Thursday, 9 August 2012

ஆர்ப்பாட்டமில்லாமல் 50வது பாடலை நெருங்கும் மதன் கார்க்கி.





இன்றைய தேதியில் சினிமாவில் ரொம்ப பிஸியான பாடலாசிரியர் யார் என்றால் நிச்சயம் அது மதன் கார்கி தான். கம்ப்யூட்டர் இன்ஜினியரான கார்கி, "கண்டேன் காதலை" படம் மூலம் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமான கார்கி, பின்னர் எந்திரன் படம் மூலம் பிரபலமானார்.

தொடர்ந்து தனக்கே உரிய பாணியில் புது சிந்தனைகளோடும், புதுப்புது வரிகளோடும் தமிழ் சினிமாவில் நம் அனைவரின் இதயத்தில் நிற்கிறார். கோ படத்தில் அவர் எழுதிய என்னமோ ஏதோ, ஏழாம் அறிவில் சீன மொழிப்பாடல், நண்பனில் அஸ்க் அஸ்க்... உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களிடம் வெகுவாக பாராட்டப்பட்டது.

தற்ப‌ோது நான் ஈ படத்தில் எல்லா பாடல்களையும் இவரே எழுதி ராஜமவுலியின் மொத்த பாராட்டையும் பெற்றுள்ளார். அந்த வேகம் குறைவதற்குள், இதோ அவரது வரிகளில் ஏகப்பட்ட படங்கள் வர இருக்கின்றன.

அவற்றுள் துப்பாக்கி, மாற்றான், கடல், நிமிர்ந்து நில், முகமூடி, ஐ, ஒரே ஞாபகம் என்று கைவசம் வைத்திருக்கிறார். இதுதவிர நிறைய படங்களுக்கும் பாடல் வரிகள் எழுத கமிட் ஆகி இருக்கிறார். அமைதியின் உருவமாய், அழகான வரிகளின் உயரமாய் விளங்கும் மதன் கார்கி விரைவில் தனது 50வது பாடல் நெருங்குவார் எனத் தெரிகிறது.

No comments:

Post a Comment