Thursday, 9 August 2012

சுதந்திரத்திற்கு முந்தையகால கதை பாலாவின் பரதேசி...!


Balas Parathesi story is 1930s pre-independence India பாலா இயக்கி வரும் பரதேசி படத்தின் கதை, இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக அதாவது 1930ம் ஆண்டு காலத்து கதையாக உருவாகி வருகிறது. சேது, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் போன்ற வெற்றி படங்களை இயக்கி டைரக்டர் பாலா, இப்போது பரதேசி என்ற படத்தை இயக்கியும், பி ஸ்டூடியோ சார்பில் தானே தயாரித்தும் வருகிறார். இப்படத்தின் நாயகனாக மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வாவும், நாயகிகளாக வேதிகா மற்றும் பேராண்மை தன்ஷிகாவும் நடிக்கின்றனர்.

பொதுவாக பாலா படம் என்றாலே ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும், ஆனால் இப்படத்திற்கு வழக்கத்தை காட்டிலும் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகி இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் பாலாவின் முந்தைய படங்களை போன்று இந்தப்படம் இருக்காது. ஏ‌னென்றால் படத்தின் கதை 1930ம் ஆண்டு அதாவது நாடு சுதந்திரம் அடைவதற்கு முந்தைய காலத்து கதை. மேலும் பாலா தனது கூட்டணியை மாற்றியுள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் குமாரும், ஒளிப்பதிவாளராக செழியனும், வசனகர்த்தவாக நாஞ்சில் நாதனும், படத்தொகுப்பாளராக கிஷோரும் பணியாற்றி வருகின்றனர்.

மானாமதுரை, சிவகங்க‌ை, தேனி, மூணாறு மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அடர்ந்த காடுகளில் பரதேசி படத்தை படமாக்கி முடித்துவிட்டார் பாலா. அதுவும் வெறும் 90 நாட்களிலேயே முழு படப்பிடிப்பையும் முடித்துவிட்டார். இப்போது படத்திற்கான போஸ்ட் புரோடக்ஷ்ன் வேலைகள் நடந்து வருகிறது.

மேலும் எப்போதும் இல்லாமல் புதுமையாக பரதேசி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை லண்டனில் வருகிற 19 தேதி நடத்த திட்டமிட்டு இருக்கிறார் பாலா. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழியில் உருவாகி இருக்கும் இப்படம் அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது.

தனது குருநாதருக்காக பாடிய மிஸ்கின்!!


Mysskin sing song for thulli villayaaduப்ரியமுடன், யூத், வாட்டாக்குடி இரணியன், ஜித்தன், பெருமாள் என வித்தியாசமான படங்களைத் தந்த டைரக்டர் வின்சென்ட் செல்வா, இப்போது துள்ளி விளையாடு என்ற காமெடி கலந்த த்ரில்லர் கதையைப் படமாக்கி வருகிறார். படத்தின் நாயகனாக யுவராஜ் என்ற இளைஞரையும் அவருக்கு ஜோடியாக தீப்தியையும் அறிமுகம் செய்கிறார் வின்சென்ட் செல்வா. இவர்களுடன் பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வின்சென்ட் செல்வா படத்தில் பிரகாஷ் ராஜ் நடிப்பது இதுதான் முதல் முறை. ஜெயபிரகாஷ், சூரி, சிங்கமுத்து, சென்ராயன் (ரவுத்திரம் - வில்லன்) சூப்பர்குட் லஷ்மண், மதுரை சுஜாதா (நாடோடிகள்) மதன்பாபு என பிரபலங்கள் கைகோர்த்துள்ளனர்.

இந்தப் படத்தை ஆர்பி ஸ்டுடியோஸ் சார்பில் கோவிந்தராஜ் தயாரிக்கிறார். எஸ்கே பூபதி ஒளிப்பதிவு செய்கிறார்.வின்சென்ட் செல்வாவின் ஆஸ்தான இசையமைப்பாளர்களுள் ஒருவரான ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். துள்ளி விளையாடு படத்தில் இயக்குனர் மிஸ்கின் ஒரு பாடல் பாடியுள்ளார்.

அம்மாடி ஆத்தாடி -இவா
வாலில்லா காத்தாடி டோய்
கையாள மை பூசுறா-அவா
கண்ணால பொய் பேசுறா.. என்று தொடங்கும் பாடலை தனது குருநாதருக்காக பாடியுள்ளார்.

