'மங்காத்தா'வில் அஜீத்துடன், அர்ஜுன், த்ரிஷா, ஆண்ட்ரியா, பிரேம்ஜி மற்றும் பலர் நடித்திருந்தனர். யுவன் இசையமைத்திருந்த இப்படம் வெளிவந்து பெரும் வரவேற்பு பெற்றது.
அப்படம் வெளிவந்து வரவேற்பு பெற்ற போது, இந்தி ரீமேக் குறித்து செய்திகள் வெளிவந்தன. வெங்கட்பிரபுவும் அஜீத் இந்தி ரீமேக்கில் அர்ஜுன் வேடத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தார்.
உடனே அஜீத் மங்காத்தா இந்தி ரீமேக்கில் நடிக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் வெங்கட்பிரபு இச்செய்தியினை மறுத்து இருக்கிறார். மங்காத்தா இந்தி ரீமேக்கில் அர்ஜுன் வேடத்தில் அஜீத் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தான் சொன்னேன்.. அது ஒரு ஐடியா மட்டுமே என்று டிவிட்டரில் தெரிவித்து இருக்கிறார்.
No comments:
Post a Comment