
"தாண்டவம் படத்தில் உளவுத்துறை அதிகாரி, கண்பார்வை இல்லாதவர் என, இரண்டு வேடங்களில் நடிக்கிறார், விக்ரம். இதில், அனுஷ்கா, எமிஜாக்சன், லட்சமிராய் என, மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். "ஏற்கனவே, "காசி படத்தில் கண் தெரியாதவராக நடிச்சுட்டீங்களே? தாண்டவம் படத்தில், என்ன வித்தியாசம் காட்றீங்க என, விக்ரமிடத்தில் கேட்டால், "காசிக்கும், தாண்டவத்துக்கும், அதிக வித்தியாசம் உள்ளது. "தாண்டவம்ல வரும் கண்பார்வை இல்லாத வேடத்துக்கு, அமெரிக்காவில் வாழும் டேனியல்கிஸ் என்பவரை, முன் மாதிரியாக எடுத்துக்கிட்டேன். அவர், எட்டு மாத குழந்தையா இருந்தபோதே, கண்பார்வை பறிபோயிடுச்சாம். ஆனால், அவரால் அந்த குறையே தெரியாமல், நன்றாக செயல்பட முடிகிறது. டேனியல்கிஸ், எனக்கு சில பயிற்சிகளை கற்றுத் தந்தார். இந்த படம், என்னோட நடிப்புக்கு சரியான தீனியா இருக்கும். அதே நேரத்துல, ஆக்ஷன் அசத்தலும் இருக்கும் என்றார்.
No comments:
Post a Comment