ஈரம், பாஸ் என்கிற பாஸ்கரன், யுத்தம் செய் போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த லட்சுமி ராமகிருஷ்ணன், இயக்குநராக அவதரித்து இருக்கும் படம் ஆரகோணம். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதன்பிறகு நமக்கு அளித்த பேட்டி இதோ, நான் எந்த ஒரு இயக்குநரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றவில்லை. ஆனால் நான் பணிபுரிந்த படங்கள், அதன்மூலம் எனக்கு கிடைத்த அனுபவம் பேர் உதவியாக இருந்தது. படத்தின் தொடக்கத்தின்போது கொஞ்சம் பயந்தேன், நம்மால் செய்ய முடியுமா என்று தோன்றியது. ஆனால் படம் துவங்கியதும் கொஞ்சம் நம்பிக்கை வந்தது. இந்த கதை உலகளாவிய கதை. ஒவ்வொரு பெண்களும் சந்தித்த கதை, இப்படம் நிச்சயம் எல்லோரையும் பாதிக்கும். இந்த கதையை சரிதாவின் தங்கை விஜி தோளில் சுமந்து நடித்துள்ளார். படம் கண்டிப்பாக எல்லோருக்கும் ஒரு பாடம் சொல்லும் விதமாக இருக்கும். மேலும் இப்போது நான் இரண்டு கதை தயார் செய்து வைத்துள்ளேன். விரைவில் அடுத்தப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றார்.
No comments:
Post a Comment