரால் மறக்க முடியவில்லை போன்று. அதனால் மீண்டும் அம்பாசிடரில் அந்த கடைக்கு சென்று சாப்பிட ஆரம்பித்துவிட்டார்.

நீங்கள் போயஸ் கார்டன் பக்கமாக போகும்போது ரோட்டோர இட்லி கடை அருகே அம்பாசிடர் கார் நின்றால் அதற்குள் கண்டிப்பாக ரஜினிகாந்த் இருப்பார்.

மனைவி,குழந்தைகளுக்காக நண்பர்களை மறந்துவிட்டேன். சூர்யா



   மனைவி குழந்தையுடன் நேரம் செலவிடுவதற்காக நண்பர்களுடன் பழகுவதை நிறுத்திவிட்டேன் என்றார் சூர்யா. இன்று பிறந்த நாள் கொண்டாடும் சூர்யா, கூறியதாவது: மாற்றான் படத்தில் ஒட்டிப்பிறந்த சகோதரர்கள் வேடத்தில் நடிக்கிறேன். தொடர்ந்து படப்பிடிப்பில் இருப்பதால் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க முடியவில்லை. என்னுடைய வேலையை பொறுத்தவரை முழுநேரமும் நான் செலவிட வேண்டி இருப்பதை உணர்கிறேன். அதேநேரம் நான் பொறுப்பான தந்தையாகவும் இருக்க விரும்புகிறேன். ஷூட்டிங்கில் இடைவெளி கிடைத்தால் உடனே ஜோ, தியா, தேவ் (ஜோதிகா மற்றும் பிள்ளைகள்) ஆகியோருடன் நேரம் செலவழிப்பேன்.
    நான் எனது நண்பர்களுடன் எங்கும் வெளியில் செல்வதில்லை. சொல்லப்போனால் அவர்களுடன் போனில்கூட பேசுவதில்லை. உடற்பயிற்சி செய்வதென்றால்கூட என் குழந்தைகள் விழிப்பதற்கு முன்பே செய்து முடித்துவிடுவேன். அவர்கள் எழுந்ததும் அவர்களுடனேயே இருப்பேன். அவர்களுக்காக என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறேன். பள்ளி யுனிபார்ம் அணிவிப்பது, சாப்பாடு ஊட்டுவது, பள்ளிக்கு அழைத்துச் செல்வது என ஜோவுக்கு உதவியாக இருந்து செய்வேன்.

ஒய்வெடுக்க அமெரிக்கா சென்ற அமலா பால்!



Amala paul  in america!
      நடிகை அமலா பால் தனது பெற்றோருடன் அமெரிக்கா சென்று 2 வாரம் ஓய்வெடுத்துள்ளார். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள அமலாபால் ஒய்வுக்காக அமெரிக்கா சென்றார். அங்கு வட அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் நடத்திய நிகழ்ச்சியொன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் அங்கேயே தங்கி இருந்து பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தார். பெற்றோரும் அவருடன் சென்று இருந்தனர். தற்போது அமெரிக்க ஓய்வை முடித்து விட்டு சென்னை திரும்பியுள்ளார்.

அமெரிக்கா சென்று வந்தது குறித்து அமலாபால் அளித்துள்ள பேட்டியில், அமெரிக்கா சென்றதும், அங்குள்ள எனது உறவினர்களை சந்தித்ததும் இனிய தருணங்களாக அமைந்தது. என் பெற்றோரை நிறைய இடங்களுக்கு அழைத்து சென்றேன். எனது தலை முடியையும் வித்தியாசமாக மாற்றியுள்ளேன், என்று கூறியுள்ளார்.

த்ரிஷாவின் அறைக்கு 13 படிகளாம்! ஒரு படிக்கு ரூ. 2 லட்சமாம்!!



Trisha has decorated costly marbles!        த்ரிஷா பிறந்த போதே செல்வச் செழிப்புடன் பிறந்தவர். இவர் தனது வீட்டை தன் விருப்பத்திற்கேற்ப பல அலங்காரங்களை செய்திருக்கிறார். அதில் லேட்டஸ்டாக தனது வீட்டுக்குள்ளிருந்து தனது அறைக்குப் போக உள்ள 13 மாடிப்படிகளையும் பெரும் பொருட் செலவில் மார்பிள் கற்களால் தகதகக்க வைத்துள்ளாராம்.

திரிஷாவின் அறை உள்ள மாடிக்குப் போக கீழ் தளத்திலிருந்து 13 படிகளைக் கடக்க வேண்டுமாம். இந்தப் படிகளை விலை உயர்ந்த மார்பிளால் அலங்கரித்துள்ளாராம் திரிஷா. ஒவ்வொரு படிக்கும் ரூ. 2 லட்சம் மதிப்பிலான மார்பிளைப் போட்டு ஜொலிக்க விட்டுள்ளாராம் திரிஷா.

