Tuesday, 19 June 2012

ஒரு கோடியை கழிச்சிட்டு மீதியை கொடுங்க..தயாரிப்பாளருக்கு அதிர்ச்சி கொடுத்த பிரகாஷ்ராஜ்.


     லாட்டரி சீட்டில் கடைசி நம்பர் மாறியிருப்பதை போன்ற துரதிருஷ்டம்தான் முன்னணி ஹீரோக்கள் டப்பிங் பேச வராமல் அடம் பிடிப்பதும். சம்பளத்தை செட்டில் பண்ணுங்க, டப்பிங் பேச வர்றேன் என்பதுதான் பெரும்பாலான ஹீரோக்களின் கடைசி ஆயுதமாக இருக்கும். ஆனால் பில்லா-2 படத்திற்கு டப்பிங் பேச வராமல் அஜீத் அடம் பிடித்ததற்கு அது காரணமல்ல என்கிறார்கள். ஏனென்றால் சம்பள விஷயத்தில் எவ்வித குறையும் வைக்கவில்லையாம் அவருக்கு. அப்படின்னா?

ஒரு குறிப்பிட்ட தியேட்டரில் நடந்து கொண்டிருந்தது டப்பிங் பணிகள். அஜீத்தை தவிர மற்ற எல்லா நடிகர் நடிகைகளும் அங்கு வந்துதான் டப்பிங் பேசினார்களாம். இவர் மட்டும், எனக்கு அந்த தியேட்டர் பிடிக்கல. வேற இடம் அரேஞ்ச் பண்ண முடியுமா என்றாராம். வேறு வழியில்லாமல் இடத்தை மாற்றிய பின்பு அவரை பேச வைத்தார்களாம். இவர் கதை இப்படியென்றால், சகுனியில் பிரகாஷ்ராஜ் பண்ணிய கலாட்டா கொடூரம்.
சகுனி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவிடம் ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தாராம் பிரகாஷ்ராஜ். சகுனியில் ஏற்கனவே நடித்திருந்த வில்லன் நடிகர் ஒருவரின் போர்ஷன்களை நீக்கிவிட்டு அதில் பிரகாஷ்ராஜை நடிக்க வைத்த நினைத்தபோது சம்பளத்தை பற்றியும் யோசனை வந்ததாம். நமக்குதான் அவர் ஒரு கோடி தரணுமே, அதில் கழித்துக் கொள்ளலாம் என்று சம்பளமே பேசாமல் பிரகாஷை அழைத்தாராம் ஞானவேல்.
எல்லாம் சுபமாக முடிந்தது. டப்பிங் பேச அழைத்தபோதுதான் தடுமாற்றம். சம்பளத்தை கொடுங்க, வர்றேன் என்றாராம் பி.ரா. தரவேண்டிய ஒரு கோடியில் உங்க சம்பளத்தை குறைச்சுகிட்டு மீதியை கொடுங்க என்றாராம் ஞானவேல். ஒரு கோடியை கழிச்சிகிட்டுதான் கேட்கிறேன், இன்னும் ஐம்பது லட்சம் கொடுங்க என்றாராம் அவர். ஆடிப்போன ஞானவேல்ராஜா, ஊரை கூட்டி பஞ்சாயத்து வைக்காத குறை என்கிறார்கள்.

No comments:

Post a Comment