தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் எனப்படும் பெப்சியில் 23 சங்கங்களை சேர்ந்த சுமார் 25 ஆயிரம் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்புக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கிறது. அதன்படி 2012-14ம் ஆண்டுக்கான தேர்தல் சென்னை வடபழனியில் உள்ள பெப்சி அமைப்பில் இன்று நடக்கிறது.
காலை 9மணிக்கு முதல் மாலை 5மணி வரை ஓட்டுபதிவு நடக்கிறது. தலைவர் பதவிக்கு விசு, அமீர் ஆகிய இருவரும், பொதுச்செயலாளர் பதவிக்கு ஜி.சிவா, உமாசங்கர் பாபு ஆகிய இருவரும் போட்டியிடுகிறார்கள். பொருளாளர் பதவிக்கு அங்கமுத்து சண்முகம் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தேர்தல் முடிந்து ஓட்டுகள் அனைத்து இன்றே எண்ணப்பட்டு இரவுக்குள் முடிவு அறிவிக்கப்பட இருக்கிறது.
No comments:
Post a Comment