Tuesday, 19 June 2012

ஏ.ஆர்.ரஹ்மானை அசிங்கப்படுத்தும் கெளதம் மேனன்?


  சம்பள விஷயத்தில் கவுதம் மேனன் 'கவுரவ' மேனன் இல்லை என்பதை ஹாரிஸ்ஜெயராஜை கேட்டால் புரியும்படி விளக்குவார். ஏன் பிரிந்தார்கள் இருவரும் என்பதற்கு காரணம் தேடி அலைந்த புண்ணியவான்களுக்கு சம்பள இழுபறியே காரணம் என்பதை அப்போதே அரசல்புரசலாக வெளிப்படுத்தியிருந்தது மீடியா.
 இனியும் தொடராது கூட்டணி என்ற பிறகுதான் ரஹ்மான் கூடாரத்தில் தஞ்சமடைந்தார் கவுதம். பிரச்சனை அங்கேயும் எழ, 'புகழ் அல்லாவுக்கு. புது மெட்டுகள் கவுதமுக்கு இல்லை' என்ற ஸ்டிராங்கான முடிவை எடுத்தார் ரஹ்மான்.
  அதன்பிறகுதான் இசைஞானியின் கதவை தட்டியது கவுதமின் கரங்கள். 'இதுவரைக்கும் ராஜா சார் இப்படி ஒரு ஸ்டைலை பின் பற்றியதில்லை. இசையை பொருத்தவரை இது இளையராஜா ஜானர்' என்று விண்ணார புகழ்ந்த கவுதம், சோனி இசை நிறுவனத்திடம் பெரும் தொகைக்கு விற்றிருக்கிறார் மியூசிக் ரைட்சை.
   நடந்தவை அத்தனையும் நன்மையாகவே இருக்கும்போது கவுதமால் கிளப்பிவிடப்படும் ஒரே ஒரு செய்தியை மட்டும் ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறார்கள் ரஹ்மான் ரசிகர்கள். இந்த ஆடியோ ரைட்ஸ் விண்ணை தாண்டி வருவாயா படத்தின் மியூசிக் ரைட்ஸ் தொகையை விட அதிகமானது என்கிறார்களே, அதைதான் ஜீரணிக்க முடியவில்லையாம் அவர்களால். ஏன் இப்படி இன்னொரு படத்துடன் ரஹ்மான் படத்தை ஒப்பிட்டு பழியை கிளப்ப வேண்டும் என்கிறார்கள்.

No comments:

Post a Comment