Tuesday, 19 June 2012

பணம் வாங்கி கொண்டு நடனம் ஆடினேனா? தமன்னா ஆவேசம்!

I am not getting money while dance in ramcharan wedding says tamanna   சமீபத்தில் ஐதராபாத்தில் தெலுங்கு நடிகர் ராம்சரண் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் ஹைலைட் ஆன விஷயம் நடிகை தமன்னா ஆடிய நடனம் தான்.அவருடன் சேர்ந்து ஸ்ரேயாவும் நடனம் ஆடினார். இதற்காக இருவருக்கும் பெரிய தொகை கொடுக்கப்பட்டதாக உடனே தகவல் வெளியானது. அத்துடன் பணம் வாங்கிய பிறகே தமன்னா மேடையில் ஆட வந்தார் என்றும் கூறப்பட்டது. இதுபோல் முக்கிய பிரமுகர்களின் திருமணங்களில் ஆடுவதற்காக மானேஜர் மூலம் பண பேரம் பேசி வருவதாகவும் தகவல்கள் வெளி வந்துள்ளன.

இதுகுறித்து தமன்னா விடம் கேட்டபோது அவர் கூறியுள்ளதாவது, ராம்சரண் எனக்கு நெருங்கிய நண்பர். எனவேதான் அவரது திருமணத்தில் ஆடினேன். அதற்காக பணம் எதுவும் வாங்கவில்லை. நான் அது மாதிரி பெண் இல்லை. எங்கள் வீட்டில் இதுபோல் மங்கள நிகழச்சி நடந்தால் நான் ஆடி இருப்பேன். அதே உணர்வில்தான் ராம்சரண் திருமணத்தில் ஆடினேன். பணத்துக்காக ஆடினேன் என்று வதந்திகள் பரப்புவது என்னை கேவலப்படுத்தும் செயல் ஆகும் என்றார்.

No comments:

Post a Comment