DREAM WARRIORS தயாரித்த இப்படத்தினை வேந்தர் பிலிம்ஸ் வெளியிடுகிறது. இப்படத்தினை சுமார் 23 கோடி கொட்டிக் கொடுத்து வாங்கியிருக்கிறார்களாம். அதுமட்டுமன்றி தியேட்டர் அதிபர்கள் 'சகுனி' படத்திற்கு MINIMUM GUARANTEE ஆக பெருந்தொகையை செலுத்தி இருக்கிறார்கள்.
'சகுனி' படத்தின் கர்நாடகா மற்றும் கேரளா உரிமையையும் நல்ல விலைக்கு கொடுத்து இருக்கிறார்கள். ஆந்திராவில் 'சகுனி' நேரடி தெலுங்கு படத்தினைப் போல பரபரப்புடன் வெளியிடப்படுகிறது.
கார்த்தி - சந்தானம் இணைந்து இருப்பது, 'சிறுத்தை'க்குப் பிறகு ஒன்றரை வருடங்கள் கழித்து கார்த்தியின் படம் வெளியாவது, பல பெரிய நட்சத்திரங்கள் நடித்திருப்பது என படத்திற்கு எதிர்ப்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது. ஆகையால் 'சகுனி' படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் இருப்பது உறுதியாகி இருக்கிறது,
ரிலீஸில் 'பில்லா 2' பின்வாங்கியதும் இப்போது 'சகுனி'க்கு சாதகமாக அமைந்திருக்கிறது.
No comments:
Post a Comment