தமிழ் சினிமா குறித்து அவர் கூறுகையில், எனக்கு தமிழ் சினிமா மீது எந்த கோபமும் இல்லை. ஆனால் நான் இந்த அளவு பெரிய நடிகை ஆன பிறகும், என்னிடம் கதை சொல்ல வருபவர்கள் ரொம்ப சில்லியான ஸ்கிரிப்டுகளோடுதான் வருகிறார்கள். அல்லது நான் ஏற்கெனவே நடித்த பாத்திரங்களை ரிபீட் செய்வது போல கதைகளோடு வருகிறார்கள். அதனால்தான் தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை, என்று கூறியிருக்கிறார்.
பெரிய படங்களில் ஐட்டம் நம்பர் வந்தால் ஒப்புக் கொள்வீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்கும் அசின், எனக்கு பிடிக்காத வார்த்தை ஐட்டம்தான். இந்தி என்றல்ல, எந்த மொழியிலும் ஐட்டமாக நடிக்க எனக்கு பிடிக்காது, என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment