பிரணி ஹீரோயினை பிரகாச ஹீரோவோட தயாரிப்பு நிறுவனம்தான் கோலிவுட்ல அறிமுகப்படுத்தினாங்களாம். அதனால ஹீரோயின் அவங்க கட்டுப்பாட்டுக்குள்ளதான் இருக்காராம்... இருக்காராம்... அறிமுகப்படுத்துறப்போவே தொடர்ச்சியா கம்பெனி தயாரிக்கற மூணு படத்துல நடிக்கணும்னு பாலிவுட் ஸ்டைல்ல கண்டிஷன்போட்டு எழுதி வாங்கிட்டாங்களாம். இதால நடிகை புதுபடத்தை ஏத்துக்க முடியாம தவிக்கறாராம்... தவிக்கிறாராம்...
திலக நடிகரோட பேரன் நடிக்கற பங்ஷன்ல கேமரா கவிஞரு கலந்துகிட்டாராம்... கலந்துகிட்டாராம்... விழாவுல அந்த காலத்து பிரிய ஹீரோயினும் பங்கெடுத்தாராம். கடைசியா கேமர கவிஞரை பேச அழைச்சாங்களாம். வந்தவரு மாஜி பிரிய நடிகையை பத்தியே பேசினாராம். என் இயக்கத்துல நடிக்காத ஒரே ஹீரோயின் இவர்தான்னு சொல்றதுக்கு டபுள் மீனிங்ல இயக்கம் பேசினாராம்... பேசினாராம்... இதை கேட்டு விழாவுக்கு வந்தவங்க முகம் சுழிக்க ஆரம்பிச்சிட்டாங்களாம்... ஆரம்பிச்சிட்டாங்களாம்...
No comments:
Post a Comment