சமீபத்தில் மருத்துவதுறையில் உள்ள முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார் அமீர்கான். கடந்த மே மாதம் 27ம் தேதி ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் நோயாளிகளிடம் இருந்து பணம் பறிக்க மருத்துவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று மருத்துவத் துறையில் உள்ள முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். இந்த நிகழ்சசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதற்கு இந்திய மருத்துவக் கழகம், ஆமீர் கான் தங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறியது. ஆனால் அவர் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.
இந்நிலையில் மருத்துவதுறை முறைகேடு குறித்து ராஜ்யசபாவில் பேச, பா.ஜ.க., எம்.பி., சாந்த குமார் அமீர்கானுக்கு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்றுக்கொண்ட அமீர்கான், வருகிற 21ம் தேதி ராஜ்சபாவில் பேச இருக்கிறார். அமீருடன் சத்தியமேவ ஜெயதே குழுவினரும் செல்ல இருக்கின்றனர்.
No comments:
Post a Comment