இந்நிலையில், ஷங்கர் தன் சொந்த பட நிறுவனம் மூலம், எஸ். பிக்சர்ஸ் சார்பில் காதல், கல்லூரி, இம்சை அரசன் 23ம் புலிகேசி, ரெட்டைச்சுழி உள்ளிட்ட படங்களை எடுத்தார். அதில் சில படங்கள் தோல்வியை சந்தித்தால் கொஞ்சம் காலம் பட தயாரிப்பை நிறுத்தி இருந்தார்.
இந்நிலையில் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை சிம்புதேவன் இயக்குவதாகவும், அதில் ஹீரோவாக வடிவேலுவே நடிப்பார் என்றும், அதை ஷங்கரே தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வந்தன. அதுஇப்போது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. சமீபத்தில் டைரக்டர் சிம்புதேவன் திருமண விழாவில் கலந்து கொண்ட டைரக்டர் ஷங்கர், அங்கு வந்த சினிமா பிரபலங்களோடு மனம்விட்டு பேசியிருக்கிறார். பின்னர் சிம்புதேவனுடன் நீண்ட நேரம் அமர்ந்து பேசியுள்ளார் ஷங்கர். சிம்புதேவன் தனது உதவியாளர் என்பதால் கூடுதல் அக்கறை எடுத்து கொண்ட ஷங்கர் தயாரிப்பு பொறுப்பை ஏற்க ஓ.கே., சொன்னதும், இயக்குநர் சிம்புதேவன் கல்யாண மகிழ்ச்சியோடு மதுரையிலேயே கதை விவாதத்தில் உட்கார்ந்து விட்டாராம்.
இவை எல்லாவற்றையும் பார்க்கும்போது, கண்டிப்பாக ஷங்கர் வடிவேலுவுக்கு வாய்ப்பு கொடுப்பார் என தெரிகிறது. என்ன ஷங்கர் சார் கொடுப்பீர்கள் தானே...?!
No comments:
Post a Comment