
அழகன் ஷாமை, அழுக்கனாக காட்ட போகிறது,"6என்ற திரைப்படம். படத்தின் தலைப்பை போலவே, கதையும் வித்தியாசமானது தான். அஜீத்தை குடும்ப நாயகனாக காட்டிய முகவரி, பரத்தை ஆக்ஷன் அவதாரம் எடுக்க வைத்த நேபாளி போன்ற படங்களை இயக்கிய, துரை கூறிய கதையை கேட்டு, சிலிர்த்துப் போன ஷாம், வேறு பட வாய்ப்புகளை தவிர்த்து, இதற்காகவே தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்து விட்டு, 20 கிலோ எடையை குறைத்திருக்கிறார். அழகனாக இருந்தவர், அழுக்கனாக மாறி, கண்களின் கீழ், இமைகளை வீங்க வைத்து, முகமெல்லாம் கோரமாக்கிக் கொண்டு நடிக்கிறார். "6 திரைப்படத்துக்காக, ஷாம் பட்ட கஷ்டங்கள் வீண் போகவில்லை. படம் பிரமாதமாக வந்திருப்பதாகவும், இன்னும் தடுமாற்றமான நிலையிலேயே இருக்கும் ஷாமிற்கு, அவரின் திறமையைக் காட்ட அருமையான சந்தர்ப்பம் எனவும், சினிமா வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
No comments:
Post a Comment