கும்கி படம் காதல் பற்றி பேசும் படமாக இருந்தாலும், மாணிக்கம் என்ற யானையும் பத்து நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடித்திருக்கிறது. மைனா லொகேஷன் போல கும்கியிலும் கண்ணுக்கு குளிர்ச்சியாக பல்வேறு இடங்களில் படமாக்கி இருக்கிறார் பிரபுசாலமன். அதிலும் ஒரு பாட்டுக்காக கிட்டத்தட்ட எட்டுமாத காலம் காத்திருந்து ஜோக் நீர்வீழ்ச்சியில் பிரம்மாண்ட முறையில் படமாக்கி இருக்கிறார். திரையில் இந்த பாடலை பார்க்கும் போதும் ரசிகர்களுக்கு ஒரு வித உணர்வை ஏற்படுத்தும் என்கிறார். தற்போது படத்திற்கான பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. தமிழ் சினிமாவில் கும்கி படம் நிச்சயம் ஒரு பெரிய மைல்கல்லாக பேசப்படும் என்று உறுதிபட கூறுகிறார் பிரபுசாலமன்.
Tuesday, 25 September 2012
கும்கியில் ஒரு பாடலுக்காக 8 மாதம் காத்திருந்து படமாக்கினேன்: நெகிழ்கிறார் பிரபுசாலமன்!
கும்கி படம் காதல் பற்றி பேசும் படமாக இருந்தாலும், மாணிக்கம் என்ற யானையும் பத்து நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடித்திருக்கிறது. மைனா லொகேஷன் போல கும்கியிலும் கண்ணுக்கு குளிர்ச்சியாக பல்வேறு இடங்களில் படமாக்கி இருக்கிறார் பிரபுசாலமன். அதிலும் ஒரு பாட்டுக்காக கிட்டத்தட்ட எட்டுமாத காலம் காத்திருந்து ஜோக் நீர்வீழ்ச்சியில் பிரம்மாண்ட முறையில் படமாக்கி இருக்கிறார். திரையில் இந்த பாடலை பார்க்கும் போதும் ரசிகர்களுக்கு ஒரு வித உணர்வை ஏற்படுத்தும் என்கிறார். தற்போது படத்திற்கான பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. தமிழ் சினிமாவில் கும்கி படம் நிச்சயம் ஒரு பெரிய மைல்கல்லாக பேசப்படும் என்று உறுதிபட கூறுகிறார் பிரபுசாலமன்.
மீண்டும் தனுஷூக்கு ஜோடியாகும் ஹன்சிகா...!
மனிதநேயம் சொல்லும் ஜெயம் ரவி
சீனாவில் "டூயட் பாடும் விக்ரம் - எமி
"தாண்டவம் படத்திற்காக அமெரிக்காவில் "டூயட் பாடிவிட்டு திரும்பியுள்ள விக்ரம் - எமி ஜாக்சன் ஜோடி, இப்போது ஷங்கரின், "ஐ படத்துக்காக, சீனாவில் "டூயட் பாட செல்கிறது. படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை, சென்னையில் நடத்திய ஷங்கர், இரண்டாம் கட்ட படப்பிடிப்பை, சீனாவில் நடத்துகிறார். அங்கு, விக்ரம் - எமி சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் மட்டுமின்றி, சந்தானம் நடிக்கும், "காமெடி காட்சிகளும் படமாகின்றன. அதனால், யூனிட்டோடு, சந்தானத்தையும் கையோடு கூட்டிச் செல்கிறார் ஷங்கர்.
