
மாயாஜாலமோ என்னவோ ஆள் ஆளுக்கு ஹாலிவுட் தொழில் நுட்பக்கலைஞர்களை தங்கள் படங்களுக்கு
பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்! தற்போது மிஷ்கின் இயக்கி வரும் முகமுடி படத்துக்கு நிஜ ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்களை வைத்து மார்ஷியல் ஆர்ட் சண்டைக்காட்சிகளை படம் பிடித்து வருகிறார். இவர்களில் எண்டர் தி டிராகன் படத்தில் புரூஸ்லீயுடன் சண்டை போட்டதோடு அந்தப் படம் உட்பட பல ஹாலிவுட் படங்களுக்கு குங்பூ சண்டைக்காட்சிகள் வடிவமைத்து புகழ்பெற்ற ‘டோனி லுங்’ ஒருவர்!
தற்போது எஸ்.டி.ஆருடன், அதாங்க சிம்புடன், சரத்குமாரின் மகள் வரலட்சுமி ஹீரோயினாக அறிமுகமாகும் படம் ‘போடா போடி படம், ஒரு பையன் மற்றும் பெண்ணின் மூன்று வாழ்க்கை நிலையைப் பற்றிய கதை என்பதால் இதன் படப்பிடிப்பை நீண்டநாளாக இழுத்துக் கொண்டிருகிறார்கள். படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் லண்டனில் நடந்து வருகிறது. விக்னேஷ் சிவா இயக்கும் இந்தப்படத்துக்கு பிரபல ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் டுன்சன் டெல்போர்ட் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
No comments:
Post a Comment