தற்போது மீண்டும் இக்கூட்டணி இணைய இருக்கிறார்கள். படத்திற்கு துப்பறியும் ஆனந்தன் என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.இப்படத்தினை கவுதம் மேனனின் போட்டோன் கதாஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
முழுக்க முழுக்க ஜேம்ஸ்பாண்ட் பாணியில் அமையும் ஆக்ஷன் படம் இது. விஜய்யை வைத்து கவுதம் மேனன் இயக்கும் யோஹன் முடிந்ததும், இப்படம் தொடங்குகிறது.
இப்படம் குறித்து சூர்யா கூறுகையில், "நானும் கவுதம் மேனனும் இணைந்தாலே ரொமான்ஸ், நல்ல பாடல்கள், அதிரடி ஆக்ஷன் என மக்களிடம் எதிர்ப்பார்ப்பு கூடிவிடுகிறது. 'துப்பறியும் ஆனந்தன்' படத்தில் இவை அனைத்தும், அதற்கு மேலும் பல சுவாரஸ்யங்களும் இருக்கும். இதுவரை தமிழ் திரையுலகில் பார்க்காத வித்தியாசமான ஸ்டைலில் இருக்கும்," என்றார்.
கவுதம் மேனன் கூறுகையில், "துப்பறியும் ஆனந்தன் படத்தில் சூர்யா என்னுடன் இணைவதில் பெரிய மகிழ்ச்சி. ரொம்ப ஸ்டைலான ஆக்ஷன் படம் இது. 2013 துவக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும்" என்றார்.
ஏற்கனவே அஜீத்தை வைத்து திட்டமிட்ட படம் தான் 'துப்பறியும் ஆனந்தன்'. அஜீத் விலகிவிட்டதால் தற்போது சூர்யா - கெளதம் இணைய இப்படம் தயாராகிறது.
அஜீத் ஒப்பந்தமாகி, பின்னர் ஏதோ காரணங்களால் அவர் வெளியேறி, அந்த வேடத்தில் மற்ற நாயகர்கள் நடித்த எல்லா படங்களும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன.
No comments:
Post a Comment