Sunday, 24 June 2012

இனி ரீமிக்ஸ் எடுபடாது! ஜி.வி.பிரகாஷ்


Remix will not bright in future says g.v.prakash

   இனியெல்லாம் ரீமிக்ஸ் தமிழ் சினிமாவில் எடுபடாது என்று இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ரீமிக்ஸ் செய்வதில் எனக்கு விருப்பமில்லை. இன்னொருவர் உருவாக்கிய பாடலில் நாம் அப்படியென்ன திறமையை காட்ட முடியும். மற்றவர்களை நான் தடுக்க முடியாது. ஆனால் ரீமிக்ஸ் செய்வதில் எந்த க்ரியேட்டிவிட்டியும் இல்லை என்பது என் கருத்து.

ஆயிரத்தில் ஒருவன் படத்தில், அதோ அந்த பறவை போல... பாடலை ரீமிக்ஸ் செய்தால் கதையை நகர்த்திச் செல்ல உதவியாக இருக்கும் என்று இயக்குநர் செல்வராகவன் சொன்னார். அதனால் அதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால் அதன் பிறகு நான் எந்தப் படத்திலும் ரீமிக்ஸ் செய்ய ஒத்துக்கொண்டதே இல்லை. இன்னொன்றையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன், இனிமேல் இங்கே ரீமிக்ஸ் எடுபடாது. அதேபோல தெய்வத்திருமகள் படத்தில் இரண்டு பாடல்களை இயக்குநரின் விருப்பத்தின் பேரில் அடாப்ட் செய்தேன். ஆனால் எனக்கான சுதந்திரத்தில் தலையிடாதபோது அதே படத்தில், ஒரிஜினலான இசையைக் கொடுத்திருக்கிறேன். எனது வெற்றி பெற்ற பல பாடல்களே இதற்கு சாட்சி, என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment