Tuesday, 19 June 2012

ரஜினிகாந்த் பாடலுக்கு ஜப்பானிய ரசிகர்கள் தியேட்டரில் நடனம்.




சூப்பர் ஸ்டார் ரஜினி காந்திற்கு தமிழகம் மட்டுமின்றி ஜப்பானிலும் ரசிகர்கள் உள்ளனர். ரஜினி நடித்த 'முத்து' படத்தை ஜப்பான் மொழியில் முதன் முதலாக டப்பிங் செய்து அங்கு திரையிட்டனர்.
  'முத்து' படம் அங்கே பலத்த வரவேற்பை பெற்றதையடுத்து அடுத்து, ரஜினிக்கென்று ஜப்பானிய ரசிகர்கள் வட்டம் உருவானது.
   இந்நிலையில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் இணைந்து நடித்த 'எந்திரன்' திரைப்படம் ஜப்பானிய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு, கடந்த 4 வாரங்களுக்கு முன்பு ரிலீஸானது.
 அன்று முதல் இன்று வரை 'எந்திரன்' படம் அங்கே பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடித்திருப்பதாகவும், ஜப்பானிய ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  'இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ' பாடலுக்கு ஜப்பானிய ரசிகர்கள் தியேட்டரிலேயே நடனமாடி தங்களை மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்களாம்

No comments:

Post a Comment