தெலுங்குப் படவுலகின் முன்னணி மற்றும் பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜ்மெளலி இயக்கியுள்ள நான் ஈ படத்திற்கு யு/ஏ சான்று கிடைத்திருக்கிறது. கதைக்கு தேவை என்பதால் புகைப்பிடிக்கும் காட்சி இடம்பெறுவதால் இந்த சான்று கிடைத்துள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளிவர உள்ளது. ஹீரோவாக வெப்பம் படத்தின் கதாநாயர்களில் ஒருவராக நடித்த நானி நடிக்கிறார் . கதாநாயகியாக நடிக்கிறார் சமந்தா. நகைச்சுவை நடிகராக சந்தானம் நடிக்கிறார். கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தில் ஈ யை இந்தப் படத்தில் பிரமாண்டமாக உருவாக்கியிருக்கிறார்கள். இந்த நான் ஈ நிச்சயம் ரசிகர்களை வியக்க வைக்கும் என்கிறார் படத்தின் இயக்குநர். படத்தின் சூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கான வேலைகள் நடந்து வந்த நிலையில், படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பியுள்ளனர். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் யு/ஏ சான்று அளித்துள்ளனர். படத்தில் இருந்து எந்த காட்சிகளையும் தணிக்கை குழுவினர் கட் செய்யவில்லையாம். தணிக்கை சான்று கிடைத்துவிட்டதால் ஜூலை 6ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளிவரும் இப்படம் உலகம் முழுக்க 1000 தரையரங்குகளில் வெளியாகிறது.
No comments:
Post a Comment