Sunday, 5 August 2012

கமல் நடிக்கும் ஹாலிவுட் படத்தில் சூர்யா.




     

     கமல் நடிக்கும் ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் சூர்யா. ஹாலிவுட் பட தயாரிப்பாளர் பேரி ஆஸ்போர்ன் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளார் கமல்ஹாசன். அவர் தற்போது இயக்கி நடித்துள்ள ‘விஸ்வரூபம்Õ படத்தின் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. தான் நடிக்கும் ஹாலிவுட் படத்தில் சூர்யாவையும் நடிக்க கேட்டிருக்கிறார் கமல். அவரும் அதற்கு ஓகே சொல்லிவிட்டாராம்.

நேருக்கு நேர், ப்ரண்ட்ஸ் ஆகிய படங்களில் விஜய்யுடனும், பிதாமகன் படத்தில் விக்ரமுடனும், பெரியண்ணா படத்தில் விஜயகாந்த்துடனும் சூர்யா இணைந்து நடித்திருந்தாலும் கமல்ஹாசன் படங்களில் நடித்ததில்லை. மன்மதன் அம்பு படத்தில் மட்டும் ஒரு காட்சியில் நடித்திருந்தார். கமலுடன் அவர் இணைய இருப்பதால் அது ரசிகர்களுக்கு மாறுபட்ட விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது கே.வி.ஆனந்த் இயக்கும் ‘மாற்றான் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் பிஸியாகஇருக்கிறார் சூர்யா. இதையடுத்து ‘சிங்கம் 2, ‘துப்பறியும் ஆனந்த¢ ஆகிய படங்களில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படங்களை முடித்துவிட்டு கமலுடன் அவர் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

த்ரிஷாவின் நடிப்புக்கு சவால்!



Trishas performances challenge!
பூலோகம் படத்தில், கேரளாவில் இருந்து, சென்னை வந்து, விடுதியில் தங்கி படிக்கும் மாணவியாக நடிக்கிறார் த்ரிஷா. பின், ஜெயம் ரவியுடன் சந்திப்பு, காதல் என, கதை செல்கிறது. ஆரம்பத்தில், சாதாரணமாக செல்லும் த்ரிஷாவின் கதாபாத்திரம், படத்தின் இறுதி காட்சிகளில் முக்கியத்துவம் பெறும். அத்தகைய காட்சிகளில், இதுவரை எந்த படத்திலும் நடிக்காத அளவுக்கு, தன் உச்சக்கட்ட நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் எனச் சொல்லும் படத்தின் இயக்குனர் கல்யாண், "பூலோகம் த்ரிஷாவின் நடிப்புக்கு சவாலான படம் என்கிறார்.

நீர் பறவை இலங்கை அகதியின் கதை

Neerparavai storyதேசிய விருது பெற்ற தென்மேற்கு பருவக்காற்று படத்தை இயக்கியவர் சீனு ராமசாமி. இவர் தற்போது இயக்கி வரும் படம் நீர்பறவை. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்கிறது. விஷ்ணு, சுனேனா, சரண்யா இவர்களுடன் நந்திதா தாஸ் நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் அனைத்தும் திருச்செந்தூரைச் சுற்றியுள்ள கடற்கரை கிராமங்களில் நடந்து முடிந்துள்ளது. இப்போது டப்பிங் பணிகள் தொடங்கி உள்ளது. மீண்டும் தேசிய விருது மற்றும் கமர்ஷியல் வெற்றி இவற்றை கருத்தில் கொண்டு இந்தப் படம் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

கடலில் தனித்து வரும் ஒரு படகில் இலங்கை அகதியின் குழந்தை ஒன்று இருக்கிறது. அதை கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த ஊர் பெரியவர் எடுத்து வளர்க்கிறார். அவர்தான் விஷ்ணு. அவர் பெரியவரானதும் பக்கத்து ஊரைச் சேர்ந்த இன்னொரு பெரும்புள்ளியின் மகள் சுனேனாவைக் காதலிக்கிறார். அப்போது பிரச்னை உருவாகிறது. என்ன ஜாதி, மதம் என்று தெரியாதவன் எங்கள் ஊர் பெண்ணை காதலிப்பதா என்று ஊர்களுக்குள் பிரச்னை வருகிறது. இதற்கு தீர்வு சொல்வதுதான் கதை. அகதிகளும் மனிதர்கள்தான். அவர்களை பாதுகாக்கவும், மதிக்கவும் வேண்டியது நம் கடமை என்கிற மெசேஜ் சொல்லும் படம் என்கிறார்கள்.

