விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளியானது 'பீட்சா'. கார்த்திக் சுப்புராஜ் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கினார். உதயநிதி ஸ்டாலின் அப்படத்தினை வெளியிட்டார்.
'பீட்சா' படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதுமட்டுமன்றி திரையுலகினர் பலரும் அப்படத்தினை வெகுவாக பாராட்டினார்கள். அப்படத்தினை ஹாலிவுட்டில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 'பீட்சா' படத்தினைப் பார்த்த ரஜினி, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜை அழைத்து " 'பீட்சா' படம் பார்த்தேன். அருமையாக இருந்தது. படக்குழுவினருக்கும், தயாரிப்பாளருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவியுங்கள்" என்று தெரிவித்து இருக்கிறார்.
No comments:
Post a Comment