Sunday, 24 June 2012

இனி ரீமிக்ஸ் எடுபடாது! ஜி.வி.பிரகாஷ்


Remix will not bright in future says g.v.prakash

   இனியெல்லாம் ரீமிக்ஸ் தமிழ் சினிமாவில் எடுபடாது என்று இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ரீமிக்ஸ் செய்வதில் எனக்கு விருப்பமில்லை. இன்னொருவர் உருவாக்கிய பாடலில் நாம் அப்படியென்ன திறமையை காட்ட முடியும். மற்றவர்களை நான் தடுக்க முடியாது. ஆனால் ரீமிக்ஸ் செய்வதில் எந்த க்ரியேட்டிவிட்டியும் இல்லை என்பது என் கருத்து.

ஆயிரத்தில் ஒருவன் படத்தில், அதோ அந்த பறவை போல... பாடலை ரீமிக்ஸ் செய்தால் கதையை நகர்த்திச் செல்ல உதவியாக இருக்கும் என்று இயக்குநர் செல்வராகவன் சொன்னார். அதனால் அதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால் அதன் பிறகு நான் எந்தப் படத்திலும் ரீமிக்ஸ் செய்ய ஒத்துக்கொண்டதே இல்லை. இன்னொன்றையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன், இனிமேல் இங்கே ரீமிக்ஸ் எடுபடாது. அதேபோல தெய்வத்திருமகள் படத்தில் இரண்டு பாடல்களை இயக்குநரின் விருப்பத்தின் பேரில் அடாப்ட் செய்தேன். ஆனால் எனக்கான சுதந்திரத்தில் தலையிடாதபோது அதே படத்தில், ஒரிஜினலான இசையைக் கொடுத்திருக்கிறேன். எனது வெற்றி பெற்ற பல பாடல்களே இதற்கு சாட்சி, என்று கூறியுள்ளார்.

தனுஷை வாழ்த்திய நடிகர் சிம்பு.










     நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் விடயம் நடிகர்கள் சிம்பு மற்றும் தனுஷ் இருவருக்குமிடையேயான போட்டி. நீண்டகாலமாக இது குறித்து அரசல் புரசலாக பேசப்பட்டு வந்தாலும்,அண்மையில் நடிகர் தனுஷ் பாடி உலகம் முழுவதும் பிரபலமான கொலைவெறி பாடல் நடிகர் தனுஷை ஒரே இரவில் உலகப் பிரபலம் ஆக்கியது இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத நடிகர் சிம்பு இதே போல் ஒரு பாடல் மூலம் பிரபலமாக வேண்டும் என நினைத்து முழு முயற்சியில் ஈடுபட்டு, காதலுக்கான கீதம் என்ற ஒன்றை உருவாக்கினார்.இதன் மூலம் நடிகர் தனுஷுடன் நேரடியாக தன்னுடைய போட்டியை நிரூப்பித்திருந்தார் நடிகர் சிம்பு.

ஆனால் இது குறித்து நேரடியாக எதுவும் கூறாமல் மௌனம் சாதித்து வந்த இருவரும், அண்மையில் நடந்த தென்னிந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவில் இருவருக்கும் விருதுகள் வழங்கப்பட்டபோது ஒருவொருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டார்கள்.

இதிலும், நடிகர் சிம்பு ஒரு படி முன்னேறி, துபாயில் தானும் நடிகர் தனுஷும் நீண்ட நேரம் பொழுதை கழித்தது தனக்கு மறக்கமுடியாத அனுபவமாக இருந்ததாக கூறியிருந்தார்.

விஸ்வரூபம் தலைப்பை மாற்ற சொல்லி கமலுக்கு கோரிக்கை!


Trouble for kamals vishwaroopam title       விஸ்வரூபம் படத்தின் தலைப்பை மாற்ற சொல்லி நடிகர் கமல்ஹாசனுக்கு இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் நடித்து, இயக்கி, தயாரித்து இருக்கும் படம் விஸ்வரூபம். ஹாலிவுட் பாணியில் உருவாகி இருக்கும் இப்படத்தில் பூஜா குமார் மற்றும் ஆன்ட்ரியா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் கமல்ஹாசனுக்கு ஹாலிவுட் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. இதனால் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது. அதேசமயம் விஸ்வரூபம் படத்திற்கு ஒரு சிக்கலும் உண்டாகி இருக்கிறது. பொதுவாக கமல்ஹாசனின் படங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் எதிர்ப்பு கிளம்பும். விரும்பாண்டி தொடங்கி கடைசியாக வெளிவந்த மன்மதன் அம்பு வரைக்கும் இது தொடர்ந்தது. அது இப்போது விஸ்வரூபத்திலும் தொடர்கிறது.