இதுகுறித்து இயக்குநர் வின்சென்ட் செல்வா கூறும்போது, என்னோட எல்லா படங்களிலும் எனது உதவியாளராக இருக்கும்போது ட்ராக் பாடுவது ராஜா (மிஸ்கின்) தான். யூத், ஜித்தன் போன்ற படங்களில் இவர் பாடிய ட்ராக் தான் பின்னர் பாட்டானது . முகமூடி படபிடிப்பில் பிசியாக இருந்தபோது ஒரு குத்துப் பாட்டு இருக்கு.. பாடமுடியுமான்னு கேட்டபோது எங்க டைரக்டர் கூப்பிடுறார்ன்னு ஓடி வந்து பாடிக் கொடுத்தார். யுவராஜ், வெண்ணிலா கபடிக்குழு சூரி, சென்றாயன் ஆகிய மூன்று பேரின் அறிமுகப்பாடலாக இது படத்தில் இடம் பெறுகிறது.

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் அனுமதி வாங்கி படம்பிடித்தோம். செம ரகளையான இந்த பாடல் கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் பேருந்தில் திண்டுக்கல் சுற்றி வர படமாக்கப்பட்டது. என்னுடைய ஒயிட் லக்கான் கோழி ஒண்ணு கூவுது, ஆல்தோட்ட பூபதி நானடா, அ முதல் அக்கு தானடா, வரிசையில் மிஸ்கின் பாடிய இந்த பாடலும் பட்டையைக் கிளப்பும். பாடி உதவிய மிஸ்கினுக்கு நன்றி என்றார்.

சுதந்திரதினத்தன்று தாண்டவம் ஆடியோ ரிலீஸ்!


Thandavam Audio Release on August 15விக்ரம் நடித்துள்ள தாண்டவம் படத்தின் ஆடியோ ரிலீஸ் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாக இருக்கிறது. தெய்வத்திருமகள் படத்திற்கு பிறகு டைரக்டர் விஜய், மீண்டும் விக்ரமை வைத்து தாண்டவம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் விக்ரமுடன் தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபுவும் நடிக்கிறார். இவர்களுடன் அனுஷ்கா, எமி ஜாக்சன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். யு.டி.வி., இப்படத்தை தயாரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. இந்நிலையில் படத்தின் ஆடியோவை சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தவுள்ளனர் தாண்டவம் படக்குழுவினர். வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று சென்னை நந்தனத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் தாண்டவம் படக்குழுவினர் தவிர நிறைய திரை நட்சத்திரங்களும் பங்கேற்க இருக்கின்றனர்.

நல்ல கதை அமையட்டும் சேர்ந்து நடிப்போம்! சினேகா!!


If good story come, I and prasanna will joint in movie says snehaசினிமாவில் நல்ல கதை அமையட்டும் நானும், பிரசன்னாவும் சேர்ந்து நடிக்கிறோம் என சினேகா தெரிவித்து இருக்கிறார். அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் கணவன்-மனைவியாக நடித்த சினேகா பிரசன்னா, இப்போது நிஜ வாழ்விலும் தம்பதிகளாய் இணைந்துள்ளனர். சமீபத்தில் தான் இவர்களது திருமணம் நடந்து முடிந்தது. இருவரும் விளம்பர படங்களில் ஒன்றாக இணைந்து நடித்து வருகின்றனர். இந்நிலையில் பிரசன்னாவுடன் இணைந்து நடிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்து இருக்கும் சினேகா, விளம்பர படங்களில் நானும் பிரசன்னாவும் இணைந்து நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகிறது. இதை பெருமையாக கருதுகிறோம். இப்படி நடிப்பது எங்களுக்கு ஈஸியாகவும் இருக்கிறது. பொதுவாக நடிப்பில் ஏதேனும் சந்தேகம் வந்தால் மட்டும் பிரசன்னாவிடம் கேட்பேன். மற்றபடி அவரவர் பட விஷயங்களில் யாரும் தலையிட மாட்டோம். இப்போதைக்கு இருவரும் விளம்பர படங்களில் இணைந்து நடிக்கிறோம், எங்கள் இருவருக்கும் ஏற்றபடி நல்ல கதை மட்டும் அமையட்டும் நானும், பிரசன்னாவும் கண்டிப்பாக சேர்ந்து நடிப்போம் என்று கூறியுள்ளார்.

Wednesday, 8 August 2012

ஒட்டிப்பிறந்தவர்கள் கதை! முந்துகிறது இருவன்


Iruvaan leads in twins storyஒரு படம் வந்து வெற்றி பெற்ற பிறகு அதைக் காப்பி அடித்து அதே மாதிரியான படங்கள் வருவது நடைமுறையில் உள்ளது. ஆட்டுகார அலமேலு வெற்றி பெற்ற பிறகு கழுதை, நாய், குரங்கை வைத்தெல்லாம் படம் வந்தது. சமீபத்தில் பருத்தி வீரன் ஜெயித்த பிறகு நிறைய ஹீரோக்கள் அழுக்கு லுங்கி அரிவாளுடன் வந்தார்கள். ஆனால் இப்போது ஒரு படம் வெளிவரும் முன்பே அதன் கதையை தெரிந்து கொண்டு அதே மாதிரியான படங்கள் வெளிவரத் தொடங்கி விட்டது.

கே.வி.ஆனந்த் இயக்கும் மாற்றான். ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் பற்றியது. இதுவே ஒரு ஆங்கிலப் படத்தில் சுட்ட கதைதான். இதைப்பார்த்து கன்னடத்திலும், தமிழிலுமாக சாருலதா என்ற ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் படத்தை எடுத்துவிட்டார்கள். இதில் ஹீரோயின் பிரியாமணி ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தையாக நடித்திருக்கிறார்.

இப்போது இவர்கள் இருவரையும் மிஞ்சிவிட்டார் ஒரு சிறுபட இயக்குனர். இ.எஸ்.முருகானந்தம் என்ற இந்த புதுமுக இயக்குனர் குறுகிய காலத்தில் டிஜிட்டல் பார்மெட்டில் இருவன் என்ற படத்தை இயக்கி முடித்து விட்டு வருகிற 15ந் தேதி வெளியீடு என்று அறிவித்தும் விட்டார்கள். தமிழ் சினிமா வரலாற்றில் முதன் முறையாக உடல் ஒட்டிப் பிறந்தவர்களின் உண்மை கதை என்ற கேப்சனோடு. இதே போன்று இதற்கு முன்பு ஒரு கூத்து நடந்தது. ஒரு தென்கொரிய படத்தை காப்பி அடித்து அமீர் நடிக்க சுப்பிரமணிய சிவா யோகியை இயக்கினார். அதற்கு சில வாரங்கள் முன்பே அழுக்கன் என்ற படத்தை அதே கதையுடன் புதுமுகங்கள் எடுத்து வெளியிட்டுவிட்டனர்.

ஆங்கிலப் படத்தை காப்பி அடித்து படம் எடுப்பவர்கள். இந்தக் கதையை வேறு யாராவது உல்டா செய்து கொண்டிருக்கிறார்களா? என்பதை தீவிரமாக விசாரித்து உறுதி செய்து கொண்ட பிறகு படத்தை ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பித்த பிறகு யாராது தொடங்குகிறார்களா? என்று கண்காணிக்க வேண்டும். குறைந்தபட்சம் கதை வெளியில் தெரியாத அளவுக்காவது நடந்து கொள்ள வேண்டும். இதற்கென தனி உதவியாளர்களை வைத்துக் கொள்வது நல்லது. இல்லாவிட்டால் பலகோடியில் எடுக்கப்படும் படத்தின் எதிர்பார்ப்பை சில லட்சங்களில் எடுக்கப்பட்டும் சிறு படங்கள் காலிபண்ணிவிடும்.

Tuesday, 7 August 2012

ஜிம்மில் தவமிருக்கும் நமீதா


Namitha reducing her weightவட மாநிலத்தை சேர்ந்தவரான நமீதா. தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். தேர்ந்த நடிகையாக இல்லாவிட்டாலும் தனது மொழு மொழு உடல் அமைப்பு, மற்றும் தாராள கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்தார். மச்சான் என்று ரசிகர்களை அழைத்து கிரங்க வைத்தார். இங்கிலீஸ்காரன் என்ற மெசேஜ் சொல்லும் படத்திலும் சரி, ஜெகன் மோகினி என்ற மாயாஜாலப் படத்திலும் சரி, பில்லா என்ற கமர்ஷியல் படத்திலும் சரி இவரது கவர்ச்சிதான் மேலோங்கி நின்றது. பார்த்திபன் இயக்கத்தில் உருவான பச்சக்குதிரை படத்தில் மட்டும் கொஞ்சம் நடிக்க முயற்சித்தார். அந்தப் படமும் வெற்றி பெறவில்லை.

ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைந்தபோது மும்பைக்குச் சென்று சிறப்பு ஏற்பாடுகள் செய்து விதவிதமாக கவர்ச்சி படங்களை எடுத்து வந்து இணைய தளத்தில் உலவவிட்டார். இது இணையதளத்தில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டு. நம்பர் ஒண் இணைய தள தேடுதல் நடிகையானார். தொலைக்காட்சிகளில் தொல்லை தமிழ் பேசி நடனமே ஆடத் தெரியாத நமீதா நடன கலைஞர்களுக்கு மார்க் போட்டு கொஞ்ச காலத்தை ஓட்டினார். இதற்கிடையில் தன் நண்பருடன் இணைந்து ரியல் எஸ்டேட் பிசினசை நடத்தினார். அதோடு சில ரியல் எஸ்டேட் கம்பெனிகளுக்கு விளம்பர அம்பாசிடரானார்.

நடிக்க வாய்ப்பு இல்லாவிட்டாலும் தமிழ் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஜவுளிக்கடை, நகைக்கடை மட்டுமல்ல ஈமு கோழிப் பண்ணையும் திறந்து வைத்து பேங் பேலன்ஸ் குறையாமல் பார்த்துக் கொண்டார். இப்போது எல்லாமே டல்லடிக்க மீண்டும் நடிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார்.

இந்தியில் தயாரான சில்க்கின் வாழ்க்கையை மையமாக கொண்ட தி டர்ட்டி பிக்சர்ஸ் தமிழ், தெலுங்கில் தயராக போவதை அறிந்து நான் சில்க்காக நடிக்க தயார் என்று வாலண்டரியா அறிவித்தார். ஆசைப்பட்டால் போதுமா சில்க் மாதிரி ஸ்லிம் உடம்பு வேண்டாமா என்ற கேள்வி எழந்தது. அதனால் இப்போது உடம்பை குறைக்க ஜிம்மே கதியென்று கிடக்கிறார். அளவுக்கு அதிகமாக எடைகூடிவிட்ட நிலையில் இனி ஸ்லிம்மானால்தான் சினிமாவில் இருக்க என்று முடிவு செய்து ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் வரை ஜிம்மில் இருக்கிறார். தனது பேவரைட் உணவுகளை குறைத்து டயட்டீஷியன் சொல்லும் உணவை மட்டுமே உண்கிறார். ஸ்லிம் நமீதாவை பார்க்க மச்சான்ஸ் எல்லாம் ஆர்வமாக இருக்கிறார்கள்.

Sunday, 5 August 2012

காதலன் பெயரை முழங்கையில் பச்சை குத்திய எமி ஜாக்சன்.


  நயன் தாராவை தொடர்ந்து காதலன் பெயரை கையில் பச்சை குத்திக்கொண்டார் எமி ஜாக்ஸன். பிரபுதேவா,நயன்தாரா காதல் ஜோடி கோலிவுட்டில் பரபரப்பாக வலம் வந்தது. அப்போது பிரபுதேவாவின் பெயரை தனது கையில் பச்சை குத்திக்கொண்டார் நயன் தாரா.

பின்னர் இவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்தனர். இதே பாணியில் பச்சை குத்திக்கொண்டிருக்கிறார் எமி ஜாக்ஸன். ‘மதராஸ பட்டணம்’ படத்தில் அறிமுகமான லண்டன் நடிகையான இவர் இந்தியில் ‘ஏக் தீவனா தா’ என்ற படத்தில் நடித்தார். அப்போது பட ஹீரோ பிரதீக்கிற்கும், இவருக்கும் காதல் மலர்ந்தது. அதற்கு சாட்சியாக ஒருவர் பெயரை ஒருவர் கைகளில் பச்சை குத்திக்கொண்டனர். எங்கு சென்றாலும் ஜோடியாக சென்றனர். ஆனால் பச்சை குத்திக்கொண்டதை இருவருமே உறுதி செய்யவில்லை.


இந்நிலையில் ‘தாண்டவம்’ பட கேசட் ரிலீஸ் விழாவுக்காக எமி ஜாக்ஸன் சென்னை வந்தார். அப்போது வலது முழம் கையில் பச்சை குத்தி இருப்பதை பார்த்து அங்கிருந்தவர்கள் கிசுகிசுத்தனர். அவரை நெருங்கி விசாரித்தபோது அது காதலன் பிரதீக் பெயர் என்பதை ஒப்புக்கொண்டார். ‘மேரா பியார் மேரா பிரதீக்’ (என்னுடைய காதல் என்னுடைய பிரதீக்) என்று பச்சை குத்தி இருக்கிறார்.