கோலிவுட்டில் லண்டன் நடிகைகள்!



London actresses in Kollywood!
        "மதராசப்பட்டினம் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர், லண்டன் நடிகை எமி ஜாக்சன். அதன்பிறகு, "தாண்டவம் படத்தில் நடித்துள்ள அவர், அடுத்து ஷங்கரின், "ஐ படத்தில் நடிக்கிறார். ஆக, தனது மூன்றாவது படத்திலேயே, தமிழில் முக்கிய நடிகையாகி விட்டார் எமி. இவரை அடுத்து, "காதலே என்னை காதலி என்ற படம் மூலம், அனோரா என்ற லண்டன் நடிகையும், தமிழுக்கு வந்துள்ளார். சில ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ள இவருக்கு, காதல், ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட் என்ற கலவையான தமிழ் சினிமாவை, ரொம்பவே பிடித்துவிட்டது. அதனால், ஹாலிவுட் படங்களை குறைத்துவிட்டு, தமிழில் கூடுதல் கவனம் செலுத்துவேன் என்கிறார்.

மகனுக்காக கரகாட்ட பாடல் வைத்த பாண்டிராஜ்!



Pantirajs karakatta song!
   "மெரீனா படத்தை அடுத்து, பாண்டிராஜ் இயக்கும் படம், "கேடி பில்லா கில்லாடி ரங்கா! முழு நீள நகைச்சுவை கதையில் உருவாகும் இந்தப் படத்தில், கரகாட்டப் பாடல் ஒன்று இடம் பெறுவதாக சொல்லும் பாண்டிராஜ், இதற்கு காரணம், தன் இரண்டு வயது மகன் அன்புக்கரசு தான் என்கிறார்."டிவியில் குத்துப் பாடல்கள் ஒளிபரப்பானால், என் மகனுக்கு குஷி வந்துவிடும். தன்னை மறந்து ஆட தொடங்கி விடுவான். அதனால், என் மகனுக்காகவும், அவனைப் போன்ற ரசிகர்களையும் மனதில் வைத்து, இந்தப்
படத்தில், கரகாட்டப் பாடல் ஒன்றை வைத்துள்ளேன். குத்துப் பாட்டுக்கு இணையாக, அதிரடியாக பாடல் இருக்கும் என்கிறார் பாண்டிராஜ்.

தயாரிப்பாளர் சங்கத்தில் மீண்டும் மோதல்!


The collision of a producer association
        தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. செயலாளர் தேனப்பன், பொருளாளர் கலைப்புலி தாணு துணை தலைவர் டி.சிவா ஆகியோர் எஸ்.ஏ.சந்திரசேகர் அணியிலும், துணை தலைவர் சத்யஜோதி தியாகராஜன் செயலாளர் முரளிதரன் இன்னொரு அணியிலுமாக இருக்கிறார்கள். முக்கிய தயாரிப்பாளரான கே.ஆர் தலைமையில் இந்த அணியினர் எஸ்.ஏ.சந்திரசேகரனின் செயல்பாடுகள் சரியில்லை என்று கூறி செயற்குழு உறுப்பினர்களின் ஆதரவோடு அவருக்கு எதிராக அ.செ.இப்ராஹிம் ராவுத்தர் தலைமையில் அட்ஹாக் கமிட்டி அமைத்து சங்கத்தை கைப்பற்றி நிர்வாகம் செய்ய ஆரம்பித்தனர். இதை எதிர்த்து எஸ்.ஏ.சந்திரசேகரன் நீதி மன்றத்துக்குச் சென்றார். வழக்கை விசாரித்த நீதி மன்றம். அட்ஹாக் கமிட்டி செல்லாது என்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையிலான அணி தொடர்ந்து செயல்படலாம் என்றும் தீர்ப்பளித்தது. இதனால் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து சங்கம் எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையில் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் எஸ்.ஏ.சிக்கு எதிர் அணியினர் மீண்டும் கொடிபிடிக்கத் தொடங்கி உள்ளனர். ஆகஸ்ட் 4ம் தேதி மாலை சங்கத்தில் கூடிய எதிர்ப்பு அணியினர் பெப்சி அமைப்புடன் ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை முடிக்கவில்லை, சங்கத்தின் உதவிகள் பாரபட்சத்துடன் வழங்கப்படுகிறது, வரசெலவு கணக்குகள் முழுமையாக தாக்கல் செய்யப்படவில்லை, அதனால் உடனடியாக பொதுக்குழுவை கூட்டி இதுபற்றி விவாதிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர். இந்த தீர்மானத்துக்கு ஆதராக 212 தயாரிப்பாளர்கள் கையெழுத்திட்டிருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.