கமல்ஹாசனுக்கு ஹாலிவுட் இயக்குனர் பாராட்டு!



Kamal Hassan praised Hollywood director!
             நடிகர் கமல்ஹாசனை ஹாலிவுட் இயக்குனர் குயன்டின் டரான்டினோ பாராட்டியுள்ளார். புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனரான குயன்டின் டரான்டினோ தன்னுடைய கில் பில் சீரிஸ் பட காட்சிகள் சிலவற்றை கமலஹாசன் நடித்த ஆளவந்தான் படத்தை பார்த்து ஊக்கம் பெற்று உருவாக்கியதாக கூறியிருக்கிறார். பல்ப் பிக்ஷன் மற்றும் இன்குலோரியஸ் பாஸ்டர்ஸ் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் குயன்டின் ட்ரான்டினோ. இவர், பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷயப்பியிடம் பேசிக் கொண்டிருந்தபோது, இந்த தகவலை தெரிவித்து இருக்கிறார்.

கமலஹாசன் நடித்த ஆளவந்தான் படத்தை பார்த்து ஊக்கம் பெற்று கில் பில் சீரிஸ் படத்தில் வரும் வன்முறை மிக்க காட்சிகளை காமிக் வடிவில் அமைத்ததாக அவர் கூறியிருக்கிறார்.

நான் ஈ படத்திற்கு அஜித் பாராட்டு!



Naan Ee praise for Ajith!
          நான் ஈ படத்தினை நடிகர் அஜித் பாராட்டியுள்ளார். நானி, சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நான் ஈ படத்தின் இயக்குனர் ராஜமௌலிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. தென்னிந்திய திரையுலகினர் அனைவரும் படத்தை பார்த்துவிட்டு, இயக்குனரை தொலைபேசியில் அழைத்து புகழ்ந்து தள்ளுகின்றனராம். நடிகர்களில் ரஜினிகாந்த், வெங்கடேஷ், நாகர்ஜூனா, சித்தார்த், மகேஷ், பிரபாஸ், ரவிதேஜா, ராணா, விக்ரம், கார்த்தி, தனுஷ் ஆகியோரும் இயக்குனர்களில் ராம்கோபால் வர்மா, ஷங்கர், லிங்குசாமி ஆகியோரும் படத்தை பார்த்துவிட்டு ராஜமௌலியை தொடர்பு கொண்டு பாராட்டி இருக்கிறார்கள்.

இந்த வரிசையில் தற்போது அஜித்தும் சேர்ந்திருக்கிறார். நான் ஈ படத்தை பார்த்த அஜித் ராஜமௌலியை போனில் தொடர்பு கொண்டு புகழ்ந்து தள்ளிவிட்டாரம். இந்நிலையில் விரைவில் ராஜமௌலி நேரடி தமிழ்படம் இயக்குவார் என தமிழ் சினிமா வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.

Sunday, 22 July 2012

அனுஷ்கா மீது ஏக கடுப்பில் இருக்கும் அலெக்ஸ் பாண்டியன் டீம்!


Alex Pandian team angry with anushka         அனுஷ்கா ஷூட்டிங்கில் பங்கேற்காததால், கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன் படம் தாமதமாகியுள்ளது. இதனால் அவர் மீது ஏக கடுப்பில் இருக்கின்றனர் படக்குழுவினர். அருந்ததீ படம்மூலம் உச்சத்திற்கு சென்ற நடிகை அனுஷ்கா, இப்போது தமிழ், தெலுங்கில் நம்பர்-1 நாயகியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். தமிழில் தற்போது விக்ரமுடன் தாண்டவம், ஆர்யாவுடன் இரண்டாம் உலகம், கார்த்தியுடன் அலெக்ஸ் பாண்டியன் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அலெக்ஸ் பாண்டியன் படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்த காலத்தில் ஷூட்டிங்கிற்கு சரியாக வந்து கொண்டு இருந்த அனுஷ்கா இப்போது சரியாக பங்கேற்பது இல்லை. இதனால் அலெக்ஸ் பாண்டியன் படம் தாமதமாகியுள்ளது.

இதுகுறித்து விசாரித்தபோது, ‌இரண்டாம் உலகம் படம் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாம். இதனால் கடைசிகட்ட காட்சிகளை முடிக்க கூடுதல் கால்ஷீட் வேண்டும் என்று ‌டைரக்டர் செல்வராகவன், அனுஷ்காவிடம் கேட்டு கொண்டதால், கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன் படத்தில் பங்கேற்கவில்லையாம். அனுஷ்காவால் தொடர்ந்து படப்பிடிப்பு தாமதமாகி கொண்டு இருப்பதால், அவர் மீது ஏக கடுப்பில் இருக்கின்றனர் அலெக்ஸ் பாண்டியன் படக்குழுவினர்.