
தமிழ் சினிமாவில் ஆண்டாண்டு காலமாக இயக்குனர்கள் பலர் நடிகர்களாக மாறி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த பட்டியலில் புதிதாய் சேரப்போகிறவர் இயக்குனர் எழில். இளையதளபதி விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும், அஜித் நடித்த பூவெல்லாம் உன் வாசம், சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்தி பறவை ஆகிய வெற்றி படங்களை இயக்கியவர் எழில். தற்போது சினிமாவில் நடிக்கவும் எழிலுக்கு ஆசை வந்துள்ளது. அடுத்ததாக தான் இயக்கும் புதிய படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார். இயக்குனராக வெற்றி பெற்ற எழில், நடிப்பிலும் வெற்றி பெறுவார் என்கின்றனர்.
No comments:
Post a Comment