இது தொடர்பாக எஸ்.ஏ.சந்திரசேகர் அணியினர் கூறும்போது. "சங்கத்தின் பணிகள் சிறப்பான முறையில் நடந்து வருகிறது. உறுப்பினர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம். சங்கத்தில் கடந்த காலத்தில் ஏராளமான போலி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவற்றை கண்டறிந்து வருகிறோம். இதுவரை 120 போலி உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். விரைவில் அதுபற்றி முறையாக அறிவிக்க இருக்கிறோம். அந்த போலி உறுப்பினர்கள்தான் இப்போது நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் பிரச்சினையை கிளப்புகிறார்கள். அவர்கள் அமைதியாக இருக்காவிட்டால் மீண்டும் நீதிமன்றம் செல்ல தயங்க மாட்டோம்" என்கிறார்கள். தயாரிப்பாளர் சங்கத்தின் அதிகார மோதல் எப்போதுதான் முடிவுக்கு வருமோ என்பதுதான் சங்க உறுப்பினர்களின் கவலையாக இருக்கிறது.

இந்துக்கள் மனதை புண்படுத்தும் மதுபானக்கடை!



The Hindus hurt matupanakkatai!
      சமீபத்தில் வெளிவந்த படம் மதுபானக்கடை. ஒரு டாஸ்மாக் பாருக்குள் நடக்கும் சம்பவங்களை வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. பாருக்கு மது அருந்தவரும் விதவிதமான மனிதர்களின் செயல்பாடுகளை நகைச்சுவையாக காட்டி அதற்குள் ஒரு காதல் கதையை சொல்கிறார்கள். இந்தப் படத்தில் இந்துக்கள் மனதை புண்படுத்தும் காட்சிகள் இருப்பதாக பல்வேறு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து இந்து அமைப்பு பிரமுகர் ஒருவர் கூறியதாவது: பாருக்கு மது அருந்த வரும் நபர்களில், அனுமன், ராமர் வேடமணிந்து பிச்சை எடுக்கும் இரண்டு பேரும் உண்டு. இவர்கள் அனுமன், ராமர் வேடத்திலேயே பாருக்குள் வந்து மது அருந்துவதோடு, அசைவமும் சாப்பிடுகிறார்கள். புகைபிடிக்கிறார்கள். மதுவுக்காக சண்டையிட்டுக் கொள்கிறார்கள். அது மட்டுமல்ல அனுமன் வேடத்தில் இருப்பவரிடம் ஒருவர் வந்து அவரை வணங்கி, "எனக்கு 40 வயதாகிறது இதுவரை திருணம் நடக்கவில்லை, பெண்ணும் கிடைக்கவில்லை. நீங்கள்தான் ஆசீர்வாதம் செய்து விரைவில் திருமணம் நடக்க உதவ வேண்டும்" என்கிறார். அதற்கு அனுமன் வேடத்தில் இருப்பவர் "நானே திருமணம் செய்யாமல் பிரம்மச்சாரியாக இருக்கிறேன். நீ இந்த கோரிக்கையை முருகன், கிருஷ்ணனிடம்தான் வைக்க வேண்டும்" என்பார். அதற்கு அந்த நபர் "அவர்கள் எல்லாம் இரண்டு மூன்று திருமணம் பண்ணினவர்கள். எனக்கு பார்த்த பெண்ணையும் தள்ளிக்கொண்டு போய்விடுவார்கள்" என்கிறார். இதில் சில வார்த்தைகள் மவுனிக்கப்பட்டிருந்தாலும் இதுதான் வசனம் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. இந்தப் படத்தில் அவர்கள் கடவுள் வேடத்தை கலைத்து விட்டு மது அருந்துவதாக காட்டியிருந்தால் பரவாயில்லை. ஆனால் இது திட்டமிட்டு செய்யப்பட்டிருப்பது போலவே தெரிகிறது" என்றார்

இந்து கடவுள்களை கிண்டல் செய்வதும், அவமானப்படுத்துவதும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிறார்கள். இந்து அமைப்பு நிர்வாகிகள்.