பில்லா 2 படத்தின் புதிய டிரெய்லர் நேற்று சென்சார் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் தற்போது 'THE AMAZING SPIDERMAN' படத்தினை 29ம் தேதி வெளியிட திட்டமிட்டு இருக்கிறார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். சென்னையை தவிர மீதமுள்ள இடங்கள் அனைத்திலுமே ஆஸ்கர் பிலிம்ஸ் வெளியீட்டில் தான் 'THE AMAZING SPIDERMAN' வெளிவருகிறது.
இந்நிலையில் பில்லா2 படம் அதிகமான பிரிண்டுகள் போட வேண்டியது இருப்பதால் அனைத்து ஏரியாக்களுக்கும் அனுப்ப படப்பெட்டி தயாராக நிறைய ஆட்கள் ஆகலாம். இதனை கருத்தில் கொண்டே இன்று காலை வந்த ஒரு சில பேப்பர்கள் தவிர மீதுமுள்ள அனைத்து பேப்பர்களிலும் பில்லா 2 விளம்பரம் வெளிவர வில்லை.
இது குறித்து ஆஸ்கர் பிலிம்ஸுக்கு நெருங்கிய தரப்பிடம் கேட்ட போது " பில்லா 2 படத்தின் தேதி முடிவு பண்ண இன்னும் ரெண்டு நாட்கள் ஆகும் " என்று கூறினார்கள்.
தற்போது உள்ள சூழ்நிலையில் ஜுன் மாதம் இறுதியா அல்லது ஜுலை மாதமா என்பது இன்னும் தொடர்கதையாகவே இருக்கிறது!
No comments:
Post a Comment