இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் ஞாயிற்றுகிழமை (ஆகஸ்ட் 26) நடைபெற்றது. பத்திரிகையாளர் சந்திப்பில் சசிகுமார் பேசியது :
"எனது படங்களை பார்க்க சிலர் பயப்படுகிறார்கள் என்ற செய்திகள் உலா வருகின்றன. 'சுந்தர பாண்டியன்' படத்தினை பார்க்க பயப்பட வேண்டாம். இப்படத்தில் அடிதடி இருக்கு. காதல் இருக்கு.. நட்பு இருக்கு. மத்த படத்துலயெல்லாம் கதாநாயகிகள்தான் என்னை காதலிப்பாங்க. இந்தப் படத்துல நான் காதலிக்கிறேன். ஏன் நான் காதலிக்க கூடாதா? என் படத்துல நட்பு இருக்கும். காதல் இருக்கும். ஆக்ஷன் எல்லாம் கரெக்ட்டா இருக்கும்ன்னு தெரிந்து பெண்களில் இருந்து ஆண்கள் வரைக்கும் வர்றாங்க. இந்தப் படத்துலயும் அதே மாதிரி எல்லாம் கலந்து இருக்கு.
எல்லா படத்திலும் தாடியுடன் தான் நடிக்கிறேன். தாடி எடுத்து நடிக்கணும்னு ஆசைதான். என் ஆசை, நான் இயக்கற படத்துல நிறைவேறும். நான் டைரக்ட் பண்ணுகிற படத்துல அப்படி கேரக்டர் அமைஞ்சிருக்கு. நான் டைரக்ஷன் செய்த 'சுப்பிரமணியபுரம்' படத்துல தாடியோட நடிச்சேன். அதுக்கு பிறகு 'நாடோடிகள்', 'போராளி', மலையாளப் படம், இந்தப் படம் என எல்லாத்துலயும் தாடியோட நடிச்சிட்டேன். அடுத்து இரண்டு புதுமுக இயக்குநர்கள் படங்களில் நடிக்கிறேன். அதிலும் தாடியோட நடிக்கிற மாதிரி முடிவாச்சு.
'சுந்தரபாண்டியன்' படத்தில் ரஜினி ரசிகரா வருவேன். அதனால பாடல் காட்சியில் அப்படி தெரிவேன். இது இயக்குநர் முடிவு செய்து டான்ஸ் மாஸ்டர் சொல்லிக் கொடுத்து நடித்தது. நானாக எதுவும் முடிவு செய்யவில்லை. செப்டம்பர் மாதம் இப்படம் திரைக்கு வரும்.
என் கம்பெனி மூலமாக குறைந்தது 10 இயக்குனர்களை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்துவேன் என்று கூறி இருந்தேன். அந்த வரிசையில 'பசங்க' பாண்டிராஜ், இப்போ பிரபாகரன் ஆகியோரை அறிமுகப்படுத்துறேன். அடுத்து இரண்டு புதுமுக இயக்குநர்கள் படங்களில் நடிக்கிறேன். அடுத்து நான் இயக்குவேன். அதற்கு பிறகும் புதுமுக இயக்குநர்களின் படங்களில் நடிப்பேன்.
எனது அனைத்து படங்களிலும் சமுத்திரக்கனி இருப்பார் என்று சொல்ல முடியாது. மலையாளத்தில் நான் நடித்த படத்தில் கூட ஒரு காட்சியில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் அவர் நடிக்கவில்லை என்றாலும் அவரது குரல் பேசி இருக்கிறது. இது நாங்களா பேசி எடுத்த முடிவுதான். அவர் இப்போது 'சாட்டை' படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
எங்களது அனைத்து பணிகளையும் முடித்து விட்டு மீண்டும் அவரது இயக்கத்தில் ஒரு படம் நடிக்க முடிவு செய்து இருக்கிறேன் "
No comments:
Post a Comment