Sunday, 24 June 2012

ஐஸ்வர்யாவின் அடுத்தப்படம்? திரளும் மழலைப்பட்டாளம்


Aishwarya     விநியோகஸ்தர்களை பொறுத்தவரை கொடூர சிந்தாமணிதான் ஐஸ்வர்யா. ஆனால்அவர் இயக்கிய 3 திரைப்படம், விளைச்சல்தான் பழுது, விதை பழுதில்லை என்கிற ரகம். அதன்பின் தனுஷுக்கும் இவருக்குமே கூட பிரச்சனை என்று புகைச்சல் கிளப்புகிறது கோடம்பாக்கம்.

பீட்சா பைக்கும் ஆம்புலன்ஸ் வேனும் மெதுவா போனதா சரித்திரமே இல்லை. அப்படிதான் ஐஸ்வர்யாவின் ஆசைகளுக்கும் அணை போட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது அவரது குடும்பம். இதோ- மீண்டும் தனது கொள்ளாத ஆசையுடன் களத்தில் குதிக்கப்போகிறார் ஐஸ்வர்யா.

விரைவில் ஒரு படத்தை இயக்கப் போகிறாராம். இப்படத்தில் யார் ஹீரோ? யார் ஹீரோயின்? என்று தெரிந்துகொள்ள ஆசை ஊறுகிறதல்லவா? சத்தியமாக தனுஷ் இல்லை. குழந்தைகளுக்கான படத்தைதான் எடுக்கப் போகிறார் ஐஸ். எனவே ஏகப்பட்ட மழலை பட்டாளங்களை கூட்டி வரச்செய்து நடிப்பு பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கிறாராம்.

படத்தை பற்றிய அறிவிப்பு வரும். தயாரிப்பாளர் என்கிற இடத்தில் மாமனார் இருக்கப்போவதில்லை. அங்கும் ஐஸ்வர்யாவின் பெயரேதான் இருக்கும் என்பதுதான் சுவாரஸ்யமான இன்னொரு தகவல்.

No comments:

Post a Comment