'கோச்சடையான்' படப்பிடிப்பு முடிந்து டப்பிங், ரீ ரிக்கார்டிங், சி.ஜி.டி.ஐ., மிக்சிங் போன்ற பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. பலத்த பாதுகாப்புடன் இப்பணிகள் நடந்து வருகிறது.
இதுபோல் 'விஸ்வரூபம்' படப்பிடிப்பும் முடிவடைந்து ஹாலிவுட் ஸ்டுடியோக்களில் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன. ரஜினி, கமல் படங்கள் ஒன்றாக ரிலீசானால் வியாபார விஷயங்களில் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தியேட்டர்கள் பிடிப்பதிலும் போட்டா போட்டி ஏற்படும் என கூறப்படுகிறது. எனவே போட்டியை தவிர்த்து இரு படங்களையும் வெவ்வேறு நாட்களில் தனித்தனியாக ரிலீஸ் செய்ய ரஜினி, கமல் விரும்புவதாகவும் இதுகுறித்து இருவரும் தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும் செய்திகள் வெளியாயின.
ஆனால் கமல் தரப்பில் இது மறுக்கப்பட்டது. கோச்சடையான் படத்தை டிசம்பரில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். ஆனால் 'விஸ்வரூபம்' படம் அதற்கு முன்னதாகவே திரைக்கு வந்துவிடும் என்றனர்.
No comments:
Post a Comment