இப்போதெல்லாம் ஏதேனும் புதுபுது கதை களங்களோடு வந்தால் தான் படங்கள் மக்களிடம் பேசப்படும் என்பதை பல இயக்குநர்களும் தெளிவாக தெரிந்து வைத்துள்ளனர். சமீபத்தில் மூணாறு பகுதியில் பிணம் தூக்கம் வாலிபரின் கதையை பதிவு செய்து ரசிகர்களிடம் சபாஷ் வாங்கிய இயக்குநர் சத்யா, இந்த படத்திற்கு பிறகு அடுத்து கையில் எடுத்திருப்பது கட்டிட வேலை செய்யும் வாலிபரின் கதை.
இதுகுறித்து சத்யா நம்மிடம் பேசும்போது, எப்போதும் சினிமாவில் முதல்படம் ஒரு இயக்குநருக்கு முகவரியாக அடையாளமாக இருக்கும். அதுக்கு அடுத்து வெளிவரும் படம்தான் இயக்குநரை நிற்க செய்யும் படமாக அமையும். அந்த வகையில் இப்போது நான் எடுத்திருக்கும் இந்த கதை, ராமேஸ்வரம் பின்னணியில் கட்டிட வேலை செய்யும் வாலிபரின் உண்மை சம்பவத்தை சொல்ல உள்ளேன். கொஞ்சம் வலியும் இருக்கும், புது சப்ஜெக்ட்டாகவும் இருக்கும். விரைவில் ஷூட்டிங் தொடங்கவுள்ளது. என் படத்திற்கான கதைக்கு அதர்வா அல்லது ரேணிகுண்டா ஜானி நடிக்கலாம். ஒரு சில நாட்களில் யார் என்று உறுதி செய்யப்படும், மற்ற நட்சத்திர தேர்வு நடந்து வருகிறது என்று சொல்லும் சத்யா, முந்தைய படத்தில் இருந்து முழுவதும் மாறுபட்டு ஒரு படைப்பை தரவே ஆசைப்படுகிறாராம்!
No comments:
Post a Comment