Saturday, 11 August 2012

நீதானே என் பொன்வசந்தம் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாய் நடக்க கவுதம் மேனன் ஏற்பாடு.


மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத் தாண்டி வருவாயா போன்ற படங்களை இயக்கிய கௌதம் வாசுதேவ் மேனன் தற்போது ஜீவா மற்றும் சமந்தா நடிக்கும் நீதானே என் பொன்வசந்தம் படத்தை இயக்குகிறார்.
இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள மிகப்பெரிய அரங்கில் வரும் செப்படம் 1-ந்தேதி நடத்த திட்டமிட்டுள்ளனர்.

கவுதம் மேனன் மற்றும் இளையராஜா இருவரும் முதன்முறையாக இணைவதால், இந்நிகழ்ச்சியை பிரமாண்டமாய் நடத்த வேண்டும் என முடிவு செய்து, பாடல் வெளியீட்டு விழாவின் நிகழ்ச்சிகளை தானே முன்னின்று மேற்பார்வையிடுகிறார் கவுதம் மேனன்.
இவ்விழாவில் இசைஞானியின் இசை கச்சேரி நடைபெறுகிறது.

No comments:

Post a Comment