இதுதொடர்பாக கமல்ஹாசனுக்கு இந்து மக்கள் கட்சி கண்ணன் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ் படம் மூலமே உங்களுக்கு பேரும் புகழும் கிடைத்தது. நீங்கள் தமிழகத்தில் வாழ்கிறீர்கள். அப்படி இருக்கையில் தமிழ் மொழியை கண்டுகொள்ளாதது ஏன்? விஸ்வரூபம் என்பது சமஸ்கிருத வார்த்தை. என‌வே அதைமாற்றி தமிழ் மொழியில் வைத்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். எங்களது எண்ணங்களை கமல் நிச்சயமாக புரிந்து கொள்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. தமிழ் மொழி மீதான அக்கறையால் இதை தெரிவிக்கிறோம் என்று கூறியுள்ளார்.

தல யின் பில்லா 2 ஜூலை 13 இல் ரிலீஸ்…! ஆகுமா? ஆகாதா?

    ‘தல’ அஜீத் குமாரின் பில்லா 2 படம் வரும் ஜூலை மாதம் 13ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.

அஜீத் குமார், பார்வதி ஓமனக்குட்டன், புரூனா அப்துல்லா ஆகியோர் நடித்துள்ள பில்லா 2 படம் சென்சாரினால் கொத்துபரோட்டா போடப்பட நிலையில், ஜூன் 22 வெளியாக இருந்த அதன் ரிலீஸ் திகதி ஜூன் 29 க்கு தள்ளிப்போடப்பட்டது.

ஆனால் தற்போது ஜூன் 29ம் தேதியும் படம் ரிலீஸ் இல்லையாம். மாறாக வரும் ஜூலை மாதம் 13ம் தேதி வெள்ளிக்கிழமையன்று படத்தை ரிலீஸ் செய்யப் போகிறார்களாம்.

ஜூலை 13லாவது ரிலீஸ் செய்துவிடுவார்களா என்று அஜீத் ரசிகர்கள் ஏக்கத்துடன் உள்ளனர்.

இதற்கிடையே விஷ்ணுவர்தனின் பெயரிடப்படாத பட ஷூட்டிங் பெங்களூரில் நடந்தது. இதில் அஜீத் குமார் கலந்து கொண்டார். இந்த செய்தி அறிந்த அவரது ரசிகர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் குவிந்துவிட்டார்களாம்.

ஹேப்பி நியூ இயரில் பெண் இயக்குனருடன் மீண்டும் இணையும் ஷாருக்கான்.




    எத்தனையோ பெண் டைரக்டர்கள் சினிமாவில் அறிமுகம் ஆனாலும், அவர்களில் ஒரு சிலரே ஜெயிக்கிறார்கள். அந்தவகையில் சினிமாவில் நடன அமைப்பாளராக தனது சினிமா பயணத்தை தொடங்கிய பாரா கான் பின்னர் டைரக்டர், தயாரிப்பாளர் என்று அவதரித்தார்.

இந்தி நடிகர் ஷாரூக்கை வைத்து மேஹூன் நா, ஓம் சாந்தி ஓம் என்று சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார். அதன் பிறகு இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ஷாருக்கை தவிர்த்து வேறு ஹீரோக்களை நாடினார் ஃபரா கான். இருவரும் இனி இணைய மாட்டார்கள் என்று ரசிகர்கள் ஏங்கி கொண்டிருந்த வேளையில் இப்போது மீண்டும் இணையவுள்ளனர். இப்படத்திற்கு ஹேப்பி நியூ இயர் என்று பெயரிட்டுள்ளனர். பாரா கான் டைரக்ட் செய்யும் இப்படத்தை, ஷாரூக்கே தயாரிக்கிறார்.

ஹேப்பி நியூ இயர் படத்தில் மொத்தம் ஐந்து ஹீரோக்களாம். இதில் ஒருவர் ஷாரூக் மற்றொருவர் பொம்மன் இரானி உறுதி செய்யப்பட்டுள்ளனர். மற்ற ஹீரோ, ஹீரோயின் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் எல்லாம் முடிவானவுடன் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. இந்தாண்டு இறுதியில் படம் தொடங்க இருக்கிறது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷாரூக்கும், பாராகானும் இணைய இருப்பதால் இப்படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது.

‘தமிழ்நாட்டில் நானும் பெரிய நடிகன்தான். இயக்குனரிடம் கோபம் கொண்ட தனுஷ்.


