
"பசங்க, வம்சம், மெரினா என, தன் படங்களுக்கு, சிக்கனமாக தலைப்பு வைத்துக் கொண்டிருந்த இயக்குனர் பாண்டிராஜ், தற்போது, "கேடி பில்லா கில்லாடி ரங்கா எனற நீளமான தலைப்பை தேர்ந்தெடுத்திருக்கிறார். இந்த படத்தில், கேடி பில்லாவாக விமலும், கில்லாடி ரங்காவாக சிவ கார்த்திகேயனும் நடிக்கின்றனர். இவர்களுக்கு ஜோடிகளாக, பிந்துமாதவி, ரெஜினா களம் இறங்கி உள்ளனர். "ரஜினியின் இரு படத் தலைப்புகளையும் ஒன்றாக்கி, டைட்டில் வச்சிருக்கீங்களே? என, இயக்குனர் பாண்டிராஜிடம் கேட்டால், "இப்பல்லாம், கலகலப்பான படங்கள் தான் ஹிட்டாகுது. இது ஒரு ஜாலியான படம். இதனால், இந்த தலைப்பு பொருத்தமாக இருக்கும் என, நம்புகிறேன். அதுவுமில்லாம, சுறுசுறுப்புக்கும், விறுவிறுப்புக்கும் பெயர் போன ரஜினி மீது, எனக்கொரு ஈர்ப்பு உள்ளது. அதனால், அவரோட படங்களின் தலைப்பை வைத்து, படம் பண்ணலாமேன்னு தான், இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தேன் என்கிறார்.
No comments:
Post a Comment