'EK THA TIGER' படத்தின் இந்த சாதனையால் பல்வேறு மொழிகளின் தயாரிப்பாளர்கள் இப்படத்தின் ரீமேக் உரிமைக்கு போட்டி போட்டு வருகிறார்கள். தமிழ் ரீமேக் உரிமையை ஜெயம் கம்பெனி வாங்கி இருப்பதாகவும், விஜய் நடிக்க ஜெயம் ராஜா இப்படத்தினை ரீமேக் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இச்செய்தி குறித்து விசாரித்த போது " EK THA TIGER படத்தின் தமிழ் உரிமையை ஜெயம் கம்பெனி நிறுவனம் வாங்கவில்லை.
ஜெயம் ராஜா இயக்கத்தில், விஜய் நடிக்க இப்படம் உருவாக இருக்கிறது என்ற செய்தியிலும் உண்மையில்லை. ஜெயம் ராஜா தனது அடுத்த படத்திற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
ஜெயம் ராஜா இயக்கும் முதல் நேரடி தமிழ் படமாக இப்படம் அமையும். பல்வேறு முன்னணி நாயகர்களிடம் பேசி வருகிறோம். அது போலவே இந்தியில் 'ரமணா' ரீமேக்கையும் ஜெயம் ராஜா இயக்கவில்லை.
அடுத்த படத்தை இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு ஆரம்பத்தில் தொடங்குவார். ஏ.ஜி.எஸ்.நிறுவனம் இப்படத்தினை தயாரிக்க இருக்கிறது " என்று தெரிவித்தார்கள்
.
No comments:
Post a Comment