 நடிக்க அழைக்காமல் இயக்குனர் காக்க வைத்ததால் இந்தி படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியேறினார் தனுஷ். தமிழ், இந்தி, ஆங்கிலம் மொழிகளில் தனுஷ் நடிக்கும் படம் ‘மரியான்Õ. பரத்பாலா இயக்குகிறார். இதன் ஷூட்டிங் ஆப்ரிக்க நாடான நமீபியாவில் நடந்தது.
ஷூட்டிங்கில் கலந்துகொள்வதற்காக மேக்கப்புடன் செட்டுக்கு வந்தார் தனுஷ். ஆனால் மற்ற நடிகர்கள் நடித்த காட்சிகளை இயக்குனர் படமாக்கிக்கொண்டிருந்ததால் அமைதியாக காத்திருந்தார். தான் வந்திருப்பதை இயக்குனரிடம் தெரிவிக்குமாறு உதவியாளரிடம் சொல்லி அனுப்பினார். ஆனாலும் தனுஷை கண்டுகொள்ளாமல் மற்ற நடிகர்களின் காட்சிகளை படமாக்குவதில் பிஸியாக இருந்தார் இயக்குனர் பரத்பாலா. இதனால் தனுஷ் கோபம் அடைந்தார்.
ஏற்கனவே திட்டமிட்டபடி தனுஷ் நடிக்கும் காட்சிகளைத்தான் படமாக்குவதாக இருந்தது. ஆனால் பின்னர் அதை மாற்றிய இயக்குனர் வேறு நடிகர்களின் காட்சிகளை படமாக்க திட்டமிட்டார். இந்த மாற்றம் பற்றி தனுஷுக்கு தெரிவிக்காததால் அவர் டென்ஷனாக காணப்பட்டார். நீண்ட நேரம் காக்க வைத்ததால் அங்கிருந்தவரை அழைத்து, ‘இனிமேல் ஷூட்டிங்கில் மாற்றம் செய்தால் அதை எனக்கு தெரியப்படுத்துங்கள். மீண்டும் எப்போது எனது காட்சி படமாக்கப்படும் என்ற விவரத்தை இயக்குனரையே என்னிடம் தெரிவிக்கச் சொல்லுங்கள் என்று கூறிவிட்டு வெளியேறினார்.
இதையறிந்து பதற்றம் அடைந்த இயக்குனர் தனுஷை தொடர்பு கொண்டார். அவரிடம்பேசிய தனுஷ், ‘தமிழ்நாட்டில் நானும் பெரிய நடிகன்தான் என்று கோபத்துடன் கூறினார். இதனால் பட குழுவினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாடகை கட்ட முடியாமல் தவித்ததால் அலுவலக ஊழியர்களுக்கு வீடு வாங்கி தந்தார் பிரகாஷ்ராஜ்


 
   தனது அலுவலக ஊழியர்கள் 4 பேருக்கு வீடுவாங்கித் தந்துள்ளார் பிரகாஷ் ராஜ். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் பிசியாக நடித்து வரும் பிரகாஷ்ராஜ், இப்போது இந்தி சினிமாவிலும் பல படங்களில் நடிக்கிறார்.

கால்ஷீட் பிரச்னை, சரியான நேரத்துக்கு ஷூட்டிங்கிற்கு வராமல் போவது, ஒப்புக்கொண்ட படத்திலிருந்து திடீரென நடிக்காமல் விலகுவது என ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி அடிக்கடி செய்திகளில் அடிபடுபவர் பிரகாஷ்ராஜ். படத்தில் வில்லனாக நடித்து வரும் அவர் தனது அலுவலக ஊழியர்களுக்கு ஹீரோவாகியிருக்கிறார்.

சில வருடங்களுக்கு முன் ஐதராபாத்திலுள்ள தனது அலுவலக ஊழியர்கள் 2 பேருக்கு வீடு வாங்கித் தந்தார். இப்போது மீண்டும் தனது அலுவலகத்தை சேர்ந்த 4 ஊழியர்களுக்கு தலா ஒரு வீடு விதம், 2 பெட்ரூம், ஹால், கிச்சன் வசதியுடன் கூடிய 4 வீடுகளை ஐதராபாத்தில் வாங்கித் தந்துள்ளார்.

பிரகாஷ்ராஜ் கதை கேட்க, படங்களை தயாரிப்பது தொடர்பான வேலைகளில் ஈடுபட ஐதராபாத்தில் அலுவலகம் உள்ளது. இங்கு பல ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இதில் வீட்டு வாடகை செலுத்த முடியாமல் 4 பேர் தவித்தனர். இது பற்றி கேள்விப்பட்ட பிரகாஷ்ராஜ், உடனே ஐதராபாத்திலுள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் அவர்களுக்கு வீடுகள் வாங்கித் தந்துள்ளார்.