சென்னை வெயிலின் வெப்பத்தை காட்டிலும், கோடம்பாக்கத்தில் இப்போது சூடாக ஓடிக்கொண்டு இருக்கும் ஒரு ஹாட் டாப்பிக் இது தான் என்கிறார்கள். அப்படியென்ன ஹாட் டாப்பிக் என்கிறீர்களா...? அது ஒரு நடிகருக்கும், நடிகைக்கும் உண்டான காதல் தான். நாட்டாமை நடிகரின் மூத்த மகளுக்கும், திமிரு நடிகருக்கும் இடையே ரொம்ப நாளாக லவ்வோ லவ்வாம்.
இதுநாள் வரை ரகசியமாக இருந்த வந்த இவர்களது காதல் சமீபத்தில் எல்லா மீடியாக்களிலும் பரவலாக வெளிவர ஆரம்பித்து இருக்கிறது. இந்த செய்தி எப்படியோ நாட்டாமை காதுகளுக்கு எட்ட மனுஷன் ரொம்பவே அப்செட்டாகி இருக்கிறாராம். மகளையும் கண்டிக்க முடியாமல், அந்த நடிகரையும் கண்டிக்க முடியாமல் தவித்து வருகிறாராம் நாட்டாமை.
ஏற்கனவே படத்தயாரிப்பு தொடர்பாக அந்த நடிகருக்கும், நாட்டாமை நடிகரின் 2வது மனைவிக்கும் பஞ்சாயத்து வேறு இருப்பதால், மகளுடன் நட்பு பாராட்டுவது போல தன்னை பழிவாங்க அந்த நடிகர் திட்டமிட்டு இருப்பதாக நாட்டாமை நடிகர் சந்தேகபடுவதாகவும் தெரிகிறது.
இதில் எது உண்மை, எது பொய் என்பது நாட்டாமைக்கே வெளிச்சம்...!

No comments:
Post a Comment