விஜய்யின் துப்பாக்கி சரவெடியாகிறது
நம்பர் 1 நடிகையாக பயிற்சி எடுக்கிறார் அமலாபால்
அனுஷ்கா தெலுங்கில் அக்கறை காட்டி வருகிறார், நயன்தாராவுக்கு தமிழ் படங்களில் ஆர்வம் இல்லை. காஜல் அகர்வால், தமன்னா ஆகியோர் இந்தி படங்களின் பக்கம் கவனம் செலுத்துகிறார்கள். த்ரிஷா கல்யாண மூடில் இருக்கிறார். ஆக தமிழில் நம்பர் ஒன் நடிகை என்ற இப்போதைக்கு யாரையும் குறிப்பிட முடியாது அந்த இடம் காலியாக இருக்கிறது. அந்த இடத்தை பிடிக்கத்தான் அமலாபால் முயற்சி செய்து இருக்கிறார். இப்போது அவருக்கு இருக்கும் ஒரே போட்டியாளர் ஹன்சிகா மட்டுமே அவருக்கு வடக்கத்திய முகசாயல் இருப்பதால் எல்லா கேரக்டருக்கும் அவர் பொருந்த மாட்டார். ஆனால் அமலாபாலுக்கு உள்ளூர் முகம், கவர்ச்சி, நடிப்பு என எல்லாமே இருப்பதால் எளிதில் நம்பர் 1 இடத்தை பிடித்து விடுவார் என்று சொல்கிறார்கள்.
நடனத் திறமையை மெருகேற்ற தனியாக ஒரு மாஸ்டரை நியமித்து கற்று வருகிறார். மேக்அப் மேன், டயட்டீசியன், பேஷன் டிசைனர், தமிழ் வாத்தியார் என தனி டீமே அமலா பாலுவுக்காக வேலை செய்து கொண்டிருக்கிறது. நடிகர் விஜய்யை வைத்து இயக்குனர் விஜய் இயக்க இருக்கும் புது படத்தில் அமலாபால்தான் ஹீரோயின் என்று இப்போதே பேச்சு இருக்கிறது. எல்லாவற்றையும் விட யாரிடம் எப்படி பழக வேண்டும், எப்படி பேச வேண்டும் என்பதை மிகச் சரியாக தெரிந்து வைத்திருக்கிறார் அமலாபால்.
விஸ்வரூபம் தள்ளிப்போவது ஏன்?
விஸ்வரூபம் தள்ளிப்போவதற்கு மூன்று காரணங்கள் சொல்லப்படகிறது. ஒன்று படத்தில் ஆரோ 3டி என்ற சவுண்ட் தொழில்நுட்பத்தை கமல் பயன்படுத்த விரும்புகிறார். இது ரெட் டெய்ல்ஸ் என்ற ஹாலிவுட் படத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த தொழில் நுட்பத்தை படத்தில் இணைக்க 100 நாட்கள் தேவைப்படுமாம்.
இரண்டாவது காரணம். படத்தில் கிளைமாக்ஸ் கிடையாதாம். கிளைமாக்ஸ் விஸ்வரூபத்தின் இரண்டாம் பாகத்தில் பார்க்கலாம் என்று கார்டு போடுகிறார்களாம். இது சரியாக வருமா? ஒரு கிளைமாக்சை எடுத்து கையில் வைத்துக் கொள்வோம். ஒருவேளை ரசிகர்கள் ஏற்கவில்லை என்றால் எடுத்து வைத்திருக்கும் கிளைமாக்சை இணைத்து விடலாமா? என்பதில் கமல் குழம்பி போய் இருப்பதாக சொல்கிறார்கள்.
மூன்றாவது காரணம். படத்தின் பட்ஜெட் எதிர்பார்த்ததை விட அதிகமாகிவிட்டது. ஆனால் அந்த அளவுக்கு படம் வியாபாரமாகவில்லை. அதனால் சொந்தமாகவே வெளியிட்டு விடலாமா? அல்லது லாபத்தை பார்க்காமல் விற்று விடலாமா என்பது குறித்தும் விவாதம் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த மூன்று காரணங்களில் எது உண்மை என்பது யாருக்கும் தெரியாது.
Subscribe to:
Posts (Atom)