அப்படி என்ன தான் கதையாம்? "பல பேரின் சுயநலத்தினால் ஒருவன் பாதிக்கப்படுகிறான். அதிலிருந்து அவன் எப்படி மீண்டு வருகிறான், மீண்டு வந்தவன் அவர்களை எப்படி பழி வாங்குகிறான் என்பதுதான் கதை. இது வெறும் கோபம் பழிவாங்கும் உணர்வுகளை மட்டும் வெளிப்படத்தும் படமல்ல. பல உணர்ச்சிகரமான விஷயங்களையும் உள்ளடக்கிய படமாக இருக்கும்" என்கிறார் இயக்குநர் விஜய்.
"விக்ரம் தேசிய அளவில் சிறந்த நடிகர். அவரை வைத்து இயக்குவது பலருக்கும் ஒரு கனவாகும் 'தெய்வதிருமகள்' மூலம் அக்கனவு எனக்கு நிஜமானது. அந்தப்பட அனுபவத்தில் எங்களுக்குள் நல்ல புரிதல் வந்தது. அந்தப் படம் எங்கள் எல்லோருக்கும் மரியாதையை தேடித்தந்தது. மீண்டும் இணைய விரும்பினோம். அதுதான் ‘தாண்டவம்’. தெய்வத்திருமகளைத் தாண்டி இப்படம் சிறப்பாக வர வேண்டும் என்று உழைத்து வருகிறோம்." என்கிறார்.
'தெய்வதிருமகள்' போலவே இதிலும் இரண்டு நாயகிகள். ஒருவர் ஆந்திரத்து அல்வா அனுஷ்கா. இன்னொருவர் வெளிநாட்டு ஸ்ட்ராபெரி எமி ஜாக்சன். இந்த இரண்டு நாயகிகளும் சத்திவாய்ந்த அழுத்தமான பாத்திரம் ஏற்றிருக்கிறார்கள்
கதையின் 70 % வெளிநாட்டில் பயணிக்கிறது, 30% இந்தியாவில் நிகழும். லண்டனில் தொடர்ச்சியாக 70 நாட்கள் படப்பிடிப்பு நடத்திவிட்டு வந்து இருக்கிறார்கள். குறிப்பாக சண்டை காட்சிகளை நிறைய சிரமப்பட்டு எடுத்து இருக்கிறார்கள். லண்டன் டவர் பிரிட்ஜ் பாலத்தில் எடுக்கப்பட்டுள்ள துரத்தல் மற்றும் சண்டை காட்சிகள் சிலிர்க்கவைக்கும் சினிமா அனுபவமாக இருக்கும். லண்டன் தொடர்புடைய காட்சிகளில் அங்குள்ள பல நடிகர் நடிகைகளை நடிக்க வைத்துள்ளனர். சண்டை காட்சிகளில் அந்த நாட்டு சண்டைக் கலை நிபுணர்களை பங்கேற்க வைத்து காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment