இந்தப் படத்தை ஆர்பி ஸ்டுடியோஸ் சார்பில் கோவிந்தராஜ் தயாரிக்கிறார். எஸ்கே பூபதி ஒளிப்பதிவு செய்கிறார்.வின்சென்ட் செல்வாவின் ஆஸ்தான இசையமைப்பாளர்களுள் ஒருவரான ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். துள்ளி விளையாடு படத்தில் இயக்குனர் மிஸ்கின் ஒரு பாடல் பாடியுள்ளார்.
அம்மாடி ஆத்தாடி -இவா
வாலில்லா காத்தாடி டோய்
கையாள மை பூசுறா-அவா
கண்ணால பொய் பேசுறா.. என்று தொடங்கும் பாடலை தனது குருநாதருக்காக பாடியுள்ளார்.
இதுகுறித்து இயக்குநர் வின்சென்ட் செல்வா கூறும்போது, என்னோட எல்லா படங்களிலும் எனது உதவியாளராக இருக்கும்போது ட்ராக் பாடுவது ராஜா (மிஸ்கின்) தான். யூத், ஜித்தன் போன்ற படங்களில் இவர் பாடிய ட்ராக் தான் பின்னர் பாட்டானது . முகமூடி படபிடிப்பில் பிசியாக இருந்தபோது ஒரு குத்துப் பாட்டு இருக்கு.. பாடமுடியுமான்னு கேட்டபோது எங்க டைரக்டர் கூப்பிடுறார்ன்னு ஓடி வந்து பாடிக் கொடுத்தார். யுவராஜ், வெண்ணிலா கபடிக்குழு சூரி, சென்றாயன் ஆகிய மூன்று பேரின் அறிமுகப்பாடலாக இது படத்தில் இடம் பெறுகிறது.
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் அனுமதி வாங்கி படம்பிடித்தோம். செம ரகளையான இந்த பாடல் கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் பேருந்தில் திண்டுக்கல் சுற்றி வர படமாக்கப்பட்டது. என்னுடைய ஒயிட் லக்கான் கோழி ஒண்ணு கூவுது, ஆல்தோட்ட பூபதி நானடா, அ முதல் அக்கு தானடா, வரிசையில் மிஸ்கின் பாடிய இந்த பாடலும் பட்டையைக் கிளப்பும். பாடி உதவிய மிஸ்கினுக்கு நன்றி என்றார்.
No comments:
Post a Comment